கிட்டத்தட்ட பெண்கள், ஆண்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனிப்பது இல்லை. ஓர் ஆண் நம்மிடம் பேசும்போது, வெறுமனே காது கொடுத்துக் கேட்பது மட்டும் கவனிப்பது ஆகாது. மனதைக் கொடுத்து அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் கேட்பதுதான் கவனிப்பதாகும். ஓர் ஆண், ஒரு பெண்ணிடம் எதைப்பற்றிப் பேசினாலும், அது தனக்குப் பிடித்த விஷயமா, பிடிக்காத ஒன்றா என்பதை ஆராய்வதிலேயே முழுக் கவனத்தையும் செலவிடுவாள். அந்த விஷயம் தனது கொள்கையை எங்காவது காயப் படுத்துகிறதா, இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா, கூடாதா என்று அவளுக்குள்ளேயே ஒரு குரல் ஒலித்துக்கொண்டு இருக்கும். அந்த உள்ளலிக் குரலைக் கொஞ்ச நேரம் மியூட் செய்துவிட்டு, உங்கள் முன் உயிரும், சதையும், உணர்வுமாக நிற்கும் அவருடைய வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்கள். ஒருவனின் வார்த்தைகளை நீங்கள் உள்ளபடியே முழுக் கவனத்துடன் கேட்கும்போது, அவன் கண்களுக்கு நீங்கள் தேவதையாகத் தெரிவீர்கள். 'ஆஹா! நாம் பேசுவதைக் கேட்பதற்கு இந்த உலகத்தில் ஒருத்தி இருக்கிறாள்' என்று உளமகிழ்ந்து, அகம் நெகிழ்ந்து உங்களுடன் ஒரு நெருக்கத்தை உணர்வான் அந்த அப்பாவி. அதற்காக உங்களிடம் பிளேடு போடுபவர்களிடம் எல்லாம் நீங்கள் பொறுமையாகக் காது கொடுங்கள் என்று சொல்லவில்லை. உங்கள் நெருங்கிய நட்பு வட்டம், மனம் கவர்ந்தவர்களிடமாவது நீங்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டியது அவசியம்! அழகுக் குட்டிச் செல்லம்! கொஞ்சம் நேர்மையாக ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்வோமா? முதல் பார்வையில் நாம் எப்படித் தோற்றமளிக்கிறோம் என்பதும் முக்கியம். அழுக்குச் சட்டை, தொளதொள பேன்ட், முள் தாடி, காடாக மண்டிக்கிடக்கும் தலைமுடியுடன் ஒரு ஆணை நீங்கள் பார்த்தால், அவரைப்பற்றி என்ன நினைப்பீர்கள். அதே மனநிலைதான் அவர்களுக்கும் பெண்களைப் பார்க்கும்போது. நீங்கள் கனிவானவர்தான், ஜீனியஸ்தான், நண்பர்களுக்கு என்றால் எந்த உதவியும் செய்யக்கூடியவர்தான். ஆனால், உங்களுக்கு நண்பர்கள் வேண்டுமே! அத்தனை தகுதிகள் இருந்தாலும், சின்ன பவுடர் பூச்சு, ஒற்றைச் சுருள் நெற்றியில் புரளும் கூந்தல் பின்னல், பேசும்போது மின்மினியாகச் சிலுசிலுக்கும் குட்டித் தோடுகள், உங்களுக்குப் பொருந்தும் நிறத்தில் கச்சிதமான ஆடைகள் என ஒரு கண்கவர் பொக்கேவாக இருந் தால் உங்கள் மதிப்பு பல மடங்குகளில் எகிறும். பேரழகி, பிரபஞ்ச அழகியாகத் தோற்றமளிக்க வேண்டாம். 'மச்சான் கீதா என் ஃப்ரெண்டுடா!' என்று மற்றவர்களிடம் பெருமிதம்கொள்ளும் சந்தோஷத்தை உங்கள் நண்பனுக்குக் கொடுக்கும்விதத்தில் உங்கள் தோற்றம் இருந்தால் யாவரும் நலம்! என்னைக் கொஞ்சம் மாற்றி... 'நான் குண்டாக இருக்கிறேனா?', 'நான் அழகாக இல்லையோ?', 'அவள் என்னைவிட அழகோ?', 'என்னை உனக்குப் பிடிக்கவில்லையா?', 'நான் உனக்குப் பொருத்தமானவள் இல்லையா?', 'நீ என்னை உண்மையிலேயே காதலிக்கிறாயா?' இப்படியெல்லாம் உங்கள் கணவரிடமோ, காதலரிடமோ தொடர்ந்து சந்தேகம் எழுப்பிக்கொண்டே இருக்காதீர்கள். ஒரு கட்டத்தில் அவர்களின் ஈகோவை இந்தக் கேள்விகளே தூண்டிவிட்டு, 'ஏன் அவளுக்கு இவ்வளவு சந்தேகம்? ஒருவேளை அப்படித்தானோ?!' என்று உங்கள் சந்தேகங்களே தேவை இல்லாத சங்கடங்களில் கொண்டுவந்து நிறுத்தும். இதுபோன்ற அர்த்தம் பொருத்தம் இல்லாத சந்தேகங்கள் உங்களுக்குள் உதித்துவிட்டால், அவற்றை எந்த ஆறுதலும் சமாதானமும் களைந்துவிடாது. ஏனென்றால், அந்தச் சந்தேகங்கள் அனைத்தும் மாயை, கற்பனை. கற்பனையான ஒரு பிரச்னைக்கு எப்படி ஒரு தீர்வினைக் கண்டுபிடிக்க முடியும். உங்கள் மனதில் இருக்கும் தேவை இல்லாத பயம், பதற்றங்களைக் களைவதுதான் இதற்கு ஒரே தீர்வு. அந்தப் பதற்றங்களை உங்கள் பார்ட்னர் மனதுக்குள் செலுத்திவிடாமல், இருவருமாக இணைந்து ஒரு தீர்வினை எட்டுங்கள்! இவன்தானா... இவன்தானா? உங்களவனை ஃபிக்ஸ் செய்துவிட்டீர்கள். ஆனால், 'இவன்தானா... இவன்தானா?' என்று இன்னும் உள்ளுக்குள் சின்னதாக ஒரு சந்தேகம் உருண்டுகொண்டே இருக்கிறது. எப்படி அவனை கன்ஃபார்ம் செய்வது? வேறு வழியே இல்லை... அவனை முழுமையாக நம்பி, உங்கள் நம்பிக்கைக்கு அவன் எந்தளவுக்கு உரியவன் என்பதை உங்கள் உள்மனம் உணர்வதுதான் ஒரே வழி. 'தி கேர்ள் திங்' என்பார்கள். ஒருவனுடனான சில நாள், சில மணி நேரங்களிலேயே உங்களுக்குத் தெரிந்துவிடும்... இவன் நமக்கானவனா இல்லையா என்று! ஆனால், அந்த உணர்வுத் தெளிவு வரும் வரை உங்களிடம் இருக்கும் அத்தனை அன்பையும் அவனுக்கு வாரி வழங்குங்கள். அவனிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு, தோழமை, காதல் ஆகியவற்றைக் காட்டிலும் நீங்கள் வெளிப்படுத்தும் அன்பின் அடர்த்தி அதிகமாக இருக்கட்டும். அந்த அடர்த்தியின் பிரதிபலிப்புகளே 'அவன் யார்?' என்பதை உங்களுக்கு உணர்த்திவிடும். ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள்... நீர் பாய்ச்சப்படும் புற்கள்தான் பளிச் பச்சையுடன் பசுமையை வெளிப்படுத்தும். ஆல் தி பெஸ்ட் கேர்ள்ஸ்! -vikatan
ஸாரி ஜென்டில்மேன்... இந்த ஒரு வரி மட்டும்தான் உங்களுக்கு. இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க உங்களைச் சமாளிக்க, பெண்களுக்கு டிப்ஸ் கொடுக்கப்போகிறது. நீங்களும் படித்துத் தெரிந்துகொண்டால், கொஞ்சம் உஷா ராக இருக்கலாம்!ஓ.கே. லேடீஸ்... இந்த உலகின் எந்த மூலையில் இருந்தாலும், வருடத்தின் எந்த நாளிலும், ஒருநாளின் எந்த நேரத்திலும் 'ஆண்களை' எதிர்கொள்ளாமல் உங்களால் இருக்க முடியாது. அப்பா, சகோதரன், நண்பன், ஆசிரியர், காதலன், கணவன், சக ஊழியர், மேலதிகாரி, கடைநிலை ஊழியர், டிரைவர், மகன், மருமகன் என எங்கெங்கு காணிணும் ஆண்கள். உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, ஆண்களுடன் இணைந்துதான் பல சமயங்களில் நீங்கள் செயல் பட வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும்போது, அவர்களை முழுக்கவே நீங்கள் உதாசீனப்படுத்திவிட முடியாது. உங்களுக்குச் சேவை செய்வதற்கு அவர்களுக்கும் உள்ளுக்குள் ஆசை இருந்தாலும், கொஞ்சம் கெத்து காட்டுவது அவர்கள் பழக்கம். சிலருக்கு உள்ளபடியே பெண்கள் என்றால் வேம்பாகக் கசக்கவும் செய்யும். பலருக்குத் தானாக முன்வந்து உங்களுக்கு உதவுவதற்குக் கூச்சமாக இருக்கும். அது போன்ற சமயங்களில், ஒரு சின்னப் புன்னகை, ஆதரவான தலையசைப்பு, கண்களில் தொனிக்கும் நட்பு... இவை போதும் எவரையும் உங்களை நோக்கிக் காந்தமாகக் கவர! வாருங்கள் பெண்களே, இந்த உலகை ஆள வந்ததாக எண்ணிக்கொண்டு இருக்கும் ஆண்களை ஆளலாம் என்று அழைக்கிறார் மேரி ஃபோர்லோ. 'Make Every Man Want You' புத்தகத்தில் ஓர் ஆயுளுக்குமான அனுபவங்களை டிப்ஸ்களாக வழங்குகிறார் மேரி.
கேளடி கண்மணி!
இவ்வளவுதான் ஆண்-"மொஸ்ட் வாண்டட் பெண்" ஆக ஆசையா இதோ சில டிப்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment