ரஞ்சிதா கிடைத்துவிட்டால், நித்யானந்தாவுக்கு எதிராக பல முக்கிய தகவல்களைப் பெற முடியும் என்பதில் போலீசார் உறுதியாக உள்ளனர்.
எனவே ரஞ்சிதாவுக்கு நெருக்கமான நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரஞ்சிதா எங்கே பதுங்கி இருக்கிறார் என்று அவர்களிடம் கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் சென்னை வந்த கர்நாடக போலீஸார் தி.நகரில் ரஞ்சிதாவின் வீட்டிற்கு எதிரில் இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நேரில் சென்று ரஞ்சிதா பற்றி விசாரித்துள்ளார்கள். ரஞ்சிதா நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவே இல்லை என்பதை சங்க நிர்வாகிகள் போலீஸாரிடம் விளக்கியதும், ரஞ்சிதாவை ஆஜர்படுத்த உதவும்படி போலீஸார் கேட்டுக் கொண்டனராம்.
இதற்கிடையில் ரஞ்சிதாவுடன் தொடர்பு வைத்திருந்த நடிகர், நடிகைகளை விரட்டிப் பிடித்த கர்நாடக போலீஸ் அவர்களிடம் போனிலேயே ரஞ்சிதா பற்றி விசாரித்துள்ளது. இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு சொந்தமாக வளசரவாக்கத்தில் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை தற்போது பிரபல சினிமா தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா என்பவருக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார் ரஞ்சிதா.
இத்தகவலை தெரிந்து கொண்ட கர்நாடக போலீஸார் சிவாவிடமும் விசாரித்துள்ளனர். சிவாவோ வீட்டு வாடகையை யாரிடம் தருவது என்பதே தெரியாமல் தான் முழித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். ரஞ்சிதாவின் குடும்பத்தினரும் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக சிவா சொல்லியிருக்கிறார். ஆனாலும் அனைத்து ஆவணங்களுடன் அவரை பெங்களூருக்கு விசாரணைக்கு வந்து செல்லும்படி போலீஸார் கூறியுள்ளார்கள்.
ரஞ்சிதா பற்றி பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளரிடம் கர்நாடக போலீஸ் விசாரணை..!
ரஞ்சிதா பற்றி பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளரிடம்
கர்நாடக போலீஸ் விசாரணை..!
நித்தியானந்த சாமியார் வழக்கில் நேரில் ஆஜராக வருகிறேன் என்று சொல்லியே ஒரு மாதம் வரையிலும் இழுத்தடித்திருக்கும் நடிகை ரஞ்சிதாவின் வாக்குறுதியை இனியும் நம்ப முடியாது என முடிவு செய்திருக்கும் கர்நாடக போலீஸ் அவரைத் தீவிரமாகத் தேடத் துவங்கிவிட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment