மும்பை: நாம் தமிழர் இயக்கத்தினரின் தொடர் உண்ணா விரதம் மற்றும் ஆர்ப்பாட்டத்தையடுத்து, கொழும்பில் நடைபெறும் சர்வதேச இந்தியப் படவிழாவில் (ஐஃபா) பங்கேற்பதில்லை என நடிகர் அமிதாப் அறிவித்துள்ளார்.
மேலும் ஐஃபா அமைப்பின் தூதர் பொறுப்பிலிருந்தும் அவர் விலகிக் கொண்டுள்ளார். இத்தகவலை நாம் தமிழர் அமைப்பின் தலைவரும் இயக்குநருமான சீமான் இன்று வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சீமான் கூறியதாவது:
இலங்கையின் கொடூர முகத்தை மறைப்பதற்காக இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசு கொழும்பில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை வரும் ஜுன் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன்முக்கியப் பங்காற்றுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழர்களின்இனப் படுகொலையை மறைப்பதற்காக நடத்தப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமிதாப் கலந்து கொள்வதற்குகண்டனம் தெரிவித்து எமது நாம் தமிழர் தொண்டர்கள் மும்பையில் உள்ள அமிதாப் அவர்களின் வீட்டு முன் சில வாரங்களுக்கு முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
அமிதாப் அவர்களைச் சந்தித்து 10 கோடித்தமிழர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்று கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
அதன் தொடர்ச்சியாக மீண்டும் கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழர்களுக்கு சாதகமாக கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என்று இறுதி முடிவு எடுக்கும்படி வற்புறுத்தியும் நடிகர் அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் மும்பையில் வசிக்கும் பிரதிக்ஷா வீட்டின் முன் நேற்று காலை முதல் நாம் தமிழர் இயக்கத்தால் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பங்கேற்பதில்லை...
நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டத்தின் விளைவாக அது குறித்து பரீசீலித்த அமிதாப் ஐஃபா விருது வழங்கும் கமிட்டியில் இருந்து, விலகிக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். மேலும் தனது மகன் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயும் இதில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று புதன் கிழமை ஐஃபா விருது வழங்கும் கமிட்டியானது அமிதாப் அவர்களை தூதர் பதவியில் இருந்து விடுவித்தது.
அமிதாப்புக்கு பதில் நடிகர் சல்மான் கான் அவர்களை புதிய தூதராக இன்று காலை நியமனம் செய்துள்ளது.
லாரா தத்தா, விவேக் ஓபராய் ஆகியோரும் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழர்களின் ஒப்பாரியும் மரண ஓலமும் ஆட்சியில் இருக்கும் இந்தியர்களுக்கும் அவர்களை அண்டி இருக்கும் திராவிடர்களுக்கும், சில தமிழர்களுக்கும் புரியாத நிலையில், எங்கோ உத்திரப்பிரதேசத்தில் பிறந்த நடிகர் அமிதாப் அவர்களுக்கு புரிந்திருக்கின்றது. அதனை அவர் உணர்ந்து கொண்டு கொழும்பு சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்ல மறுத்திருக்கின்றார்.
அவரது பெருந்தன்மைக்கும் இந்தியனாக மதித்து எமது குரலுக்கு செவிமடுத்த பாங்குக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இனி புதிதாகப்பொறுப்பேற்றுள்ள சல்மான்கான், லாராதத்தா, விவேக் ஓபராய் ஆகியோருக்கு எதிரான போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.
இதுகுறித்து இன்னும் அமிதாப்பின் கருத்து தெரிய வரவில்லை
அமிதாப் ஐஃபா விருது வழங்கும் கமிட்டியில் இருந்து, விலகிக்கொள்ள விருப்பம்
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment