எப்படி வந்தது பேச்சுலர் பார்ட்டி?

29 April 2010 ·



பேச்சுலர் பார்ட்டி இல்லாமல் திருமணமா?

இந்தியாவில் மணப்பெண் தோழி, மாப்பிள்ளைத் தோழன் இருப்பதுபோல, மேற்கத்திய நாடுகளில் மணமக்களின் தோழர்கள் இருப்பார்கள். மணப்பெண்தோழி களுக்கு 'பிரைட்ஸ்மெயிட்' என்று பெயர். அதில் முதன்மையான தோழியை 'மெயிட் ஆஃப் ஹானர்' என்று அழைப்பார்கள். மணமகன் தோழர்களை 'க்ரூம்ஸ் மென்' என்றும், அவர் களில் முதன்மையானவருக்கு 'பெஸ்ட் மேன்' என்றும் பெயர்.

பொக்கேவைக் கையில் வைத்துக்கொண்டு மணமகளின் அருகில் பல்லைக் காட்டி பளிச்சென்று சிரிப்பதுதான் பிரைட்ஸ் மெயிட்களின் வேலை. ஆனால், மெயிட் ஆஃப் ஹானராக இருக்கும் பெண்ணுக்கு ஏகப்பட்ட கடமைகள் இருக்கின்றன. மாப் பிள்ளை நிச்சயிக்கப்பட்டதும், தன்னுடைய மெயிட் ஆஃப் ஹானரைத் தேர்ந்தெடுத்து விடுவாள் மணப்பெண். எந்த ஹால், எவ்வளவு பேர், என்ன பட்ஜெட், எந்த டிரெஸ் எனத் திருமணத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் தீர்மானிப்பதில் உதவி செய்வார் அவர்.

நண்பர்கள், உறவினர்களை வரவழைத்து 'பேச்சுலர் பார்ட்டி'யை நடத்துவது மெயிட் ஆஃப் ஹானரின் முக்கியமான வேலை. எதற்கு மணமகள் பேச்சுலர் பார்ட்டி கொடுக்க வேண்டும்?

அந்தக் காலத்தில் மாப்பிள்ளை வீட்டில் கேட்கும் வரதட்சணையைக் கொடுக்க முடியாத பெண் வீட்டார் இப்படி பேச்சுலர் பார்ட்டியை நடத்தினார்கள். விருந்துக்கு வருபவர்கள் மணப்பெண்ணுக்குத் தாங்கள் விரும்பும் பரிசுகளை முன்கூட்டியே கொடுத்துவிடுவார்கள். இதைவைத்து வரதட்ச¬ணையைச் சமாளித்துவிடுவார்கள் பெண் வீட்டார்கள்.

இப்படி ஒரு நல்ல காரணத்துக்காக ஆரம்பித்ததாம் பேச்சுலர் பார்ட்டி. இன்று... 'என்னது, மாப்பிள்ளை தாலி கட்டிட்டானா?' என்று மறுநாள் காலையில் லாட்ஜில் கண்களைக் கசக்கியபடி கேள்வி கேட் கிறார்கள் நம்ம ஊர் 'க்ரூம்ஸ் மென்' பங்காளிகள்!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites