ஹாய் மதன்-கேள்வி பதில் |
எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், எஸ்.எஸ்.ராசேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என அனைவருமே சிறிய, மெல்லிய மீசையில் ஜொலித்த ரகசியம் என்ன?
ஹாலிவுட் பாதிப்பு இல்லாமல் நம்ம இந்திய சினிமா இல்லை!
அதாவது, 50-களில் எரால் ஃப்ளைன், க்ளார்க் கேபிள் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் அப்படி மீசை வைத்திருந்ததுதான் காரணம். இங்கு மட்டுமில்லை. ராஜ்கபூர், குருதத் போன்ற ஹிந்தி நடிகர்களும் அதே மாதிரி மீசை வைத்துக்கொண்டார்கள். இன்று ஹாலிவுட் நட்சத்திரங்கள் மீசை வைத்துக்கொள்ளவில்லை. நாமும்
திராவிட மொழிகளுக்குத் தாய் சம்ஸ்கிருதமா?
தாய் அல்ல, ஜஸ்ட் நண்பன்!
திராவிட மண்ணில் முதலில் பேசப்பட்ட, எழுதப்பட்ட மிகப் பண்டைய மொழி தமிழ். திராவிட மொழிகளுக்குத் தாயும் தமிழே!
அடுத்த பழமையான திராவிட மொழி கன்னடம். பிறகு தெலுங்கு, கடைசியாக மலையாளம். சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு சம்ஸ்கிருதம் தெற்கு நோக்கிப் பிரவேசித்து, தமிழை வெல்ல முடியாமல் அதனுடன் கை குலுக்கியது. அதன் காரணமாக, கி.பி. 500-ல் இருந்து கி.பி. 850 வரை சம்ஸ்கிருத வார்த்தைகள் தமிழில் கலந்தன. தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் தலை தூக்கிய பிறகு, மீண்டும் தமிழ் புதுப்பொலிவு பெற்றது. (நேற்று வரை 'ஹாஸ்யம்' என்று சம்ஸ்கிருத மொழியில் சொல்லிவந்த நாம், இன்று 'நகைச்சுவை' என்கிறோம்!) இன்று ஆங்கில வார்த்தைகள் தமிழுக்குள் புகுந்து விளையாடி வருவது வேறு விஷயம். ஆனால், கன்னடத்திலும், தெலுங்கிலும் இன்றளவும் சம்ஸ்கிருத பாதிப்பு அதிகம். தமிழின் பாதிப்பு பெரிய அளவில் உள்ள மொழி மலையாளம் மட்டும்தான். நாம் பயன்படுத்துவதை நிறுத்திவிட்ட, தமிழின் பண்டைய சங்க கால வார்த்தைகள் இன்றும்கூட சரளமாகப் புழக்கத்தில் இருக்கும் மொழி... மலையாளம்!
கோயிலுக்குச் சென்று அங்கு வரும் இளம் பெண்களின் அழகை ரசித்தது உண்டா? (மறைக்காமல் கூறுங்கள்!)
இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது?! இளம் பெண்களின் அழகை ரசிப்பதற்காக ரெகுலராகவே கோயிலுக்குச் சென்றதுகூட உண்டு (இப்ப இல்லை!).
வெறும் தமிழ் மொழியை மட்டும் தெரிந்துகொண்டு நாடாளுமன்ற விவாதங்களில் செயல்பட முடியாதா என்ன?
ஐ.நா-வில் நூற்றுக்கணக்கான மொழிகளில் பேசுபவர்கள் ஒன்று கூடிச் செயல்படும்போது, நாடாளுமன்றத்தில் ஏன் முடியாது? பல மொழிகள் பேசும் மக்கள் அடங்கிய நாடு இந்தியா. இந்த நாட்டுக்கான நாடாளுமன்றத்திலும் பல மொழிகள் ஒலிப்பதுதானே அழகு? டெக்னாலஜி விசுவரூபம் எடுத்திருக்கும் இன்றைய நிலையில், ஏன் அதற்கான வசதிகளைச் செய்து தருவதில் இவ்வளவு பிரச்னை?! என்னைக் கேட்டால், தமிழ் மக்களின் பிரநிதிகள் அனைவருமே நாடாளுமன்றத்தில் தமிழில்தான் உரையாற்ற வேண்டும் என்பேன்
பிற பறவைகளைப்போல மயில், தொடர்ச்சியாகப் பறக்கக் கூடிய பறவை அல்ல. திருவிளையாடல் திரைப்படத்தில் மயில் மீது ஏறி முருகன் உலகைச் சுற்றி வந்த விந்தை எப்படி நிகழ்ந்தது?
டைனோசர்கள் பறக்குமா? இன்றைய பறவைகள் அனைத்தும் டைனோசர்களின் வாரிசுகள்தான்! அதேபோல இன்று பறக்கும் திறனை இழந்த மயில் ஒரு காலத்தில் தொடர்ந்து பறந்திருக்குமோ?! முருகன் மயில் மீது அமர்ந்து பறந்த காலத்தை நீங்கள் குறிப்பிட்டால், என்னால் உங்கள் கேள்விக்குத் திட்டவட்டமாகப் பதில் சொல்லிவிட முடியும்
புவியீர்ப்பு விசைக்கு எதிராக நாம் மேல் நோக்கி வளர்கிறோமே. எப்படி?
புவியீர்ப்புச் சக்தி இல்லாமல் இருந்து... 'அவதார்' படத்தில் வரும் வேற்றுக் கிரகவாசிகளைப்போல நாம் எல்லோரும் 10 அடி உயரத்துக்கு வளர்ந்து... கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்
தனிநபர் துதி நம் நாட்டில் அதிகமாக இருப்பதற்குக் காரணம் என்ன?
அந்தக் காலத்தில் இருந்து இன்று வரை ஆயிரக்கணக்கான கடவுள்களை வழிபடுபவர்கள் இந்தியர்கள். அதிலும் திருப்தி இல்லாமல் தனிநபர்களையும் துதி பாடி வழிபட ஆரம்பித்துவிட்டதால் இந்த நிலைமை. இது, நடிகைகளுக்குக் கோயில் கட்டும் அளவுக்குப் போய்விட்டது மேலும் தமாஷ். பகுத்தறிவை வளர்க்க வேண்டும் என்று முழங்கும் அரசியல் கட்சிகளே 'தனிநபர் துதி'யையும் கூடவே வளர்த்துவிட்டிருப்பது கூடுதல் தமாஷ்!
'காமதேவன்' என ஓர் இறைவன் நிஜமாகவே உண்டா?
காமதேவன், காம அரக்கன் என்று ரெண்டு பேர் உண்டு. உஷாராக இருக்கவும்!
-vikatan
0 comments:
Post a Comment