விஜயகாந்துக்கு தலைவருக்கான தகுதியில்லை – குஷ்புவின் முதல் அட்டாக்..!

18 May 2010 ·

விஜயகாந்துக்கு தலைவருக்கான தகுதியில்லை – குஷ்புவின் முதல் அட்டாக்..!

சால்வைகள், மாலைகள் வாங்க காசிருந்தாலே போதும்.. நினைத்தக் கட்சியில் சேர்ந்துவிடலாம். சேர்ந்தபோது எடுத்த புகைப்படத்தை வீட்டில் மாட்டிவிட்டு கட்சியின் லட்சக்கணக்கான உடன்பிறப்புக்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொண்டு வீட்டிலேயே இருக்கலாம்.

ஆனால் குஷ்பு எடுத்த எடுப்பிலேயே டாப் கியருக்கு போகிறார்..! கடந்த ஒரு மாத காலமாகவே அவர் தி.மு.க.வில் சேர கனிமொழி மூலமாக முயற்சித்து வந்திருக்கிறார். கனிமொழி ஸ்டாலினிடம் சொல்ல அதன் பின் ஸ்டாலினை இரண்டு முறை நேரில் சந்தித்து விலாவாரியாக பேசியிருக்கிறார் குஷ்பூ.

கட்சி, நடவடிக்கைகள், அதன் பின்னான காரியங்கள், என்ன கிடைக்கும், என்ன கொடுக்கப்படும் என்கின்ற விஷயமெல்லாம் பேசி முடிக்கப்பட்ட பின்புதான் குஷ்பு அறிவாலயத்தில் காலெடுத்து வைத்திருக்கிறார். இந்தக் கூத்தெல்லாம் முடிந்து தனது முதல் பேட்டியிலேயே பக்கா தி.மு.க. உடன்பிறப்பாக மாறிவிட்டார் குஷ்பு.

இன்று வெளிவந்துள்ள குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் விஜயகாந்த் பற்றி பேட்டியளித்துள்ள குஷ்பு, “சினிமாவில் கேப்டன் விஜயகாந்தை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுக்காக அவரு கட்சியில நான் எப்படி சேர முடியும்..? நான் இப்பத்தான் ஒரு கட்சில சேர்ந்து உறுப்பினர் அடையாள அட்டை வாங்கியிருக்கேன்.. அதுக்குள்ள ஒரு கட்சித் தலைவரைப் பற்றி விமர்சிக்கக் கூடாது. இருந்தாலும் சொல்லிக்கிறேன்.. பெரிய தலைவர் என்று சொல்லிக் கொள்வதற்கான தகுதி விஜயகாந்த்துக்கு இல்லை. அதனை ப்ரூப் செய்ய அவர் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது..!” என்று சொல்லியுள்ளார்.

பாப்பா பொழைச்சுக்கும்..!

=====================================================
அடுத்த ஜாக்கெட்(ஜாக்பாட்) பிரபலம் யார்..?

ஜெயா டிவியில் கடந்த 10 அண்டுகளாக ஜாக்பாட் நிகழ்ச்சியை நடத்தி வந்தார் நடிகை குஷ்பு. இந்த நிகழ்ச்சியினால் இவருக்கு என்றே தனி நேயர்கள் பட்டாளமே உள்ளது.

பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசுகளையும், பணத்தையும் வெல்லும் வகையில் சுவையான பல சுற்றுக்களுடன் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது இந்த ஜாக்பாட் நிகழ்ச்சி. ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.

இந்நிகழ்ச்சியில் குஷ்பு அணிந்துவரும் ஜாக்கெட் ரொம்ப பிரபலம். இதனால்தான் இந்த நிகழ்ச்சியே பிரபலமானது. விதம்விதமான டிஸைன்களில் குஷ்பு அணிந்து வந்த ஜாக்கெட்டுகளினாலேயே இந்த நிகழ்ச்சி அமோக வரவேற்பைப் பெற்றிருந்தது. அதோடு ஜெயா டிவியில் அதிக வருமானம் தரக்கூடிய நிகழ்ச்சியாகவும், டி.ஆர்.பி. ரேட்டிங் உள்ள ஒரேயொரு நிகழ்ச்சியாகவும் இருந்து வந்தது.

இந்நிலையில் அவர் தற்போது திமுகவில் இணைந்துள்ளதால் அந்நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குஷ்பு இதனை எதிர்பார்க்கவில்லை என்றாலும், தி.மு.க. தரப்பிலும், கலைஞர் டி.வி. தரப்பிலும் இதைத்தான் எதிர்பார்த்தார்கள்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக தி.மு.க.வுக்கு இது நிச்சயம் பலனளிக்கத்தான் போகிறது. முதல் பலனாக தி.மு.க.வுக்கு ஒரு கவர்ச்சி பிரபலம் கிடைத்ததோடு இல்லாமல் ஜாக்பாட் நிகழ்ச்சியை குப்புறக் கவிழ்த்ததால் இரண்டாமிடத்திற்கு தன்னுடன் போட்டியிட ஆளே இல்லாத நிலைமை கலைஞர் டிவிக்கு வந்துள்ளது.

ஜெயா டிவியின் நிலைமை இன்னும் பரிதாபத்திற்கு போயுள்ளது. அந்த டிவியின் ரேட்டிங் உள்ள ஒரேயொரு நிகழ்ச்சியான ஜாக்பாட்டை நிறுத்தி வைத்துள்ளதால் அவர்களுக்குத்தான் ஹெவியான நஷ்டம். அதோடு கூடவே இந்த 15 எபிசோடுகளை எடுத்தும் ஒளிபரப்ப முடியாததால் இந்த நஷ்டமும் சேர்ந்து கொண்டுள்ளது.

போதாததற்கு குஷ்பு மாதிரியான மக்கள் சக்தி வாய்ந்த ஒரு கவர்ச்சி பிம்பத்தை தேடிப் பிடித்து இதில் புக் செய்து மறுபடியும் நிகழ்ச்சியை சக்ஸஸ் செய்து காட்டுவது என்பது முடியாத காரியமாகவே தெரிகிறது.

சேனல் தரப்பில் தற்போது பரிசீலினையில் முதலிடத்தில் இருப்பது நடிகை ரோஜாதான். ஆனால் ரோஜா ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியில் சேரத் துடித்துக் கொண்டிருப்பதால் இந்தக் கோதாவில் களமிறங்குவாரா என்பது தெரியவில்லை.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil