அசின்-ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்பதற்காக கண்ணீர்விட்டு அழுபவள் நான் அல்ல

23 June 2010 ·“ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்பதற்காக கண்ணீர்விட்டு அழுபவள் நான் அல்ல” என்று நடிகை அசின் கூறியுள்ளார்.

"காக்க காக்க` படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான் ஆபிரஹாம் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அசின் கதாநாயகியாக நடிக்கவிருந்தார். ஆனால் திடீரென அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். இந்த ஏமாற்றம் தாங்காமல் அசின் கண்ணீர் விட்டு அழுதார் என மும்பை பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒரு படத்தில் நடிப்பதற்கும் நடிக்காமல் இருப்பதற்கும் பல காரணங்கள் இருக்கும். அது அந்தந்த நடிகர், நடிகையின் சொந்த விஷயம். இதற்கெல்லாம் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருப்பார்களா?

ஒரு சினிமா வாய்ப்புக்காக கண்ணீர் விட்டு அழும் சூழ்நிலையில் நான் இல்லை. இந்திப் பட உலகில் என்னுடைய வளர்ச்சி பிடிக்காதவர்கள் மீடியாவுக்குப் பரப்பிய வதந்திதான் இது. எனக்கான வாய்ப்புகள் எப்போதும் போல உள்ளன. நான் விரும்பும் கதைகளில் மட்டுமே நடிக்கிறேன். கிடைப்பதையெல்லாம் ஏற்பதில்லை.

முதலில் அந்தப் படத்தை கெளவுதம் மேனன் இயக்குவதாக இருந்தது. பிறகு நிஷிகாந்த காமத் இயக்குவார் என்றனர். அதையடுத்து கதையிலும் சில மாற்றங்கள் செய்தார்கள். இதையெல்லாம் யோசித்துதான் நானே அந்தப் படத்திலிருந்து வெளியேறி விட்டேன். யாரும் என்னை நீக்கவில்லை...`` என்று ஒரே போடாகப் போட்டார்!

================================================


வில்லனாக நடித்ததால் வில்லத்தனமான ஆசை 
கிளம்பிடுச்சோ பிருத்விராஜூக்கு?
வில்லனாக நடித்ததால் வில்லத்தனமான ஆசை கிளம்பிடுச்சோ பிருத்விராஜூக்கு?

சமீபத்தில் ராவணன் பட சிறப்புக் காட்சியின்போது ஒரு டெலிவிஷன் பேட்டியில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

"திரையில் என்னைவிட வயது அதிகம் கொண்ட பெண்களுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்கும் சந்தர்ப்பம் அடிக்கடிக் கிடைக்கிறது. சமீபத்தில் ஐஸ்வர்யா ராயுடன் நடித்தேன். இந்தியாவின் மிக அழகான பெண். அவருடன் நடிப்பதில் எனக்கு முதலில் தயக்கமிருந்தது. விக்ரம் வேறு அடிக்கடி சீண்டிக் கொண்டே இருந்தார். ஆனால் பின்னர் சகஜமாக காதல் காட்சிகளில் நடித்தேன்..." என்றார்.

அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், அடுத்து அவர் சொன்னதுதான் மகா வில்லங்கமானது...

"என்னைவிட வயசான ஹீரோயின்களோடு நடிப்பது எனக்குப் பிடித்தே இருக்கிறது. இதற்கு முன்பு அப்படி ஒரு ஹீரோயினோடு நடித்தேன். ஆனால் அவர் யார் என்று சொன்னால் என்னைக் கொன்றே போட்டுவிடுவார்" என்றார்.

உடனே பக்கத்திலிருந்த விக்ரம், `எல்லாம்` தெரிந்தது போல விழுந்து விழுந்து சிரித்தார். அவர் யார் என்று சொல்வது போல விக்ரம் பாசாங்கு செய்ய, இவர் ஓடிப் பாய்ந்து தடுத்தார்...

ஆமா.. யாருங்க அது..? உங்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த ரகசிய மொழியை எங்களுக்கும் சொல்லுங்களேன்! 

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil