செல்போன்-இளைஞர்களுக்கு மூளை புற்றுநோய் அபாயம் கம்ப்யூட்டர் -பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்

25 May 2010 ·செல்போன் பயன்படுத்துவதால் மூளை புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தொடக்கத்தில் வசதியானவர்கள், தொழிலதிபர்கள் செல்போன் பயன்படுத்தினர். தற்போது இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைவரும் செல்போன் பயன்படுத்துகின்றனர். கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்கள், வகுப்பறைகளில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது. சில தனியார் நிறுவனங்கள் கூட, அலுவலகத்தில் செல்போன் பேச தடை விதித்துள்ளன.
இவற்றை மீறி, பல்கலைக்கழக, கல்லூரி வளாகத்தில்
மா
ணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்துகின்றனர். வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்கு தெரியாமல் எஸ்.எம்.எஸ் அனுப்புகின்றனர். கார், பைக், பஸ்களில் போகும்போது, சாலைகளில் நடந்து செல்லும் போது, வீட்டில் இருக்கும்போது இரவு, பகல் பாராமல் மணிக்கணக்கில் செல்போனில் பேசுகின்றனர். நண்பர்கள் அருகே இருந்தால் கூட எஸ்.எம்.எஸ். மூலம் சாட்டிங் செய்யும் அளவுக்கு, செல்போனுக்கு இன்றைய இளைஞர்கள் அடிமையாகி விட்டனர்.
சாலையில் நடக்கும்போது, வாகனத்தை ஓட்டும்போது செல்போனில் பேசினால் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. மேலும், அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உடல் நிலை பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர்.  இதுகுறித்து காது, மூக்கு, தொண்டை சிகிச்சை டாக்டர்கள்  கூறியதாவது:
ரேடியோ பிரீக்வன்சி (வானொலி அலைவரிசை) மூலம் செல்போன் செயல்படுகிறது. நமது உள் காது மற்றும் மூளை பகுதியும் அதே போன்ற அலைவரிசையில்தான் செயல்படுகின்றன. செல்போனை காதின் அருகில் வைத்து பேசுவதால், உள் காதின் செவித்திறன் கடுமையாக பாதிக்கிறது. இதுபோல் தொடர்ந்து பேசுபவர்களுக்கு முதலில் காதில் வலி ஏற்படும். இரைச்சல் உருவாகும், அதன்பின் காது கேட்கும் திறன் படிப்படியாக குறையும். இறுதியாக காது கேட்கும் திறன் முழுமையாக நின்றுவிடும்.
செல்போனில் தொடர்ந்து பேசுவதால், வெளி காது, நடு காது, உள் காது மற்றும் மூளையில் புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளன. மனநிலையும் பாதிக்கலாம். சில நேரங்களில் மயக்கம், தலை சுற்றல் போன்றவைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்த ஆராய்ச்சி தற்போது நடந்து வருகிறது. ஆனால் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் செல்போன் பேசுவதால் ஏற்படும் இந்த பாதிப்புகளை இதுவரை மறுக்கவில்லை.
செல்போன் பேசுவதால் பாதிக்கப்பட்டு காது வலி, காது சரியாக கேட்கவில்லை என்று தினமும் சராசரியாக 10 பேர் வருகின்றனர். இதில் இளைஞர்கள்தான் அதிகம். அவசர தேவைகளுக்கு மட்டும் செல்போனை பயன்படுத்தலாம். முடிந்த அளவு ஹெட்போன், புளுடூத் பயன்படுத்தி பேசலாம். இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்
===================================================================
கம்ப்யூட்டர் -பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்

கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 

கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை நடத்தினர்.அதில், கம்ப்யூட்டர், லேப்-டாப், ஐபாட் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு, நாளடைவில், தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிய வந்தது.கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிப்படும் அதிக சக்தி வாய்ந்த ஒளிக்கற்றைகள், மனித மூளையின் வழக்கமான செயல்பாடுகளை பாதிப்பதும் தெரிய வந்தது.மனித மூளை, காலை சூரிய வெளிச்சம் வந்தவுடன் இயங்க ஆரம்பித்து இரவு சூரிய ஒளி மங்கியவுடன் செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளும் வகையில் செயல்படுகிறது.இதை, மெலட்டோனின் என்ற ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது.

இது அறிவியல் விந்தையாக கருதப்படுகிறது.ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் நீல நிற வெளிச்சம், மெலட்டோனின் ஹார்மோன் செயல்பாட்டை பாதித்து, தூக்கத்தை கெடுப்பதாக தெரிவிக்கின்றனர். மனிதனின் கண்கள், நீல நிறத்தை பகல் பொழுதாக எடுத்துக் கொள்ளும் தகவமைப்பை பெற்றுள்ளது என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.இரவில் நிம்மதியாக தூங்க, நல்ல புத்தகங்களை படிப்பது சிறந்த வழி. தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்க்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சத்தை கொண்டு மெலட்டோனின் ஹார்மோன் இரவில் தூக்கம் வருவதை தவிர்த்து, விழிப்புடன் இருக்க, மூளையை தூண்டும். இதனால், தூக்கம் வருவதில் நாளடைவில் சிக்கல் எழும் என, நார்த்வெஸ்ட் பல்கலைக் கழக மூளை அறிவியல் துறை பேராசிரியர் பில்லீஸ் சீ தெரிவித்துள்ளார்.


0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil