சிலருக்கு மட்டும் எங்கு சென்றாலும் தனி மரியாதை இருக்கும்
எப்படி இவர்களால் மட்டும் இப்படி முடிகிறது அவர்களும் நம்மைப்
போல் தான் ஆனாலும் அவர்களுக்கு எப்படி அனைவரிடமும் மரியாதை
யாரிடம் எப்படி பேச வேண்டும் என்ற தந்திரம் தெரிகிறது நமக்கு
இதை யாராவது சொல்லிக்கொடுப்பார்களா என்று எண்ணும் நமக்கு
யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எப்படி பேச வேண்டும்
என்று சொல்வதற்காக ஒரு இணையதளம் வந்துள்ளது அதைப்பற்றி
தான் இந்த பதிவு.
என்னைவிட படிப்பு குறைவாகத்தான் இருக்கிறான் ஆனாலும்
அவர்களின் பேச்சுத்திறமைக்கு தான் சபையில் மரியாதை
கிடைக்கிறது இந்த கேள்வியில் இருந்து உங்களுக்கு எழும்
அத்தனை கேள்விகளையும் இந்த இணையதளத்தில் பதியலாம்
உடனுக்குடன் பதில் கொடுக்கிறார்கள். பேசும் போது கண்ணைப்
பார்த்து பேசவேண்டுமா ?, வேலை செய்கிற அலுவலகத்தில்
எப்படி நடந்துகொள்ள வேண்டும் உங்கள் வளர்ச்சிக்கு தடையாக
இருக்கும் அத்தனை கேள்விகளையும் இங்கு நாம் கேட்கலாம்.
இணையதள முகவரி : http://failin.gs
இந்த இணையதளத்திற்கு சென்று நாம் இரு இலவச கணக்கை
உருவாக்கிகொள்ளவும் அல்லது உங்கள் டிவிட்டர் கணக்கைப்
பயன்படுத்தியும் உள்ளே செல்லாம்.உங்கள் கேள்விக்கு யார்
வேண்டுமானாலும் பதில் கூறலாம் அதுபோல் நீங்களும் யார்
கேள்விக்கு வேண்டுமானாலும் பதில் சொல்லலாம். பிரண்ட்ஸ்
குரூப் உருவாக்கி கொள்ளலாம். உங்கள் எண்ணங்களுக்கு
மக்களிடத்தில் இருந்து என்ன பதில் வருகிறது பெரும்பாண்மையான
கருத்துக்கள் எவை இதிலிருந்து நாம் நம்மை எப்படி மேம்படுத்திக்
கொள்ளலாம் என அனைவருக்கும் உதவுவதற்காகவே இந்த
இணையதளம் வந்துள்ளது.
0 comments:
Post a Comment