விண்டோஸ் விஸ்டா மற்றும் ஏழு இயங்குதளங்களில் Windows Defender உங்கள் டாஸ்க் பாரில் வந்திருப்பதை பார்த்திருக்கலாம். மைக்ரோசாப்ட் இன் இந்த வசதி உங்கள் கணினியை மால்வேர் மற்றும் ஸ்பைவேர்களிலிருந்து காக்கும் பணியை செய்கிறது.
ஒரு வேளை உங்கள் கணினியில் Kaspersky, Malware bytes போன்ற நல்ல anti மால்வேர் மென் பொருளை நீங்கள் நிறுவியிருந்தால், இந்த Windows Defender கட்டாயமாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.
இது விண்டோஸ் உடன் உள்ளிணைந்த ஒரு கருவி என்பதால் இதனை தனியாக Uninstall செய்ய இயலாது. இதனை செயலிழக்க வைக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
முதலில் ஸ்டார்ட் மெனுவில் உள்ள சர்ச் பாக்ஸில் Services.msc என டைப் செய்து Services விண்டோவை திறந்து கொள்ளுங்கள். இங்குள்ள பட்டியலில் Windows Defender ஐ தேர்வு செய்து இரட்டை க்ளிக் செய்யுங்கள்.
இனி திறக்கும் Windows Defender Properties வசனப் பெட்டியில்,Startup Type என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Disabled என்பதை தேர்வு செய்து OK கொடுங்கள்.
0 comments:
Post a Comment