ஒரு பாட்டுக்கு இனி ஆட மாட்டேன்
கவர்ச்சியாக ஒரு பாட்டுக்கு ஆடச் சொன்னால் மறுத்துவிடுவேன் என்றார் அனுயா.
அவர் கூறியதாவது:
Ôநஞ்சுபுரம்Õ படத்துக்காக ஒரு பாட்டுக்கு ஆடியிருப்பது உண்மைதான். அந்த பாடல் காட்சி, படத்தில் இடம்பெறாது. படத்தின் விளம்பரத்துக்கு படமான பாடல் அது. பாப் பாடலாக இருக்கும். டிவியில் மட்டும் அது ஒளிபரப்பாகும். பட ஹீரோ ராகவ் எனது நண்பர் என்பதால் டான்ஸ் ஆடினேன். அதே நேரம், இப்போது எல்லா ஹீரோயின்களுமே ஒரு பாட்டுக்கு ஆடுகிறார்கள். அது தவறில்லை. அதற்காக அடிக்கடி அப்படி ஒரு பாட்டுக்கு ஆட மாட்டேன். அதே போல கவர்ச்சியாக ஒரு பாட்டுக்கு ஆட சொன்னாலும் மறுத்துவிடுவேன். சுந்தர்.சி ஜோடியாக Ôநகரம் மறுபக்கம்Õ படத்தில் நடித்து வருகிறேன். இதன் ஒரு ஷெட்யூல் முடிந்துவிட்டது. அடுத்த ஷெட்யூல் 6&ம் தேதி முதல் தொடங்குகிறது.
இவ்வாறு அனுயா கூறினார்.




Ontario Time


0 comments:
Post a Comment