கலைஞர் படத்தில் 'வயாகரா' வரிகள்..!

19 April 2010 ·

*தமிழ்நாட்டில் அதிகார மையத்தில் இருக்கும் இரண்டு சேனல்களும் பகிரங்க மோதலில் இறங்கி விட்டன. 'அய்யா சேனலுக்கு விற்றுவிட்ட படங்களின் விளம்பரங்களை ஒளிபரப்ப மாட்டோம்' என கட் அன்ட் ரைட்டாக கூறி வருகிறதாம் பிரதர்ஸ் சேனல். இதனால் 'மதுரை மன்னரிடம்' வழிகாட்டச் சொல்லி புலம்பி இருக்கிறது புரொட்யூசர் ஏரியா. (அவனே, இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது மேல்)

* "'அந்தரங்கம்' செக்ஸ் படமா? மப்பும் மந்தாரமுமா மும்பை அழகிகளை இறக்குமதி பண்ணியிருக்கீங்களே?" என்றால் "நாக்கை வெட்டிப்புடுவேன்" என்று கொதிக்கிறார் புரொட்யூசர்-டைரக்டர் ருக்மாங்கதன்."நாட்டுல ஆம்பள விபசாரகன்கள் பெருகிட்டானுங்க. அவனுக தோலை உரிச்சு உப்பு தடவுற படம்தான் 'அந்தரங்கம்' " என்கிறார். (வெட்ட வேண்டியதை வெட்டுனா...சரி)

*"கமர்ஷியல் அயிட்டங்களையும் சேர்த்துக்கணும். அய்யா அனுமதிக்காக வெயிட்டிங்" என 'பெண் சிங்கம்' டைரக்டர் பாலி ஸ்ரீரங்கம் பெட்டிஷன் போட, கதை- வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதி ஏற இறங்க பார்த்து சிரித்திருக்கிறார். "பார்த்துய்யா, வாலியிடம் போ" என அடையாளம் காட்டிவிட, அப்புறமென்ன! லட்சுமி ராய்-லாரன்ஸ் ஆடிப்பாடுவதற்கு கிளர்ச்சி ஊட்டுகிற வரிகளில் பாட்டு ரெடி. ( வாலி(ப) வயாகரா வரிகள்...!)

*"என்னம்மா, 'லவ் நெட்ல' சிக்கிட்டீங்க போலிருக்கு. காத்தில்லாம பட்டம் பறக்காதே...?" என்று நடிகை சதாவிடம் கேட்டதற்கு செவிட்டில் பொளேர் விடாத குறையாக பதில். "லவ் பண்றது தேசத் துரோகமா? சினிமாக்காரங்க லவ் பண்ணுனா மட்டும் ஏன் இப்படி விழுந்து விழுந்து விசாரிக்கிறீங்க..? நான் இன்னும் யாரையும் லவ் பண்ணல! பண்ணுனா சொல்லி அனுப்பறேன், போங்க பேனாவை மூடிட்டு" என்கிறார். (ஊர் வாயை மூட முடியாதே!)

* அடுத்த மெகா மெகா பட்ஜெட் படத்துக்கு தயாராகி விட்டார் தயாநிதி அழகிரி. படத்தின் நாயகன் விக்ரம் (சம்பளம் 10சி.யாம்). ஒன்றரை வருடம் கால்ஷீட். டைரக்ஷன்- பாலா. ஹாலிவுட் ஸ்டைலில் தனித்தனி டிபார்ட்மென்ட். இப்போதே ஸ்டோரி போர்டு தயார் என்கிறார்கள். (ஹீரோயின் நயன்தாராவா?)

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil