சிம்பு ஜோடியாகும் வரலட்சுமி

21 April 2010 ·




போடா போடி என்றொரு படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாக வெளிவந்த செய்தி நினைவிருக்கிறதா? பல வருட பழக்கமுள்ள அந்த செய்திக்கு புத்துயிர் கொடுத்திருக்கிறார் சிம்பு.

கனடாவில் படப்பிடிப்பு, சிம்பு ஜோடி சரத்குமார் மகள் வரலட்சுமி என்று பரபரப்பாக தொடங்கப்பட்ட போடா போடி அறிவிப்புடன் கிடப்பில் போடப்பட்டது. கனடாவில் இப்போது பனிக்காலம், சிம்புவுக்கு கதை பிடிக்கவில்லை என்று தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.

இந்நிலையில் போடா போடி படத்தில் நடிக்க சம்மதம் தெ‌ரிவித்திருக்கிறார் சிம்பு. கனடாவுக்குப் பதில் லண்டனில் படப்பிடிப்பை நடத்துகிறார்கள். ஜோடி அதே வரலட்சுமி.

படத்தின் கதைப்படி ஹீரோயின் நன்றாக நாட்டியம் ஆடக் கூடியவர். இந்த காரணத்துக்காகதான் வரலட்சுமியை ஒப்பந்தம் செய்திருந்தனர். வரலட்சுமியும் இந்த ஒரு காரணத்துக்காகதான் நடிக்க ஒப்புக் கொண்டார்.

சிம்பு பச்சைக் கொடி காட்டியதால் அதிக சந்தோஷத்தில் இருக்கிறார் விக்னேஷ் சிவா. இவர்தான் போடா போடியின் இயக்குனர். நியாயமான சந்தோஷம்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites