தமிழர்களின் 150 ஆண்டு கால கனவு சேதுக்கால்வாய் திட்டம் நிறைவேறுமா?

19 April 2010 ·

தூத்துக்குடி ;தமிழர்களின் 150 ஆண்டு கால கனவு திட்டமான சேதுக் கால்வாய் திட்டம் தடைகளை தாண்டி நிறைவேற்றப்படுமா என்று தென்மாவட்ட மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.தமிழர்களின் 150 ஆண்டு கால கனவுத்திட்டம் சேதுசமுத்திர கால்வாய் திட்டமாகும். இத்திட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய கடற்படையில் பணியாற்றிய ஆங்கிலேயர் ஏ.டி. டெய்லர் என்பவரது சிந் தனையில் 1860ம் ஆண்டு உருவானது. இந்திய பெருங்கடலில் இருந்து வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டிய கப்பல்கள் இலங்கையை சுற்றி செல்வதால் செலவு மற்றும் நேரம் அதிகம் உள்ளது. இதற்கு மாறாக நேரடியாக இந்திய பெருங்கடலில் இருந்து வரும் கப்பல்கள் வங்கக்கடல் பகுதிக்கு செல்லும் பொருட்டு பாக் ஜலசந்தி மற்றும் ராமர் பாலம் என்கிற ஆதாம் பாலம் பகுதியில் 167 கிலோ மீட்டர் நீளம், 12 மீட்டர் ஆழம், 300 மீட்டர் அகலத்தில் விரிவுபடுத்துவதற்காக உருவானதே சேதுக்கால்வாய் இத்திட்டம்.
இதிலும் பாக் ஜலசந்தி பகுதியில் 54 கிலோ மீட்டரும், ஆதாம் பாலம் அருகே 35 கிலோ மீட்டர் தூரமும் உள்ள பகுதியைத்தான் ஆழம் மற்றும் அகலப்படுத்த வேண்டும். மற்ற இடங்களில் தேவையான ஆழம் உள்ளது. இதற்காக 1860ம் ஆண்டு மதிப்பிடப்பட்ட தொகை வெறும் ரூ.50 லட்சம் தான். அதன்பின்பு 1955ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த போது ராமசாமி முதலியார் தலைமையில் சேது கால்வாய் திட்டம் ஆய்வு செய்யப்பட் டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீடு ரூ.10 கோடி யாகும். அதன்பின்பு 1983ம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது லட்சுமிநாராயணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.282 கோடி செலவாகும் என அறிக்கை அளித்தது. ஆனால் அத்தனை முயற்சிகளும் கிடப்பில் போடப்பட்டன. மத்தியில் 1998ம் ஆண்டு வாஜ்பாய் தலைமை யில் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்பு சேதுகால்வாய் திட்டத்தை விரைந்து நிறை வேற்ற தமிழக தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத் தினர்.
பின்னர் 2004ம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியின் போது அதில் அங்கம் வகித்த திமுக கூட்டணி கட்சிகள் கடுமை யாக போராடி இத்திட்டத்திற்கு அனுமதி பெற்றனர். இதற்காக ரூ.2 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டது. இப்பணிகளை 2005ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி மதுரையில் பிரதமர் மன்மோகன்சிங் துவக்கி வைத்தார்.
தமிழர்களின் 150 ஆண்டு கால கனவு நிறைவேறிவிட்டது என்று அனைவரும் மகிழ்ச்சி அடைந்திருந்த நிலையில் ராமேஸ்வரத்திற் கும், மன்னாருக்கும் இடையே உள்ள மணல் திட்டை சில அமைப்புகள் ராமர் கட்டிய பாலம் என்று கூறி தமிழர்களின் 150 ஆண்டு கால கனவு திட்டத்தை நனவாக்க விடாமல் தடுத்தனர். இதன் விளைவாக கடந்த 3 ஆண்டு களாக சேதுகால்வாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. உச்சநீதிமன்றத்தில் அறிவியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் விவா தங்கள் நடந்து வருகின்றன.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் கிழக்கு&மேற்கு கடற்கரைக்கு இடையேயான தூரம் 424 கடல் மைல் குறைவதுடன் பயண நேரமும் 30 மணி நேரம் குறையும். கடல் ஆழப்படுத்தப்படும் போது கடற்படை போர்க்கப்பல்கள், பெரிய அளவிலான பயணி கள் கப்பல், சரக்கு கப்பல்கள் மிக வேகமாகவும், பாதுகாப்பாகவும் செல்ல முடியும். இதன் மூலம் இந்திய கடற் பகுதியில் பாதுகாப்பை வலுவாக்க முடியும்.
தமிழகத்தில் தென்மாவட்டங்களில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படுவதோடு புதிய துறைமுகங்கள், மீன் பிடித்துறைமுகம் வருவதற் கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே தமிழர்களின் எதிர்காலத்திற்கு ஒளிதரும் உன் னத திட்டமான சேதுசமுத் திர திட்டம் அனைத்து தடைகளையும் தாண்டி நிறைவேற்றப்படுமா என்று தென் மாவட்ட மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil