இந்த விழாவில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தலைமையில் நடிகர்- நடிகைகள் குழு பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழர்களை அழித்த சிங்கள அரசு துணையுடன் நடத்தப்படும் இந்த விழா வில் நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொள்ளக் கூடாது என்று பல்வேறு தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அமிதாப்பச்சன் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதுபற்றி கருத்து தெரிவித்த நடிகர் அமிதாப்பச்சன், யாருடைய மன உணர்வும் பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளமாட்டேன் என்றார். எனவே கொழும்பு பட விழாவில் அமிதாப்பச்சன் கலந்து கொள்ளமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அமிதாப்பச்சன் திட்டமிட்டப்படி கொழும்பு பட விழாவில் கலந்து கொள்வார் என்று சிங்கள அதிகாரிகள் கூறி வருகிறார்கள். இதை பொருளாதார அபிவிருத்தி மந்திரி லட்சுமண் யாப்பா அயே வர்தன உறுதி செய்துள்ளார்.
கொழும்பு சமுத்ரா ஓட்டலில் நடந்த விழாவில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கொழும்பில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழாவில் நிச்சயம் நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொள்வார். அவர் வருவதை உறுதி செய்துள்ளார். அவர் வருகையை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை திரைப்பட விழாவுக்கு அமிதாப்பச்சன் வருவதை யாராலும் தடுக்க முடியாது: சிங்கள மந்திரி கொக்கரிப்பு
இலங்கை திரைப்பட விழாவுக்கு அமிதாப்பச்சன் வருவதை யாராலும் தடுக்க முடியாது: சிங்கள மந்திரி கொக்கரிப்பு
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழா இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற உள்ளது.
பத்திரிக்கையாளர்கள் மீது ஹிருத்திக் பாய்ச்சல்
ஷீரடிக்கு வந்திருந்த நடிகர் ஹிருத்திக் ரோஷன், பத்திரிக்கையாளர்கள் தனது தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவதால் தான் நிம்மதி இழந்து விட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஷீரடியில் ஹிருத்திக் ரோஷனை படம் பிடித்ததற்காக தங்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாக பத்திரிக்கையாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த ஹிருத்திக், கோயிலுக்குள் நிரூபர்கள் எப்படி வந்தார்கள் என என்னால் நம்ப முடியவில்லை; எனது வார்த்தைகள் யாரையாவது புண்படுத்தி இருந்தால், தயவு செய்து மன்னித்து விடுங்கள்; ஆனால் யோசித்து பார்த்தால், தனது குடும்பத்தின் நிம்மதி பாதிக்கப்படும் போதும் எந்தவொரு மனிதனும் இப்படித் தான் நடந்து கொள்வான்; திரையுலக்கிற்கு வந்த 10 வருடங்களில் நிம்மதி பாதிக்கப்படுவதாக இன்று தான் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன் என அவர் தெரிவித்தார். கைட்ஸ் படம் ரிலீஸ் ஆனதை அடுத்து, ஷீரடி கோயிலுக்கு தனது குடும்பத்துடன் ஹிருத்திக் சென்றிருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளது. தனது ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆனதும் ஷீரடிக்கு வருவது ஹிருத்திக்கின் வழக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment