நடிகைகளிடம் என்ன எதிர்பார்க்கிறீங்க..?

19 April 2010 ·

* இப்போது இரண்டும் கெட்டான் கட்சியாக இருக்கிற எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ, "சட்டசபை கலைக்கப்பட்ட பிறகு(!) முறைப்படி தி.மு.க.வில் இணைந்து விடுவேன்" என நமது நிருபரிடம் கையடித்துச் சத்தியம் செய்திருக்கிறார். (அப்பாடா..! வேஷம் கலைகிறது..!)

* "நடிகனின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் நடத்துறானுங்க. எவனாவது கண்டிக்கிறானா? தமிழ் உணர்வு இல்லாத நடிகர்களை திருத்தணும்னா இங்கேயும் பால்தாக்கரே மாதிரி ஒரு ஆள் வரணும்யா. இல்லேன்னா இவனுங்களை திருத்தவே முடியாது" என குமுறி கொந்தளிக்கிறார் 'இமயம்' பாரதிராஜா. (இப்படி பேசினாலும் யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்களே..!)

* "மந்திரங்கள் சொல்லித்தான் கடவுளை கும்பிடணுங்கிறதெல்லாம் ஏமாத்து வேலை. காவி, ருத்ராட்சம் போடணும்னு எந்த சாமியும் சொல்லலை. ஆசாமிகளின் வேலை அது" என்கிறார் ராகவா லாரன்ஸ். (அப்படீன்னா காவி கட்டாம காரியத்தை நடத்தலாம்ங்கிறீங்களா...?)

* 'ஈசல்' என்கிற புதிய படத்துக்கு இசை அமைப்பவர் மிதுன் ஈஸ்வர். இந்தப் படத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி. குஜராத்தி உள்பட 24மொழிகளில் உள்ள வார்த்தைகளை பயன்டுத்தி ஒரு பாடல் எழுதியிருக்கிறார் புதிய கவிஞர் வெங்கட். மலையாள வரிகளை பாட மம்மூட்டி சம்மதித்திருக்கிறார். இப்படியாக மற்ற மொழிப் பாடகர்- பாடகிகளை வைத்து பதிவு செய்யப் போகிறார்கள். (இந்திய ஒருமைப்பாடு வாழ்க)

* "தமிழ்ச் சினிமா இயக்குநர்கள் நடிகைகளிடம் எதை எதிர்பார்க்கிறார்கள்..? திறமையையா, அழகையா, கவர்ச்சியையா? அவர்களுக்கே தெரியாது. இதனால்தான் என்னைப் போன்ற திறமையான நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை" என வெதும்பி புலம்புகிறவர் பிரியாமணி. (தவளை தன் வாயால் கெடும்கிறது இதுதானா?)

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil