நெல்லை மாவட்டத் தி.மு.க-வில் நடக்கும் கோஷ்டி அரசியலின் உச்சகட்டமாக, அழகிரி ஆதரவாளர்களும் ஸ்டாலின் விசுவாசிகளும் நேருக்கு நேராக விமர்சனக் கணைகளை வீசத் தொடங்கிவிட்டார்கள். ஒரு சாம்பிள் சம்பவம்... தென் மண்டல அமைப்புச் செயலாளராக மு.க.அழகிரி நியமிக்கப்பட்டதுமே சபாநாயகர் ஆவுடையப்பனும், அமைச்சர் மைதீன்கானும் அழகிரி புராணம் பாடத் தொடங்கினர். அதே சமயம், அழகிரியுடன் எப்போதும் முரண்டு பிடிக்கும் மாவட்டச் செயலா ளர் கருப்பசாமி பாண்டியன் தரப்பினருடன், அமைச்சர் பூங்கோதை, மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் ஸ்டாலின் கோஷ்டியாகச் செயல் பட்டு வருகிறார்கள்இந்த நிலையில்தான், ஏப்ரல் 22-ம் தேதி நடந்த மாநகராட்சிக் கூட்டம். அமைச்சர் மைதீன்கானை மாநகராட்சியின் தி.மு.க கொறடாவான வக்கீல் துரை விமர்சனம் செய்ததோடு, 'தெருத் தெருவாய் கூட்டுவது பொது நலத் தொண்டு... ஊரார் தெரிந்துகொள்ளப் படம் பிடித்தால் சுயநலம் உண்டு' என்ற எம்.ஜி.ஆர் பாடலைப் பாடி கிண்டலடித்த விவகாரம், நெல்லையில் இப்போது 'ஹாட் டாபிக்!' துரையை சந்தித்துப் பேசினோம். ''நெல்லை மாநகராட்சியில் சுகாதாரப் பணிகளைச் செய்யப் போதுமான ஆட்கள் இல்லை. பாளையங்கோட்டை மண்டலத்தில் 350 பேர் பார்க்க வேண்டிய சுகாதாரப் பணிகளை, 165 பேரை வைத்துச் சமாளிக்கிறாங்க. சில வார்டுகளில் இரண்டு பேரை மட்டுமே வைத்து பணிகளைச் செய்யும் நிலைமை. இதனால், தன் பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட வார்டு களைச் சுத்தப்படுத்த அமைச்சர் மைதீன்கான் தன் சொந்தப் பணத்தில் இருந்து 25 பேரை நியமிச்சிருக்கார். அவரால் நியமிக்கப்பட்ட பணி யாளர்கள், குப்பைகளைக் கூட்டி ரோட்டோரத்தில் வெச்சுடுறாங்க. சாக்கடை மண்ணை அள்ளி ஆங்காங்கே வைப்பதால்... மறுபடியும் மாநகராட்சி ஊழியர்கள் வந்துதான் அதையெல்லாம் சுத்தப்படுத்த வேண்டி யிருக்கு. அதைத்தான் மாநகராட்சிக் கூட்டத்தில் பேசினேன். மூத்த அரசியல்வாதியான மேயர் ஏ.எல்.சுப்பிரமணியனிடமோ, கமிஷனரிடமோ பேசி, எல்லோரும் இணைந்து செயல் பட்டிருக்கலாமே? அதை விடுத்து அவராக ஆட்களை நியமித்துச் சுகாதாரப் பணிகளைச் செய்தது சரியா? இது உள்ளாட்சி அமைப் பைக் கையில் வைத்திருக்கும் துணை முதல்வரை அவமதிப்பது போல் ஆகாதா? அந்த ஆதங்கத்தில்தான் அப்படிப் பேசினேன். அதைச் சிலர் தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!'' என்று படபடத்தார். அமைச்சர் மைதீன்கானை தொடர்புகொண்டோம். ''எங்க கட்சியைச் சேர்ந்தவரே என்னைப்பற்றி விமர் சனம் செய்திருப்பதற்கு, பதிலுக்குப் பதில் நானும் பேசு வது முறையாகாது. இதைக் கட்சிக்குள் பேசி சுமுகமாகத் தீர்த்துக்குவோம்.'' என்றார். மைதீன்கான் ஆதரவாளர் களோ, ''நெல்லை மாநகராட்சியே செயலிழந்து கிடக்குதுங்க. சில மாதங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் பரவின போதுகூட, சுகாதாரப் பணிகளைச் சீர்ப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கலை. அப்பவும் எங்க அமைச்சர்தான் 800 பேருடன் களம் இறங்கி, மேலப்பாளையம், பாளையங்கோட்டை பகுதிகளில் 'மாஸ் கிளீனிங்' நடத்தினார். அதுபோல், கமிஷனர் மற்றும் மேயரிடம் பேசிய பிறகே 25 சுகாதாரப் பணியாளர்களைச் சொந்த செலவில் நியமித்து வேலை செய்கிறார். இதெல்லாம் தெரிஞ்சிருந்தும், அமைச்சருக்குச் சிக்கலை உண்டாக்கணும்னே காத்தி ருக்கிற எங்க கட்சிக்காரங்க சிலர் இப்படி ஒரு சர்ச் சையைக் கொளுத்திப் போட்டிருக்காங்க!'' என்று ஆவேசப்படுகிறார்கள்.எம்.ஜி.ஆர். பாடல்... தி.மு.க.-வில் ஊடல்!
எம்.ஜி.ஆர். பாடல்... தி.மு.க.-வில் ஊடல்!
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment