என்னமா act பண்ணுறன் இந்த நித்தி

28 April 2010 ·

நித்தியானந்தாவுக்குத் திடீர் நெஞ்சு வலி பெங்களூர் வைத்தியசாலையில் சிகிச்சை பொலிஸ் காவலில் விசாரணை நடந்தபோது

பொலிஸ் காவலில் விசாரணை நடைபெற்றபோது நித்தியானந்தா வுக்குத் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதை யடுத்து பெங்களூர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சையளிக் கப்பட்டு வருகிறது. "செக்ஸ்' முறைப்பாட்டில் கைதான நித்தி யானந்தாவை பெங்களூர் சி.ஐ.டிபொலிஸ் காவலில் விசாரணை நடைபெற்றபோது நித்தியானந்தா வுக்குத் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதை யடுத்து பெங்களூர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சையளிக் கப்பட்டு வருகிறது.
"செக்ஸ்' முறைப்பாட்டில் கைதான நித்தி யானந்தாவை பெங்களூர் சி.ஐ.டி. பொலி ஸார் 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்றுமுன்தினத்துடன் நித்தியானந்தாவின் பொலிஸ் காவல் முடிவடைவதாக இருந்ததால், பிற்பகல் 3.15 மணியளவில் சி.ஐ.டி. அலுவலகத்திலிருந்து நித்தியானந் தாவை பொலிஸ் வானில் ஏற்றி ராமநகர் மாவட்ட செசன்சு நீதிமன்றுக்கு பொலிஸார் அழைத்துச் சென்றனர். அங்குநீதிபதி நாரா யண பிரசாத் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நித்தியானந்தாவின் சட்டத்தரணி சந்திரமவுலி பிணை கேட்டு மனுத் தாக்கல் செய்தார். இருதரப்பு வாதம் மற்றும் பொலிஸார் வழங்கிய ஆவணங்களை பரி சீலித்த நீதிபதி நாராயணபிரசாத், நித்தி யானந்தாவுக்கு பியை வழங்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தார். அதோடு நித் தியானந்தாவை மேலும் 2 நாள்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் மாலை 6.10 மணியளவில் பொலிஸார் நித்தியானந்தாவை பெங்களூ ரில் உள்ள அலுவலகத்துக்கு மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில், விசாரணையின்போது நித்தியானந்தாவுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. நெஞ்சுவலிப்பதாக அவர் கூறியதும், பெங்களூரிலுள்ள இருதய வைத் தியசாலைக்கு நித்தியானந்தாவை பொலி ஸார் அழைத்துச்சென்றனர்.
அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் நித்தியானந்தா சேர்க்கப்பட்டார். அவருக்கு இ.சி.ஜி. மற்றும் இரத்த பரிசோதனை போன்ற சோதனைகள் நடத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் பொலிஸார் கைப்பற் றிய சி.டி. ஒன்றில், நித்தியானந்தா புலித் தோல் பெல்ட் அணிந்திருக்கும் காட்சியும் சிறுத் தைப்புலி, புள்ளிமான், காட்டு நாய் ஆகியவற் றின் தோல்களையும் அவர் பயன் படுத்தி இருந்த காட்சிகளும் இடம்பெற்று இருந்தன.
அந்த சி.டி.யை வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார் கள். இதனால், நித்தியானந்தாவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil