விஜய்யின் காவல்காரனை அடுத்து வேலாயுதம்..!

10 May 2010 ·

விஜய்யின் காவல்காரனை அடுத்து வேலாயுதம்..!

பி.பி. ஏறி பெட்ல படுக்குமளவிற்கு படத்தின் தலைப்பை சொல்வதற்கு ஏகப்பட்ட பில்டப் கொடுக்கின்றனர் தமிழ் சினிமா இயக்குனர்கள்.

கதை, திரைக்கதை ரெடி பண்ணிய இயக்குனர்களுக்கு தலைப்பு பிடிப்பதுதான் தலைவலி. எதுக்கு ரிஸ்க் என பாதி இயக்குனர்கள் பழைய படத்தின் டைட்டிலையே வைத்து விடுவதுதான் அதிகமாக நிகழ்கிறது.

விஜய்யின் 51 – வது படத்தின் தலைப்பை இன்னும் `காவல்காரன்` என்றுதான் எழுதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்னமும் அது உறுதியாகவில்லை. `பாடிகார்ட்`க்கு தமிழ் அர்த்தம் காவல்காரன்தானே? அதனால் அந்த பெயரைதான் விஜய் ‘டிக்’ அடிப்பார் என்ற நம்பிக்கை மீடியாக்காரர்களுக்கு. விஜய்5யோ, இயக்குனர் சித்திக்கோ இது பற்றி இன்னும் முடிவுசெய்யவில்லை.

இந்த விஷயத்தில் ஜெயம் ராஜா பொறுமையை சோதிக்கவில்லை. விஜய்யின் 52-வது படத்தை இயக்கப் போகும் ராஜா தலைப்பு என்னவென்பதை இப்போதே சொல்லிவிட்டார். படத்திற்கு `வேலாயுதம்` என பெயரிடப்பட்டுள்ளது.

காவல்காரன் பட வேலைகள் இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்துவிடுமாம். இதனால் ஜூலை மாதம், விஜய் `வேலாயுதம்` வேஷம் போடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

-------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------

“அட்வான்ஸை திருப்பிக் கொடுக்க மறுக்கிறார்”
– நடிகர் ஸ்ரீகாந்த் மீது தயாரிப்பாளர் புகார்..!

கொடுத்த அட்வான்ஸைத் திரும்பத் தர மறுக்கிறார் என்று நடிகர் ஸ்ரீகாந்த் மீது தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் தரப்பட்டுள்ளது.

பிரபல தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் நடித்த ‘பூ’, ‘இந்திர விழா’, ‘ரசிக்கும் சீமானே’ படங்கள் சமீபத்தில் ரிலீசாயின. தற்போது ‘துரோகி’ என்ற படத்தில் நடிக்கிறார்.

ஸ்ரீகாந்த், மீது தயாரிப்பாளர் பி.எஸ்.சேகர் ரெட்டி தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு புகார் கூறியுள்ளார். சமீபத்தில் வெளியான ‘மாத்தியோசி’ படத்தின் தயாரிப்பாளர் இவர்.

சில மாதங்களுக்கு முன் ஸ்ரீகாந்தை வைத்து `காவேரித் தலைவன்` என்ற படத்தை எடுக்க முடிவு செய்தார். இதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. திடீரென்று அப்படம் நின்று போனது.

இந்த நிலையில் ‘காவேரித் தலைவன்’ படத்துக்காக ஸ்ரீகாந்துக்கு 15 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் தொகை கொடுத்ததாகவும் அப்பணத்தை திருப்பி கேட்டால் தர மறுக்கிறார் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் பி.எஸ்.சேகர் ரெட்டி புகார் மனு அளித்துள்ளார்.

ஆனால் ஸ்ரீகாந்தோ 3 லட்சம்தான் அட்வான்ஸ் கொடுத்தார் என்று கூறுகிறாராம். தயாரிப்பாளர் சங்கத்தில் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து தயாரிப்பாளர் பி.எஸ். சேகர் ரெட்டி கூறுகையில், "காவேரித் தலைவன்’ படத்தை ஸ்ரீகாந்தை வைத்து பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டேன். அதற்காக 15 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தேன். ஸ்ரீகாந்தை வைத்து பல கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பது சரியல்ல என்றும், வியாபாரம் ஆகாது என்றும் சக தயாரிப்பாளர்கள் சிலர் கூறினர். இதையடுத்து ‘காவேரித் தலைவன்’ படத்தைக் கைவிட்டேன்.

அட்வான்ஸ் தொகையைத் திருப்பிக் கேட்டபோது தர மறுத்துவிட்டார். அதோடு 3 லட்சம்தான் அட்வான்ஸ் வாங்கினேன் என்றும் பொய் சொல்கிறார். அவரது குடும்ப விஷயத்தில் நடந்த மாதிரியே என் விஷயத்திலும் நடக்கப் பார்க்கிறார். தயாரிப்பாளர் சங்கம் மூலம் எனது பணம் திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது..." என்றார்.

ஆனால் ஸ்ரீகாந்த் இதனை முற்றிலும் மறுத்துள்ளார். "எனக்கு அவர் கொடுத்தது 3 லட்சம் ரூபாய்தான். இதைத் திருப்பித் தந்துவிடவும் நான் தயார். இவர் படத்தை நம்பி கால்ஷீட் கொடுத்தேன். வேறு பட வாய்ப்பையும் மறுத்தேன். அதற்கு என்ன சொல்லப் போகிறார். என் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க அவருக்கு உரிமையில்லை.." என்கிறார் ஸ்ரீகாந்த்

------------------------------------------------------------------------------------------------------------
======================================================

நயன்தாராவுக்கு ரஜினி வாழ்த்து..!

நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக நயன்தாரா முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம். பிரச்சனைகளையே பெட்ஷீட்டாக போட்டு தூங்கியவருக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகி, காதில் விழும் செய்திகளெல்லாம் கற்கண்டாய் இனிக்கிறதாம்.

தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் நயன்தாரா நடித்த `சிம்ஹா` படம் சமீபத்தில் ரிலீசாகி வசூலை வாரி குவித்துக்கொண்டிருக்கிறதாம்.

மற்ற ஹீரோக்களின் படங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி, நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறதாம். இப்படம் திரையிட்ட முதல் ஒரு வாரத்திலேயே 26 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் பருசூரிகிரீதி தெரிவித்தார். தெலுங்கு பட வரலாற்றில் இது பெரிய சாதனை.

வெற்றி செய்தி பற்றி கேள்விப்பட்ட நயன்தாரா, அந்த சந்தோஷத்தில் மிதந்துகொண்டிருக்க, அடுத்து வந்த ரஜினியின் வாழ்த்தும் நயனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் `சிம்ஹா` சிறப்பு காட்சி ரஜினிக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த ரஜினி, பாலகிருஷ்ணாவுக்கும், நயன்தாராவுக்கும் போன் செய்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இதற்குமுன் நயன்தாரா நடித்த தெலுங்கு படமான ‘ஆடூர்ஸ்’ படம் ஹிட்டானது. மலையாளத்தில் நடித்து சமீபத்தில் வந்த ‘பாடிகார்ட்’ படமும் வெற்றி பெற்றது. இப்படி அடுத்தடுத்து வெற்றி முகங்களை சந்தித்து வரும் நயன்தாராவுக்கு தமிழில் ஆர்யா ஜோடியாக ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ மலையாளத்தில் ‘எலக்ட்ரா’, கன்னடத்தில் ‘சூப்பர்’ உட்பட நான்கு படங்கள் கைவசம் உள்ளன.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil