ரஞ்சிதா 174 போலீஸ் குறி வைக்கும் போன் உரையாடல்கள்

27 April 2010 ·



ரஞ்சிதா 174 போலீஸ் குறி வைக்கும் போன் உரையாடல்கள்

'பால் கொடுங்க...', 'தயிர் சாதம் கொடுங்க...', 'உலர் திராட்சை கொடுங்க'. 'ஊறவெச்ச பழம் கொடுங்க' என ஒரு கையில் ருத்தி ராட்ச மாலையை உருட்டியபடியே, ஏக அலப்பறை செய்துகொண்டு இருக் கிறார் விசாரணை வளையத்தில் இருக்கும் நித்தியானந்தா!


பெங்களூருவில் உள்ள கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றக் கட்டடமான விதான் சவுதாவுக்கு பின்புறத்தில்தான் சி.ஐ.டி. போலீஸ் அலுவலகம் இருக்கிறது. இங்குதான் நித்தியானந்தாவை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆரம்பத்தில் பளீர் சிரிப்பும் பக்குவமான வார்த்தைகளுமாகப் பேசிய நித்தியானந்தா, விசாரணை நீள நீள அடிக்கடி மயங்கி விழுந்து அதிகாரிகளைக் குழப்பத் தொடங்கிவிட்டார். ''அவரை விசாரிப்பது காமெடி காட்சிக்கு வசனம் எழுதுவதுபோல இருக்கிறது...'' எனச் சிரித்தபடியே சொல்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்!

ஆக்டிங் அமர்க்களம்!

''நான்கு நாட்களாகவே நித்தியானந்தா காலையில் லேட்டாகத்தான் எழுகிறார். 'குளிச்சிட்டுத்தான் பேசுவேன்'னு அடம்பிடிக்கிறார். காலைச் சாப் பாட்டை முடிச்சு, விசாரணையை ஆரம்பிக்கவே 11 மணி ஆகிடுது. மறுபடியும் மூணு மணிக்கு மதியச் சாப்பாட்டை முடிச்சதும், 'கொஞ்ச நேரம்

தூங்கணும்'னு சொல்லி கண் அசந்துவிடுகிறார். அவரை எழுப்பி உட்காரவெச்சாக்கூட சோர்ந்து விழுற மாதிரியே ஆக்ட் கொடுக்கிறார். இரவு ஏழு மணியில் இருந்து ராத்திரி 12 வரைக்கும்கூட விசாரணை நீளும்.

ஒவ்வொரு முறை பேச ஆரம்பிக்கும்போதும், பேச்சை முடிக்கும்போதும் அவருக்கே உரிய பாணியில் 'நித்தியானந்தம்'னு சொல்லிட்டே இருந்தார். 'ஆசிரமத்துக்கு எப்படி இவ்வள

பணம் வந்துச்சு?'ன்னு கேட்டதுக்கு, 'நானா யார்கிட்டயும் போய் பணம் கொடுங்க என்று கேட்கவில்லை. அவங்க கொண்டுவந்து கொடுத்ததை வாங்கிக்கொண்டோம். அதற்கு முறையாக் கணக்கு இருக்கு. இப்போ எனக்கும் அந்த ஆசிரமத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. ஆசிரமத்தோட எல்லாப் பொறுப்புகளில் இருந்தும் நான் விலகிட்டேன். இப்போ நான் ஒரு தனி மனிதன்!'னு அலட்டிக்காமச் சொல்கிறார்...'' என்றவர்கள் மேற்கொண்டு நித்தியானந்தாவின் வார்த்தைகளாகவே நம்மிடம் விவரித்தார்கள்.

நம்பிக்கைத் துரோகிகள்!

''நித்ய கோபிகாவையும், தர்மானந்தாவையும் நான் ரொம்பவும் நம்பி இருந்தேன். ஆனா, அவங்க ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்துதான் எனக்கு எதிராகச் சதி பண்ணி இருக்காங்க. அவங்க நோக்கம் ஆன்மிகம் இல்லை. அற்பப் பணத்தில்தான் ஆசை!

ஆசிரமத்துல எந்தத் தப்பும் நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால்... அது கோபிகாவுக்கும், தர்மானந்தாவுக்கும் தெரியாம நடந்திருக்காது. என்ன நடந்ததுன்னு அவங் களையே கூப்பிட்டு விசாரிங்க. நான் பெண்கள்கூட தொடர்பு வெச்சிருந்தேன்ணு சொல்லிட்டு இருக்காங்க... எந்தப் பொண்ணையாவது நான்கையைப் பிடிச்சு இழுத்தேனா? அவங்க விருப்பத்துக்கு மாறாகத் தொந் தரவு கொடுத்தேன் என்று யாராவது உங்களிடம் புகார் சொன்னார்களா? நான் செய்தது எல்லாமே ஆன்மிகத்தோட சம்பந்தப்பட்ட ஒருவித ஆராய்ச்சி. சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியோடுதான் அதை நடத்தினேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி(!) நான் எந்தத் தவறும் செய்யவில்லை.'' என அழுத்தம் திருத்தமாகப் பேசி இருக்கிறார் நித்தியானந்தா.

உலுக்கும் 'உவ்வே' விவகாரம்!

நித்தியானந்தாவின் செக்ஸ் லீலைகள் குறித்து ஏற்கெனவே அறிந்துவைத்திருக்கும் கர்நாடக போலீஸா ருக்கு நெஞ்சை உலுக்கும் இன்னொரு தகவலும் எட்டி இருக்கிறதாம். 'வயிற்றில் இருக்கும் வாரிசுகளை ஆசீர் வதிக்கிறேன்' எனச் சொல்லி நித்தியானந்தா சில கர்ப்பிணிப் பெண்களிடம் மேற்கொண்ட அத்துமீறிய கொடூரங்கள் குறித்து போலீஸ் தரப்பைத் தேடி வந்து சிலர் சொல்ல... நித்தியானந்தாவிடம் கடுமைகாட்டி விசாரித்தார்கள் அதிகாரிகள். ''நான் அப்படி எல்லாம் செய்யவில்லை. யாரோ திட்டமிட்டு என்னை இப்படி டேமேஜ் பண்ணிட்டாங்க...'' என்றாராம். அதிகாரிகள் காட்டிய கடுமையால் அன்று முழுவதும் நித்திரை தொலைத்தவராக இருந்தாராம் நித்தியானந்தா.

அழவைத்த அதிகாரி!

விசாரணை நேரம் தவிர்த்து இதர நேரங்களில் பெங் களூரு போலீஸாரிடம் சகஜமாகப் பேசும் நித்தியானந்தா, தமிழ்நாட்டில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவரின் பெயரைச் சொல்லிச் சொல்லிப் புலம்புகிறாராம். 'இன்னிக்கு நான் இத்தனை சிக்கலுக்கு ஆளாகி இருக்கி றதுக்குக் காரணமே அவர்தான். எனக்கு எதிராப் புகார் கொடுத்த லெனின் கருப்பன் மூலமா நான் தங்கியிருந்த இடத்தை அந்த அதிகாரிதான் இமாசல் போலீஸுக்கு சொல்லிவிட்டார். ஆரம்பத்திலேயே அந்த அதிகாரிகூட சமரசமாப் போக எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனா, லெனின் கருப்பன் என்னைப்பத்தி அவர்கிட்ட ஏதேதோ சொல்லிவெச்சுட்டான். அதனால், கடைசி வரைக்கும் அசைஞ்சு கொடுக்காம என்னை அல்லாடவெச்சுட்டார் அந்த அதிகாரி. என் பாவம் அவரைச் சும்மாவிடாது' எனக் கண்ணைக் கசக்கியபடியே சாபம் விடுகிறாராம் நித்தியானந்தா.

விசாரணை அதிகாரிகள் சிலரிடம் கெஞ்சிக் கூத்தாடி அந்த போலீஸ் அதிகாரியிடம் இரு முறை செல்போனில் பேசிய நித்தியானந்தா, 'தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க...' என்று அழுதாராம். ஆனால், அதிகாரியின் வார்த்தைகள் அப்போதும் காட்டமாக அமைய... 'என் விதி அவ்வளவுதான்!' எனச் சொல்லி பெருங்குரலெடுத்து அழத் தொடங்கிவிட்டாராம்.

நிர்வாணப் பரிசோதனை!

''நித்தியானந்தாவுக்கு எப்போதுமே ஏலக்காய் போட்ட தண்ணீர் பக்கத்தில் இருக்கணும். விசாரணையின்போது அரை மணி நேரத்துக்கு ஒரு முறை தவறாமல் அந்தத் தண்ணீரைக் குடிச்சிட்டே இருந்தார்.

கர்நாடகாவைச் சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர்கள் பலர் அவரைச் சந்திக்க முயற்சி செய்தார்கள். ஆனா, நாங்க யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. நித்தியானந்தாவுக்கு முறைப்படி மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அதுக்காக அவரை ராம் நகரில் இருக்கும் கவர்மென்ட் ஹாஸ் பிட்டலுக்கு கூட்டிட்டுப் போனோம். அங்கே மருத்துவர்கள் அவரை ஒரு மணி நேரம் பரிசோதனை செஞ்சாங்க. சில பரி சோதனைகளுக்காக நித்தியானந்தவின் எல்லா உடை களையும் அவிழ்த்துச் சோதனை செய்ய வேண்டி யிருந்தது. அவர் எதற்கும் மறுப்பு சொல்லாமல் ஒத்துழைப்புக் கொடுத்தார்!'' என்றவர்கள் அடுத்து சொன்ன அக்ரிமென்ட் விஷயம்தான் ஹைலைட்!

'அது'க்கும் அக்ரிமென்ட்!

''நித்தியானந்தாவோட ஆசிரமத்தை எங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது நிறைய ஆவணங்கள் கிடைச் சிருக்கு. அதுல ஒண்ணு... செக்ஸ் உறவுக்கான ஒப்பந்த நகல். 'செக்ஸ் தவறானது இல்லை. உடலைப்பற்றி சோதிக் கும் பயிற்சிக்காக செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். அதனை மறுப்பின்றி ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்!' என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த ஒப்பந்த நகலில் ஆசிரமத்தில் தங்கி இருந்த 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டிருக்கிறது.

நித்தியானந்தாவின் செக்ஸ் ஒப்பந்தத்தில் சிக்கிய பலரில் ஐந்து பேரின் படங்கள் ஆசிரமத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் சிக்கி இருக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த நான்கெழுத்து நடிகையால் ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பட்டதாரித் தோழி மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த இரு கல்லூரிமாணவிகளும் அதில் அடக்கம். மேலும் இரு பெண்களின் புகைப்படங்களைக் காட்டி ஆசிரமத்தில் விசாரித்தபோது, யாருமே சரியான பதிலைச் சொல்லவில்லையாம்.

நான்கெழுத்து நடிகை மூலமாக நித்தியானந்தாவிடம் சிக்கிய சென்னையைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணைத் தான் போலீஸ் தரப்பு பெரிதாக நம்பிக்கொண்டு இருக்கிறதாம். ஆன்மிகத்தில் ஆர்வமில்லாத அந்தப் பெண்ணுக்கு, ஆரம்பத்திலேயே பெரிய அளவில் பணம் கொடுக்கப்பட்டதாகவும், தற்போது ஆசிரமத் தரப்பாலேயே அந்தப் பெண் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரியவர... அந்தப் பெண்ணின் குடும்பத் தினரை போலீஸ் இப்போது நெருக்கத் தொடங்கி இருக்கிறது. அடுத்த கட்டமாக நான்கெழுத்து நடிகையை விசாரணை வளையத்தில் கொண்டுவரும் முடிவிலும் போலீஸ் தீவிரமாக இருக்கிறது.

பதுக்கப்பட்ட சி.டி-கள் எங்கே?

ஆசிரமத்தின் அத்தனை இண்டு இடுக்குகளையும் துழாவி எடுத்துவிட்ட போலீஸ் தரப்பு, மிகமுக்கிய ஆதாரங்களை கையில் வைத்துக்கொண்டு நித்தியானந் தாவை துருவிக்கொண்டு இருக்கிறது. வெளிநாட்டுச் சேமிப்புகள் குறித்த அந்த ஆதாரங்களுக்கு பதிலே சொல் லாமல் மழுப்பிய நித்தியானந்தா, பக்தைகள் குறித்த கேள்விகளுக்கு, 'அவர்கள் யாரும் எனக்கு எதிராகப் பேச மாட்டார்கள்!' என்று அடித்துச் சொல்லி இருக்கிறார்.

ஆசிரமத்தில் இருந்தும், நித்தியானந்தா தங்கி இருந்த இமாசல் வீட்டில் இருந்தும் கைப்பற்றப்பட்ட லேப்டாப்புகளில் ரெக்க வரி மூலமாக ஏகப்பட்ட தகவல்கள் போலீஸாரால் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஆசிரமத்தின் அன்றாட நடவடிக்கைகள் ரகசிய கேமராவால் படம் பிடிக்கப்பட்டு நித்தியானந்தாவின் பார்வைக்கு அனுப்பப்படுமாம். அத்தகைய காட்சிகளைப் பார்த்தே உண்மையான விசுவாசிகளை நித்தியானந்தா அடை யாளம் காண்பாராம். அத்தகைய பதிவுகள் சி.டி-யாக்கப்பட்டு, எங்கோ பதுக்கப்பட்டு இருக்கிறதாம். அதுபற்றிய கேள்விகளுக்கு நித்தியானந்தா வாய் திறப்பதே இல்லையாம்!

அடுத்து... ரஞ்சிதா!

நித்தியானந்தாவிடம் இருந்து உரிய விவரங்களைப் பெற முடியாததால், கடுப்பில் அடுத்தடுத்து அவர் மீது வழக்குகளைப் பாய்ச்சும் முடிவில் இருக்கிறது போலீஸ் தரப்பு. தமிழ்நாடு போலீஸிடம் இது குறித்து ஆலோசித்திருக்கும் கர்நாடக போலீஸார் அடுத்த கட்டமாக ரஞ்சிதாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரும் முடிவில் தீவிரமாகி இருக்கிறார்கள். ''பணம் தொடங்கி ஆசிரமத்தில் மர்மமாக நடந்த அத்தனை விவகாரங்களும் ரஞ்சிதாவுக்கு அத்துப் படியாகத் தெரியும். ஆனாலும், பெரிய அளவில் பேசப் பட்ட பேரம்தான் ரஞ்சிதாவை வாய் திறக்க விடாமல் வைத்திருக்கிறது. நித்தியானந்தாவின் மழுப்பல் மேலும் தொடர்ந்தால்... ரஞ்சிதா மூலமாகவே அத்தனை உண்மை களையும் கொண்டுவருவோம். ஏனென்றால், இமாசலில் தங்கி இருந்தபோது ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா எத்தனை முறை பேசி இருக்கிறார் தெரியுமா? 174தடவை!

ஏழு செல்போன்களில் இருந்து மாறி மாறி இத்தனை தடவை ரஞ்சிதாவோடு பேசிய நித்தியானந்தா, பல ரகசியங் களை அவரிடம் சொல்லி இருக்க வாய்ப்பிருக்கிறது!'' எனச் சொல்லித் திகைக்கவைக்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்!

டெயில்பீஸ்: போலீஸ் காவல் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில் நித்தியானந்தாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. பெங்களூரு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருக்கிறார் நித்தியானந்தா

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites