நடிகரும், இயக்குநருமான விஜய டி.இராஜேந்தர் தனது மகள் தமிழ் இலக்கியாவிற்கு காதும், காதும் வைத்தாற்போல் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து வைத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் ஹாட் நியூஸ் பரவியுள்ளது.
டி. இராஜேந்தரின் ஒரே பெண்ணான தமிழ் இலக்கியாவின் திருமணம் இப்படி ரகசியமாக நடந்து முடிந்திருப்பதைக் கேள்விப்பட்டு திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறது. டி.ஆரா இப்படிச் செய்தார் என்று..? கொண்டாட்டமாக நடந்திருக்க வேண்டியதாச்சே.. டி.ஆர். இதற்கு எப்படி ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை..
தமிழ்க் கலாச்சாரம், குடும்பம் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கும் டி.ஆரின் இந்த நடவடிக்கையின் காரணம் என்ன என்பது தெரியாமல் போனாலும், தமிழ் இலக்கியாவுக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
இந்தச் சூழலில் சென்ற வாரம் வெளி வந்த ஒரு பத்திரிகையில்கூட “தமிழ் இலக்கியாவின் திருமணம் முடிந்த பின்புதான் சிம்புவின் திருமணம்” என்று டி.ஆர். பேட்டியளித்திருந்தார். இலக்கியாவின் திருமணம் முடிந்து ஒரு மாதமாகிவிட்டது என்கிறார்கள். பின்பு ஏன் டி.ஆர். தன் மகள் இலக்கியாவின் திருமணத்தை மறைக்கிறார் என்றும் தெரியவில்லை என்கிறார்கள் திரையுலக நண்பர்கள்.
என்ன ஆனாலும் சரி.. டி.ஆர். வீட்டு முதல் பிரம்மாண்டமான கல்யாணம் சிம்புவுடையதாகத்தான் இருக்கும் போலிருக்கிறது..!
பொண்ணு யாரோ..?
நடிகர் சிம்புவின் தங்கை தமிழ் இலக்கியாவுக்கு ரகசியத் திருமணம்..!
நடிகர் சிம்புவின் தங்கை தமிழ் இலக்கியாவுக்கு ரகசியத் திருமணம்..!
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment