இயற்கை வளங்கள் மீது சட்ட ரீதியாக உரிமையுள்ள மத்திய அரசுக்கே இயற்கை எரிவாயு விலையை நிர்ணயிக்க அதிகாரம் உண்டு என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால், அம்பானி சகோதரர் இடையிலான இயற்கை எரிவாயு வழக்கில், மூத்த சகோதரர் முகேஷ் அம்பானிக்கு சாதக நிலை ஏற்பட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடமிருந்து அனில் அம்பானிக்கு சொந்தமான ஆர்.என்.ஆர்.எல். நிறுவனத்துக்கு எரிவாயு பெறுவதற்காக ஒப்பந்தம் செய்தது. ஆனால், அதன் விலை தொடர்பாக அம்பானி சகோதரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இன்று அளித்த தீர்ப்பில், அம்பானி சகோதர்களுக்கு இடையே கடந்த 2005-ல் ஏற்பட்ட ஒப்பந்தம் சட்ட ரீதியாக செல்லாது என்று கூறியுள்ளது. மேலும், இயற்கை வளங்கள் மீது உரிமையுள்ள மத்திய அரசே, அந்த வளங்கள் பயன்படுத்துபவர்களுக்கு சென்று அடையும் வரை உரிமையாளர் என்பதால், இயற்கை எரிவாயு விலையை நிர்ணயிக்க மத்திய அரசுக்கே அதிகாரம் உண்டு என்று தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், மத்திய அரசின் கொள்கைக்கு ஏற்ற வகையில் 6 வார காலத்துக்குள் புதிய ஒப்பந்தம் செய்துகொள்ளுமாறு அம்பானி சகோதரர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். முகேஷ் அம்பானிக்கும், அவரது இளைய சகோதரர் அனில் அம்பானிக்கும் இடையே சொத்துப் பிரிக்கும் போது, கடந்த 2005 ஜுன் மாதம் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி கிருஷ்ணா - கோதாவரி படுகையில் இருந்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனம் உற்பத்தி செய்யும் இயற்கை எரிவாயுவை, அனில் அம்பானியின் சொந்தமான ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்ஸ் லிமிடெட்டின் (ஆர்.என்.ஆர்.எல்) டாத்ரி மின் உற்பத்தி நிலையத்துக்கு வழங்க வேண்டும் என்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும், இயற்கை எரிவாயுவின் விலை தொடர்பாக சகோதரர்கள் இடையே மோதல் உண்டானது. இப்பிரச்னை தொடர்பான வழக்கில், மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அம்பானி சகோதரர்கள் இடையே சொத்து பிரிப்பின் போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, டாத்ரி மின் உற்பத்தி நிலையத்துக்கு ஒரு யூனிட் 2.34 டாலர் விலையில் இயற்கை எரிவாயுவை முகேஷ் அம்பானி வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து முகேஷ் அம்பானி உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார். பின்னர், இவ்வழக்கில் இணைந்து கொண்ட மத்திய பெட்ரோலிய அமைச்சகம், சிறப்பு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், தேசிய சொத்தான இயற்கை எரிவாயுவை, மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இயற்கை எரிவாயுவை விநியோகம் செய்வதை ஒழுஙகுபடுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் சூழலில், கடந்த 2006 ஆம் ஆண்டு இயற்கை எரிவாயுவின் விலை ஒரு யூனிட் 4.2 டாலர் என மத்திய அரசு உயர்த்தியது. மேலும், பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் நிலையத்துக்கு, தனியார் நிறுவனத்தைவிட குறைந்த விலையில் இயற்கை எரிவாயுவை வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த விலை உயர்வையும் எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அனில் அம்பானி மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரியாக்ஷன்ஸ்... தமக்கு சாதகாமான தீர்ப்பு கிடைத்துள்ள நிலையில், மத்திய அரசு ஒதுக்கீடு செய்தால் கேஜி-6 படுகையில் இருந்து அனில் அம்பானியில் ஆர்.என்.ஆர்.எல் நிறுவனத்துக்கு இயற்கை எரிவாயுவை ஒரு யூனிட் 4.2 டாலர் என்ற விலைக்கு தர தயாராக இருப்பதாக முகேஷ் அம்பானி குழுமம் கூறியுள்ளது. தனக்கு பாதகமாக தீர்ப்பு இருந்ததால், நீதிமன்றத்திலிருந்து அவசரமாக வெளியேறினார்ம் அனில் அம்பானி. தீர்ப்பு தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கருத்து கேட்டபோது, அவர் எதுவும் கூறாமல் அங்கிருந்து தனது காரில் புறப்பட்டுச் சென்றார். இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று அனில் அம்பானி தரப்பு கூறுகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்றுள்ள பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, "மத்திய அரசுக்கு எதிராக எத்தகைய பிரசாரம் மேற்கொண்டாலும் தேசமே முக்கியம் என்ற வகையில் அரசின் இறையாண்மை நிலைநாட்டும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார்இயற்கை எரிவாயு மீது அம்பானி குடும்பத்துக்கு சட்ட உரிமை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இயற்கை எரிவாயு மீது அம்பானி குடும்பத்துக்கு சட்ட உரிமை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment