இந்தி கவர்ச்சி நடிகை கரீனா கபூர் புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.ட்வீட்டரில் பிசியாக உள்ள பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மத்தியில், கரீனா கபூர் தனது புதிய அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கியுள்ளார். இதை தினசரி முடிந்தவரை அப்டேட் செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து கரீனா கூறுகையில், இது எனது சொந்த இணையதளம், எனக்கே எனக்கானது. ரசிகர்களுக்காக நிறைய செய்திகளை அதில் போடவுள்ளேன். எனக்கு ரசிகர்கள் நேரடியாக கருத்துக்களை எழுதும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளேன் என்றார் கரீனா.
கரீனா கபூரின் இணையதளத்தின் பெயர் இதுதான் - www.kareenakapoor.me
கரீனா குறித்த இன்னொரு செய்தி. சர்வதேச அளவில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா நடத்தும் பிரசாரக் குழுமத்தில் கரீனாவும் இணைந்துள்ளார். இந்தப் பட்டியலில் ஜெஸிகா ஆல்பா, கெவின் ஸ்பேஸி, மாட் டமோன், ஹில்லாரி கிளிண்டன் ஆகிய பிரபலங்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Ontario Time


0 comments:
Post a Comment