புதுசு -கூட்டணி சேரும் கேரளா நடிகை -ரஞ்சிதா சுறு சுறு

14 May 2010 ·

குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நித்தியானந்தாவின் நீதிமன்ற காவலை வரும் 26-ம் தேதி வரை நீட்டிக்கிறேன். மேலும் சிறைக்குள் அவருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தையும் வழக்கம்போல் வழங்குமாறும் உத்தரவிடுகிறேன்...' -ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயலட்சுமி இப்படி உத்தரவிட... நித்தியானந்தாவின் நீதிமன்ற காவல் நீள்கிறது!

நித்தியானந்தாவின் விஷயங்களைக் கூர்ந்து கவனித்து வரும் பெங்களூருவைச் சேர்ந்த அவரது நெருக்கமான வழக்கறிஞர்கள் நம்மிடம்,

''நித்தியானந்தாவை கூடிய சீக்கிரம் விடுவித்து, அவரை மறுபடியும் பிடதி ஆசிரமத்தின் தலைவராக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய ஆசிரமத்தின் தலைவரான சதானந்தாவின் நோக்கம். அதற்கான வேலைகளில் முழு மூச்சாக அவர் இறங்கியிருக்கிறார். 1995-ம் வருஷத்துல நித்தியானந்தா, ராமகிருஷ்ணா மடத்துல இருந்தாரு. அந்த சமயத்துல அவரோட அறையிலதங்கியிருந்தவர், கோபால ராமகிருஷ்ணன். அவரை அண்மையில தேடிக் கண்டுபிடிச்சு, பிடதி ஆசிரமத்துக்கு அழைச்சிட்டு வந்திருக்காரு சதானந்தா. 'நித்தியானந்தா, ராஜசேகராக இருந்த காலத்துல எப்படியெல்லாம் இருந்தாரு...' என்பதை கோபாலராமகிருஷ்ணன் வாயாலேயே சொல்லவைத்து வீடியோ பதிவு செய்திருக்காரு. அதில், 'நானும் ராஜசேகரும் ராமகிருஷ்ணா மடத்துல கிச்சன் டிபார்ட்மென்ட்டை கவனிச்சிட்டு இருந்தோம்அவனைப்போல ஒரு சின்சியரான ஆளைப் பார்க்கவே முடியாது. கனிவு, பொறுமை, அறிவு ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவமாக இருந்தான். அவன்மேல இப்போ சொல்ற குற்றச்சாட்டுகள் எதுவும் நம்புற மாதிரியே இல்ல. பொய் நீண்ட நாளைக்கு உயிரோடு இருக்காது. என் நண்பன் ராஜசேகர் விரைவிலேயே குற்றமற்றவன்னு ஊரே சொல்லப் போகுது...' என்றெல்லாம் பேசியிருக்கிறாராம் கோபால ராமகிருஷ்ணன். இந்த வீடியோவும் அதிலுள்ள செய்திகளும் நித்தியானந்தாவுக்கு ஆதரவாக சில மீடியாக்களில் சீக்கிரம் வரப்போகுது. அதற்கான வேலைகளை சதானந்தா செஞ்சுட்டாரு.

கடந்த முறை நித்தியானந்தாவை கோர்ட்டுக்குக் கொண்டுவந்தபோது... அவர் சதானந்தாவிடம், 'பணத்தை பத்திக் கவலைப்பட வேண்டாம். எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல... சீக்கிரம் என்னை வெளியே கொண்டுவரும் வழியைப் பாருங்க...'ன்னு சொல்லியிருக்காரு. அதுக்குப் பிறகுதான் சதானந்தா அதிரடியாக பல வேலைகள்ல இறங்கினாரு.

பெங்களூருவுல நித்தியானந்தாவுக்காக ஆஜரான வழக்கறிஞர்களை மாத்திட்டு,டெல்லியில இருக்கிற பிரபலமான வழக்கறிஞர் நிதின் பிரதான் என்பவரை நியமிச்சுருக்காரு. அவர் ஆஜரானா, எந்த கேஸையும் தவிடு பொடியாக்கிடுவாருன்னு டெல்லி வழக்கறிஞர்கள் மத்தியில பேச்சு உண்டு. நித்தியானந்தாவை ஜெயில்ல சந்திச்சுப் பேசவும் அந்த லாயர் அனுமதி கேட்டிருக்காராம். அதுக்குப்பிறகு வழக்குல அதிரடி திருப்பங்கள் வரும். அதை நீங்களும் பார்க்கத்தான் போறீங்க.

நித்தியானந்தாவுக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில, அவர் ஆண்மை இல்லாதவர்னு சொல்லியிருப்பதாவும் ஒரு தகவல் பரவுது. அதை நித்தியானந்தா தரப்பு உறுதியாக மறுக்காத பட்சத்தில், இந்த கேஸ் அடிபட்டுரும். அந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை வாங்கும் முயற்சியில் நித்தியானந்தா தரப்பு தீவிரமா இறங்கியிருக்குனுகூட சொல்றாங்க..!'' என்கிறார்கள்.

ஆனால், வழக்கை விசாரிக்கும் கர்நாடக சி.ஐ.டி. டி.ஐ.ஜி-யான ஷரன் ரெட்டி நம்மிடம், ''நித்தியானந்தா வழக்கைப் பொறுத்தவரை எங்களுக்கு முக்கியமான சாட்சி நடிகை ரஞ்சிதாதான்! அந்தப் பொண்ணு இதுவரைக்கும் ஆஜராகல. அவங்களை கைதுசெய்து விசாரணை நடத்தவேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. ரஞ்சிதாவோட வழக்கறிஞரிடம் பேசியிருக்கோம். அவங்க ரஞ்சிதாவை வழக்கு விசாரணைக்கு அழைத்து வருவதாகவும், போதிய பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டிருக்காங்க. அதனால நம்பிக்கையோட இருக்கோம். வேற யாராவது நித்தியானந்தா மேல புகார் கொடுக்க நினைச்சாலும், எங்ககிட்ட வந்து புகார் கொடுக்கலாம். அவங்களைப்பற்றிய விவரங்களை ரகசியமா வெச்சிருப்போம். ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் உண்மையானதான்னு கண்டுபிடிக்க ஆசிரமத்துல இருந்து கைப்பற்றிய வீடியோ ஆதாரங்களை ஹைதராபாத்துக்கு அனுப்பியிருக்கோம்!'' என்றார்.

நித்தியானந்தா திடீரென தனது வழக்கறிஞரை மாற்றியதைப் போலவே ரஞ்சிதாவும் தனது வழக்கறிஞரை மாற்றியிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரான சுதா ராமலிங்கம், ரஞ்சிதாவுக்காக ஆஜராகப் போகிறாராம். கேரள முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சரான ஜோசப், விமானத்தில் தனது முன் ஸீட்டில் உட்கார்ந்திருந்த கேரளாவைச் சேர்ந்த டி.வி. நடிகையான லட்சுமி கோபகுமாரிடம் சில்மிஷம் செய்ததாக சில வருடங்களுக்கு முன்பு புகார் கிளம்பியது. அந்த வழக்கில் அமைச்சருக்கு எதிராக நடிகை லட்சுமி கோபகுமார் சார்பாக களமிறங்கியவர்தான் இந்த சுதா ராமலிங்கம். ரஞ்சிதாவும், லட்சுமி கோபகுமாரும் நெருங்கிய தோழிகளாம். அப்படித்தான் வக்கீல் மாற்றம் என்கிறார்கள்.

வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடம் பேசினோம். ''இந்த வழக்கு சம்பந்தமா நான் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. தேவைப்படும்போது நானே பேசுகிறேன்...'' என்று மட்டும் சொன்னார்.

''முடிந்தவரைக்கும் ரஞ்சிதாவை வெளியிலயே கொண்டுவராம இந்த வழக்கை முடிக்கிறதுக்கு எல்லா வகையிலும் முயற்சிகள் நடந்துட்டு இருக்கு. ரஞ்சிதாவோட வழக்கறிஞரும் அதற்கான வேலைகள்ல இறங்கியிருக்காங்க. நித்தியானந்தா விவகாரத்துல இருந்து தன்னை முழுமையா விடுவிச்சுக்கிட்டு, மறுபடியும் முழு நேர நடிகையாகவே களமிறங்க ரஞ்சிதா திட்டமிட்டிருக்காங்க. கேரளாவுல ஒரு டி.வி. சீரியல்ல நடிக்கிறதுக்கு லட்சுமிகோபகுமார் மூலமாகவே பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்காங்க...'' என்றனர், ரஞ்சிதாவை பற்றிய விவரமறிந்த சிலர்

vikatan

1 comments:

www.thalaivan.com said...
May 16, 2010 at 2:57 PM  

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:


THANKS

Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil