ரிலையன்ஸ் சகோதரர்கள் முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் சமரசமாக செல்ல முடிவுசெய்துள்ளனர்.
ரிலையன்ஸ் குழுமத்தை உருவாக்கியவர் இவர்களது தந்தையான திருபாய் அம்பானி. இவரது மறைவுக்குப் பிறகு சகோதரர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து, தனித்தனி குழுமத்தைஏற்படுத்தினர்.
இதில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூத்த சகோதரர் முகேஷ் அம்பானி வசம் சென்றது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரிசுக்கு குஜராத்தில் பெரிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை உள்ளது. அத்துடன் கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய், எரிவாயுவைக் கண்டுபிடித்துள்ளது. இங்கிருந்து உற்பத்தியாகும் எரிவாயுவை அரசு நிர்ணயித்துள்ள விலையைக் காட்டிலும், இரு சகோதர்களும் சொத்துக்களை பிரித்துக் கொண்டபோது ஒப்புக் கொண்டபடி, ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்ச் (ஆர்என்ஆர்எல்) நிறுவனத்துக்கு குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்று அனில் அம்பானி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இறுதியில் விசாரித்த உச்ச நீதிமன்றம், இரு சகோதரர்களும் சமரச தீர்வுக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் இரு சகோதரர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆனால் இதை இரு குழுமத்தின் செய்தித் தொடர்பாளர்களும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் இரு சகோதரர்களும் சமரச தீர்வுக்கு சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக அனில் அம்பானி, பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்களையும் நேரில் சந்தித்துப் பேசினார்
இதைத் தொடர்ந்து மூத்த அமைச்சர்களுடன் முகேஷ் அம்பானியும் சந்தித்துப் பேசினார்.
இரு சகோதர்களுக்கும் இடையிலான சமரச தீர்வின் ஒரு அம்சமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 2022 ஆம் ஆண்டு வரை இயற்கை எரிவாயுவில் இயங்கும் மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதில்லை போவதில்லை என்று உறுதி அளித்துள்ளது. இது தொடர்பாக இரு சகோதரர்களிடையே தனியாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.
இயற்கை எரிவாயு வழங்குவது தொடர்பாக, இரு சகோதர நிறுவனங்களிடையே மிக எளிதான ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. இதன்படி இரு நிறுவனங்களும் இனி எண்ணெய், எரிவாயு, பெட்ரோகெமிக்கல், தொலைத் தொடர்பு, மின்சாராம் ஆகிய துறைகளில் தனித்தனியே ஈடுபடும் எனத் தெரிகிறது.
அதாவது முகேஷ் அம்பானி தொலைத் தொடர்புத் துறை, மின்னுற்பத்தி உள்ளிட்ட துறைகளில் ஈடுபடலாம்.
அதேபோல அனில் அம்பானி எண்ணெய் சுத்திகரிப்பு, எண்ணெய் ஆராய்ச்சி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடலாம்.
0 comments:
Post a Comment