இன்டர்நெட்டுக்கு நன்றி தெரிவிக்கிறார், 39 வயது லண்டன்வாசி ஆண்டி ஸ்பியர்ஸ். காரணம்... தனது 2 வயதில் பிரிந்துபோன தந்தையை 37 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறிந்து, அவருடன் ஒன்றிணைய வழிவகைச் செய்ததால்! பெற்றோர் இருவருக்கும் இடையே மணமுறிவு ஏற்பட்டதால், தனது இரண்டாவது வயதிலேயே தந்தை கிரஹாம் கோர்பெட்டை பிரிய நேரிட்டது, ஆண்டி ஸ்பியர்ஸுக்கு. அதில், வந்துவிழந்ததோ மொத்தம் 15 கிரஹாம் கோர்பெட்கள். ஒவ்வொன்றாக க்ளிக் செய்ய, ஒரு கிரஹாமின் புகைப்படத்தைக் கண்டு ஆச்சரியத்தில் கண்களை விரித்தார். ஆம்... தனக்கு வயதானால் எப்படி இருக்குமோ அதையொத்த பிசிறற்ற புகைப்படத்தைக் கண்டு வியந்ததோடு, ஆனந்த கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்ததையும் உணராது, உடனடியாக க்ளிக் செய்தார் அந்த ப்ரொஃபைலை. 'அவரே அப்பா' என்பது உறுதியானது! "என் ஃபேஸ்புக் அக்கவுண்டில் இருந்து அப்பாவுக்கு ஒரு மேசேஸ் செய்தேன். இரண்டு நாளில் அவரிடம் இருந்தது பதில் வந்தது... 'ஹலோ மகனே... என்னால் நம்பவே முடியவில்லை' என்று," என தனது நெகிழ்வுத் தருணத்தை 'தி டெய்லி மிரர்' பத்திரிகையில் விவரித்திருக்கிறார், ஆண்டி ஸ்பியர்ஸ். பின்னர், உடனடியாக இருவரும் குறிப்பிட்ட சந்தித்துக் கொண்டு, தங்களது பாச உணர்வுகளை பரிமாறிக் கொண்டனர். 37 ஆண்டு காலத்தை முழுமையாகப் பகிர பேசினர், பேசினர், பேசி....க்கொண்டே... இருந்தனர். இனிமேல் ஒன்றாக வாழ்வோம் என்று முடிவு செய்து அப்பாவும் மகனும் இணைந்தனர். இப்போது, அப்பாவும் மகனும் ஒரே வீட்டில். "நாங்கள் மீண்டும் சந்தித்துக் கொண்ட அந்தத் தருணத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. எங்கள் இருவரது கண்களில் இருந்தும் ஆனந்தக் கண்ணீர். அப்போது, எங்களது தழுவலே 37 ஆண்டு கால பிரிவை நொடிப்பொழுதில் போக்கியது. இப்போது எல்லாம் சுபமாகியிருக்கிறது. இன்டர்நெட்... உண்மையிலேயே அற்புதமான கண்டுபிடிப்புதான்," என்று நெகிழ்கிறார் ஆண்டி ஸ்பியர்ஸ்.
ஒன்றல்ல, இரண்டல்ல... 37 ஆண்டுகள் நகர்ந்த நிலையில், எதார்த்தமாக 'ஃபேஸ்புக்' சமூக வலைத்தளத்தின் தேடலில் தன்னுடைய தந்தை கிரஹாம் கோர்பெட்டின் பெயரை டைப் செய்திருக்கிறார்.
37 ஆண்டுகளுக்கு பிறகு அப்பா - மகனை இணைத்த ஃபேஸ்புக்!
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)



Ontario Time


0 comments:
Post a Comment