ரஞ்சிதா வாக்குமூலம் அளிப்பாரா? இல்லை கைதாவாரா?
நித்யானந்தாவுடன் இருந்த நடிகை ரஞ்சிதாவிடம் விசாரித்தால் நித்யானந்தா பற்றிய மேலும் பல தகவல்களை திரட்டமுடியும் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இதனால் ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த போலீசார் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் ரஞ்சிதா இருப்பிடத்தை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
ரஞ்சிதா தனக்கு உதவியாக பிரசாந்த் மந்திரத்தா என்ற வக்கீலை நியமித்துள்ளார். அவர் மூலம் ரஞ்சிதாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினார்கள். ஆனால் அதிலும் பலன் கிடைக்கவில்லை.
எனவே போலீசார் ரஞ்சிதாவின் வக்கீல் மூலம் ரஞ்சிதாவுக்கு 2 நோட்டீசுகளை அனுப்பி உள்ளனர். இ.மெயில் மூலம் அனுப்பப்பட்ட இந்த நோட்டீசில் ரஞ்சிதா மே 2-ந்தேதிக்குள் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தனர்.
அதன்படி அவர் ஆஜராகாவிட்டால் அவரை கைது செய்வதுடன் அவர் மீது பல்வேறு வழக்குகளையும் தொடர திட்டமிட்டு இருந்தனர்.
இதனால் பயந்துபோன ரஞ்சிதா போலீசாரிடம் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ரஞ்சிதா வக்கீல் பிரசாந்த், ‘’ சி.ஐ.டி. போலீசார் அனுப்பிய நோட்டீசு எங்களுக்கு கிடைத்துள்ளது. போலீஸ் விசாரணைக்கு ரஞ்சிதா முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறார். போலீசார் முன்பு ஆஜர் ஆவதற்கும் அவர் தயாராக உள்ளார். ஆனால் எப்போது ஆஜராவார் என்பதை என்னால் சொல்ல முடியாது என்றார்.
இன்று மாலை அல்லது நாளைக்குள் ரஞ்சிதா போலீசார் முன்பு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நித்யானந்தா ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். அது நாளை விசாரணைக்கு வருகிறது. நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொள்ளதிட்டமிட்டு உள்ளனர். அதற்கு உரிய காரணங்களை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்.
அதற்கு முன்பு ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்திவிட்டால் நித்யானந்தாவுக்கு எதிராக மேலும் பல ஆதாரங்கள் கிடைக்கும் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம் ஜாமீனுக்கு மறுப்பு தெரிவிக்க பல காரணங்கள் கிடைக்கலாம். எனவே ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே ரஞ்சிதாவிடம் விசாரணையை முடித்து விட முயற்சித்து வருகின்றனர்.
ரஞ்சிதா ஆஜராகாவிட்டால் உடனடியாக அவரை கைது செய்யவும் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் ரஞ்சிதா வாக்குமூலம் அளிப்பாரா? இல்லை கைதாவாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க வீதிகளில் நித்யானந்தா- ரஞ்சிதா
நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியானதை தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இமாச்சல பிரதேசத்தில் அவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
தற்போது அவர் நீதிமன்ற காவலில் ராமநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நித்யானந்தா பற்றி மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவில் ஆசிரமம் இருப்பதால் நித்யானந்தா அடிக்கடி அமெரிக்கா போய் வருவார். அவருடன் நடிகை ரஞ்சிதாவும் பலமுறை அமெரிக்காவுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
கடந்த வருடம் ஆகஸ்டு மற்றும் அக்டோபர் மாதங்களில் நித்யானந்தா அமெரிக்கா சென்றபோது அவருடன் நடிகை ரஞ்சிதாவும் சென்று இருக்கிறார். இதுபற்றி அமெரிக்காவில் வசிக்கும் நித்யானந்தரின் பக்தர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கொலம்பஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், சீட்டல், ஒகலஹோமா, டல்லஸ், ஹவுஸ்டன் மற்றும் சான் ஜோஸ் ஆகிய நகரங்களுக்கு வரும்போது நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதாவும் வந்திருந்தார்.
குறிப்பாக கொலம்பஸ் கோவிலில் நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் நெருக்கமாக வந்தனர் என்று அமெரிக்காவை சேர்ந்த பக்தர் ஒருவர் கூறியுள்ளார். நித்யானந்தா தியான பீடத்தின் பயண ஆவணங்களை பார்த்தால் ரஞ்சிதாவும் நித்யானந்தாவுடன் அமெரிக்கா சென்றிருந்தார் என்பது தெரியவரும் என்று கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் நித்யானந்தாவின் யோகா பயணத்தின்போது, உடன் இருந்த ரஞ்சிதாவை காட்டி, இவரை நான் பிரம்மாச்சாரியார்களில் ஒருவராக தயார் செய்து வருகிறேன். அதனால் தான் ரஞ்சிதாவுக்காக அதிக நேரம் செலவு செய்கிறேன்’என்று அங்குள்ள தனது சீடர்களிடம் நித்யானந்தா கூறியுள்ளார்.
நன்றி நக்கீரன்
0 comments:
Post a Comment