பக்கத்துத் தெருவில் இருக்கும் கடைக்குச் சென்று பால் பாக்கெட் வாங்கி வருவதில் ஆரம்பித்துகோடி ரூபாயில் வீடு வாங்குவது வரை நம் அனைத்துச் செயல்பாடுகளிலும் ரிஸ்க் இருக்கிறது. ரிஸ்க் இல்லாமல் வாழ்க்கையே இல்லை. ரிஸ்க் என்பது அடிப்படையில் மோசமான விஷயமும் அல்ல. ஒருவர் ரிஸ்க் எடுக்கத் தயங்குகிறார் எனில் அவர் அருமையான வாய்ப்புகளைத் தவறவிடுகிறார் என்றே அர்த்தம். இந்த உண்மை பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வதற்கும் நூற்றுக்கு நூறு சதம் பொருந்தும்.
பங்குச் சந்தையில் நாலு காசு பார்க்க நீங்கள் ரிஸ்க் எடுக்கத் தயாரா? உங்கள் பதில் எஸ் எனில், உங்களுக்கு என் பாராட்டுகள். வாருங்கள், ரிஸ்க் எடுப்போம்.
ஆனால், நினைத்த மாத்திரத்தில் எதையும் செய்வது புத்திசாலித்தனமாகாது. அழகான குளத்தைப் பார்த்தவுடன் அதில் குதித்துவிடக்கூடாது. இந்தக் குளம் எத்தனை ஆழமானது? இந்தத் தண்ணீர் நம் உடம்புக்கு ஒன்றும் செய்யாதா? இதில் முதலை ஏதாவது இருக்குமோ? தண்ணீரில் குதித்த பிறகு நமக்கு ஏதாவது பிரச்னை எனில் காப்பாற்ற பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா? அவர்களுக்கு நீச்சல் தெரியுமா? இப்படி அதில் இருக்கும் அத்தனை ரிஸ்க் பற்றியும் நாம் அலசி ஆராய வேண்டும். அப்போதுதான் எந்தப் பிரச்னை வந்தாலும் அதைச் சமாளிக்கும் தெளிவு நமக்குள் இருக்கும்.
பங்குச் சந்தையில் பணவீக்க விகிதத்தைத் தாண்டி வருமானம் பார்க்க நினைக்கிறவர்கள் ரிஸ்க் எடுக்கும்போது பின்வரும் 10 கட்டளைகளை அவசியம் கவனித்தாக வேண்டும்.
வயது!
ஒருவரின் வயதுக்கு ஏற்ற முதலீடுகளை மேற்கொள்வது முதலீட்டின் ஆதாரமான உண்மை. ஒரு மனிதனின் வயது என்பது உண்மையில் அவன் உடல் மற்றும் மனநலனைப் பொறுத்ததாக இருக்கிறது. சிலர் அறுபது வயதிலும் திடகாத்திரமாக இருக்கலாம். சிலர் நாற்பது வயதிலேயே தளர்ந்து போகலாம். தாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை உணர்ந்தே இவர்கள் எவ்வளவு ரிஸ்க் எடுப்பது என முடிவு செய்ய வேண்டும். ஆனால் ஓய்வுக் காலத்தை நெருங்கி கொண்டிருப்பவர்கள், உத்தரவாதமான வருமானத் திட்டங்களில் கவனம் செலுத்துவதே நல்லது. அவர்கள் ரிஸ்க் உள்ள பங்குகளை குறைத்துக் கொள்வது அவசியம்.
நிதிநிலை
ஒருவரின் முதலீடு மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறன் அவருடைய தற்போதைய வருமானம் மற்றும் சொத்து ஆகியவற்றின் அடிப்படையில்தான் அமைக்கப் படவேண்டும்.
குடும்பம்!
முதலீட்டாளரின் குடும்ப நிலையையும் கவனத்தில் கொள்வது அவசியம். ஒருவர் திருமணம் ஆகாத தனிநபர் அல்லது அவரைச் சார்ந்து யாரும் இல்லை என்கிற போது வயதைப் பற்றி கவலைப்படாமல் ரிஸ்க் எடுக்கலாம். அதே சமயம் அவரைச் சார்ந்த நபர்கள் இருந்தால் அவர்களுக்கும் இந்த 10 கட்டளைகளைப் பொருத்திப் பார்க்கவேண்டும்.
நிதித் தேவை
வாழ்க்கையின் பல்வேறு கால கட்டங்களின் நிதி தேவையை ஈடு செய்யும் வகையில் முதலீடு அமைந்திருக்கவேண்டும். அதாவது கல்வி, வேலை, திருமணம், சொந்த வீடு, மருத்துவம், ஓய்வுகால தேவைகள், பிள்ளைகளின் கல்வி, திருமணம், போன்றவைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
உணர்ச்சி வசப்படுதல்
எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள், இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் பங்கு முதலீட்டிலிருந்து விலகி நிற்பதே நல்லது. பங்குச் சந்தை சரிவுகளை இவர்களால் தாங்கிக் கொள்ளமுடியாது. இதனால் இவர்கள் ரிஸ்க் குறைவான முதலீட்டில்தான் கவனம் செலுத்தவேண்டும்.
ரிஸ்க் எடுக்கும் திறன்
இத்திறன் ஒருவரின் மனம் மற்றும் உடல் ரீதியாக எந்த அளவுக்கு இழப்பைத் தாங்கிக் கொண்டு மறுபடியும் முதலீட்டிற்கு வருகிறார் என்பதாகும். இந்த ரிஸ்க் எடுக்கும் திறனின் அடிப்படையானது ஒருவர் அவருடைய எல்லா வழக்கமான செலவுகளைத் தாண்டி எவ்வளவு பணம் ஒதுக்கமுடியும் என்பதைப் பொறுத்திருக்கிறது.
ரிஸ்க் க்ஷிஷி ரிவார்டு
ஒரு முதலீட்டில் உள்ள ரிஸ்க் மற்றும் அதனால் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றைக் கணக்கிட்டு, கிடைக்கும் ரிவார்டு எடுக்கும் ரிஸ்க்குக்கு ஏற்றதுதானா என்று பார்க்கவேண்டும். இதை எல்லா முதலீட்டு வகைகளுடனும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.
கடன்
எந்த ஒரு காலக் கட்டத்திலும் கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்யக் கூடாது. சந்தையில் சரிவு ஏற்பட்டால் கடன் மற்றும் அதற்கான வட்டியைத் தவிர பங்கின் விலையில் ஏற்பட்ட இழப்பும் சேர்ந்து ஒருவரை மேலும் கடன்காரராக ஆக்கிவிடும்.
பல தரப்பட்ட பங்கு!
எந்த வயதாக இருந்தாலும் போர்ட்ஃபோலியோ என்பது டைவர்சிஃபைடாக இருப்பது அவசியம். அதில், பங்குகள், ஃபண்ட்கள், இ.டி.எஃப், தங்கம், வெள்ளி, வங்கி டெபாசிட்கள் என எல்லாமே கலவையாக இருக்க வேண்டும். போர்ட்ஃபோலியோவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் பங்குகளில் வயதுக்கு ஏற்ப முதலீடு அமைய வேண்டும்.
அதிகக் கவனம் தேவை!
பங்குகளை வாங்கும் நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதிக லாபம் வேண்டுமென்றால் ரிஸ்க் எடுத்துதான் ஆகவேண்டும். வருமானத்தைக் கவனத்தில் கொள்வதைவிட ரிஸ்க் மேலாண்மையை பற்றித் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
இப்போது நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடிவெடுத்துவிட்டால் முக்கியமாக உங்கள் வயதுக்கேற்ப பங்குகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
ஃபார்முலா
பல்வேறு வயதினர் பங்குகளில் எந்த அளவுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்குப் பொதுவான ஃபார்முலா ஒன்று இருக்கிறது.
பங்கு முதலீடு சதவிகிதம் = 100 - X
இங்கு X என்பது முதலீட்டாளரின் வயதைக் குறிக்கும். உதாரணத்துக்கு, 25 வயதுள்ள ஒருவர் அவரின் முதலீட்டுத் தொகையில் 75% (100-25) பங்குகளில் முதலீடு செய்யலாம். இதுவே அவரின் வயது 35 ஆக இருந்தால் 65% (100-35) தொகையைப் பங்குகளில் முதலீடு செய்யலாம். இது சுமார் 5% முன்பின் இருந்தால் தவறில்லை.
பங்குச் சந்தையைப் பொறுத்தவரை நீங்கள் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தயாரோ, அந்த அளவுக்கு லாபம் பார்க்கலாம். எந்த வயதுக்காரர்கள், எது மாதிரியான பங்குகளில் முதலீடு செய்யலாம் என்கிற பட்டியல் இதோ:
vikatan
0 comments:
Post a Comment