சின்னத்திரை மூலம் தனது கலையுலக வாழ்க்கையைத் துவங்கிய மாதவன், சினிமாவில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பியுள்ளார்.
என்டிடிவின் புதிய கேம் ஷோவை அவர் நடத்துகிறார். இதற்கு `பிக் மணி (Big Money)` என்று தலைப்பிடுப்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரத்திலிருந்து இதன் ஒளிபரப்பு ஆரம்பமாகிறது.
கோன்பனேகா குரோர்பதியை உருவாக்கிய சித்தார்த் பாசு மற்றும் சமீர் நாயர் இந்த பிக் மணி ஷோவின் மூளையாக செயல்படுகின்றனர்.
இது குறித்து மாதவன் கூறுகையில், "சித்தார்த் பாஸுவின் மிகப்பெரிய ரசிகன் நான். அவர் உருவாக்கியுள்ள இந்த கேம் ஷோவின் கான்செப்ட் மிகவும் சுவாரஸ்யமானது. குடும்பத்துடன் ரசிக்கும்படியானது" என்றார்.
மாதவன் தனது ஆரம்ப காலத்தில் சில இந்தி சீரியல்களில் நடித்தார். அவற்றில் பெனகி அப்னி பாத், சீ ஹாக் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்போது கமலின் மன்மதன் அம்பு உள்பட தமிழ், இந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார்.

0 comments:
Post a Comment