நித்யானந்தா வீடியோ பற்றி இதுவரை எந்த பேட்டியும் அளிக்கவில்லை என்று நடிகை ரஞ்சிதா அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பி.எம். வழக்கறிஞர் குழுமம் மூலமாக பத்திரிகைகளுக்கு நடிகை ரஞ்சிதா அனுப்பியுள்ள அறிக்கையில்,நித்யானந்தா வீடியோ மார்ச் 2ஆம் தேதி வெளியானதில் இருந்து நான் எந்த ஒரு ஊடகத்துக்கும் இதுவரை பேட்டி அளிக்கவில்லை. இந்த வீடியோ குறித்து தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் அச்சு ஊடகங்கள் அனைத்தும் உண்மைக்கு மாறான தகவல்களை திரித்து கூறியிருக்கின்றன.
என்னுடைய தரப்பில் கேட்காமலேயே செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மனதளவில் பெரிய அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.
இந்த வீடியோ பற்றி தமிழ் பத்திரிகை ஒன்றில் என்னுடைய பெயரில் பேட்டி என்று வெளியிட்டு இருக்கிறார்கள். அது தினசரி பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களிலும் வெளிவந்துள்ளன. என்னுடைய பெயரில் வந்த பேட்டி அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட பொய் என்பதே உண்மை.
கூகுள், யூ டியூப் முலமாக இணையதளங்களில் வெளியான வீடியோ காட்சிகள் என்னை பாதிக்கப்பட வைத்துள்ளது. என் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளது.
மே 2ஆம் தேதிக்குள் என் சம்மந்தமான வீடியோ காட்சிகளை நீக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.
இணையதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பிய வீடியோ காட்சிகள் உண்மை என நிரூபிக்கப்பட வேண்டிய நிலை இருக்கிறது. அந்த வீடியோ காட்சிகள் உண்மை என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
திரைப்படத்துறைக்கு வந்த 20 ஆண்டுகளில் என்மீது எந்த குற்றச்சாட்டும் இதுவரை எழுந்ததில்லை. நான் சமூகத்தின் மீது மிகவும் அக்கறை கொண்டவள். பேன்யன் போன்ற தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து பொதுப்பணியில் ஈடுபட்டுள்ளேன்.
தற்போது ஊடகங்களில் திரித்து கூறப்படும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். சட்டம் எனக்கான பாதுகாப்பை கொடுக்கும் என நினைக்கிறேன். இந்த தருணத்தில் என்னை ஆதரிக்கும் தொண்டு நிறுவனங்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
வீடியோ விவகாரம் தொடர்பாக கர்நாடக சிஐடி போலீசாரிடம் இருந்து இதுவரை எந்த நோட்டீசும் வரவில்லை என்று கூறியுள்ளார்.
நித்யானந்தா வீடியோ பற்றி எந்த பேட்டியும் தரவில்லை: ரஞ்சிதா அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment