ரூ.1 கோடி கேட்கும் தமன்னா!

19 April 2010 ·




நடிகை தமன்னா முதன்முதலாக நடித்த தமிழ் படம், கேடி.' அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம், கல்லூரி.' அந்த படம், எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்றாலும், தமன்னாவுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.

அதையடுத்து தமன்னா, அயன்' படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, தமன்னாவின் மார்க்கெட்' அந்தஸ்து உயர்ந்தது. ரூ.7 லட்சம் சம்பளம்

வாங்கிக்கொண்டிருந்த அவர், ரூ.40 லட்சமாக சம்பளத்தை உயர்த்தினார்.

என்றாலும், கால்ஷீட்' கொடுக்க முடியாத அளவுக்கு அவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. அதைத்தொடர்ந்து தமன்னா தனது சம்பளத்தை ரூ.50 லட்சமாக உயர்த்தினார். பையா' படத்துக்கு, அவர் ரூ.50 லட்சம் சம்பளம் வாங்கினார்.

பையா' படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் சாதனையுடன் வெற்றிகரமாக ஓடுவதால், தமன்னா தனது சம்பளத்தை ஒரேயடியாக ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டார்.

இனிமேல் அவர் பிரபல கதாநாயகர்களுடன் மட்டுமே ஜோடியாக நடிப்பது என்றும் முடிவு எடுத்து இருக்கிறார்.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites