''தமன்னாவிடம் எனக்குப் பிடித்தது...'' த்ரிஷா

06 May 2010 ·ப்ஸ்ஸ்... த்ரிஷாவா இது? இன்னும் அழகு, இன்னும் இளமை, இன்னும் இனிமை!

'' 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் ஏகப்பட்ட லிப் கிஸ் காட்சிகள். எப்படி இந்தத் திடீர் துணிச்சல்?'

''Comfort levelனு சொல்வாங்க. கௌதம் மேனனோட வேலை செய்யும்போது, அது எல்லோருக்கும் அதிகமா இருக்கும். அதனால் அது இயல்பாக சாத்தியமானது. படத்தில் அந்தக் காட்சிகள் அழகாத்தானே இருந்தன. 'படம் நல்லா இருக்கு'ன்னுதானே தியேட்டருக்கு வந்தாங்க. 'சிம்பு-த்ரிஷா லிப் கிஸ் பார்க்கலாம்டா'ன்னு யாரும் வரலையே? என் கேரியரில் அதிகபட்ச மரியாதை கொடுத்தது இந்தப் படம்தான்!''

''த்ரிஷா இப்போ கமல் ஹீரோயின். எப்படி இருக்கு?' 'மர்மயோகி'யில் மிஸ் பண்ண வாய்ப்பு திரும்பக் கிடைச்சது எனக்கே சந்தோஷமான ஆச்சர்யம். 'மர்மயோகி' டிராப் ஆனதும், கமல் சார் 'மீண்டும் நடிப்போம்'னு ஒரு வரிதான் சொன்னார். அதை இவ்வளவு சீக்கிரம் செயல்படுத்துவார்னு எதிர்பார்க்கலை. இந்தப் படத்தைப் பொறுத்தவரை கமல் சார்தான் எங்க எல்லோருக்கும் வாத்தியார். நிறைய ரிகர்சல் நடத்துறார். நிறைய கேள்வி கேட்குறார். நம்மகிட்டே இருந்து பதிலும் நடிப்பும் வாங்கிடுறார். எல்லாருக்கும் வேலைகளைப் பிரிச்சுக் கொடுத்திருக்கார். எல்லாம் அவர் நினைச்சபடி கரெக்ட்டா போய்ட்டு இருக்கு. எப்படி ஒருத்தர் இவ்வளவு எனர்ஜியோடு, விஷயத்தோடு இருக்கார்னு அவ்வளவு ஆச்சர்யமா இருக்கு!'

''தமன்னா இங்கே பெரிய லெவலுக்கு வந்துட்டாங்களே... உஷார் ஆயிட்டீங்களா?''

''எனக்கு தமன்னாவை, அவங்க தங்க நிறத்தை ரொம்பவே பிடிக்கும். எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி ஏதோ ஒண்ணு நிச்சயம் தமன்னாகிட்டே இருக்கு. படங்களைத் தேர்ந்தெடுக்கிறவிதம், பெரிய ஹீரோக்கள்னு தெளிவான ரூட்ல போய்ட்டு இருக்காங்க. 'ஸ்பாட்ல பயங்கர சின்ஸியர்'னு கேள்விப்பட்டேன். அதுவே பெரிய ப்ளஸ். அதிசயமா எப்பவாவது சந்திப்போம். ஜாலியா பேசிச் சிரிச்சுட்டு இருப்போம். ஆல் தி பெஸ்ட் தமன்னா!'

நன்றி விகடன்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil