''இங்கே ஓராயிரம் நித்யானந்தர்கள்!''

21 April 2010 ·


ராம்கோபால் வர்மா... பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநர். படபடவெனப் படங்கள் எடுப்பதும், தடதடவென அதை ஓடவைப்ப தும் ராம்கோபால் வர்மாவின் ஸ்டைல். எழுத் தாளர், தயாரிப்பாளர் எனப் பல அவதாரங்களோடு வலம் வரும் ராம்கோபால் வர்மாவை போனில் பிடித்தேன்.


''உங்கள் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் 'பொம்மை-2' படத்தை நீங்களே இயக்கி இருக்கலாமே?''

'' 'பொம்மை-1' படத்தின் இரண்டாவது பார்ட்தான் பொம்மை-2. இந்த முறை பொம்மை-1 படத்தின் கதையை எழுதியவரிடமே இயக்கச் சொல்லிவிட்டேன். படத்தை த்ரில்லாக, திகிலாக எடுத்துக்கொடுத்திருக்கிறார். இதுவரை பார்த்திராத பேய்ப் படம் எனப் பலர் புகழ்கிறார் கள். நீங்கள் எவ்வளவு பெரிய தைரியசாலியாக இருந்தாலும், பயப்படாமல்

முடியாது. அதனால் 'பொம்மை - 2 பார்த்துவிட்டு, இயல்பான இதயத்துடிப்போடு எழுந்து வருபவர்களுக்கு 5 லட்ச ரூபாய் பரிசுத் தொகை கொடுக்கப்படும்' என அறிவித்திருக்கிறேன்.''

''சூர்யாவை வைத்து 'ரக்தா சரித்ரா' படம் இயக்குவது எப்படி இருக்கிறது?''

''சூர்யா ஒரு திறமையான நடிகர் என்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், இப்போதுதான் அவரது திறமையை நேரில் பார்க்கிறேன். கதைக்கு ஏற்றபடிதான் நான் எப்போதுமே நடிகர்களைத் தேர்ந்தெடுப்பேன்.சூர்யா வுக்குத் துடிப்பான கண்கள். அப்படி ஒருவர்தான் இந்தக் கதைக்குத் தேவை. அதனால் அவரைத் தேர்ந்தெடுத்தேன். சூர்யாவின் சினிமா கேரியரில் 'ரக்தா சரித்ரா' ஒரு முக்கியமான படமாக இருக்கும்.''

''பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என மூன்று மொழிகளிலும் படம் இயக்குவது எப்படி இருக்கிறது?''

''நான் எப்போதுமே மாநிலம், தேசியம் என்று பாகுபாடு பார்ப் பது இல்லை. சினிமாவுக்குமொழி, இடம், காலம் எதுவும் கிடையாது. மக்களுக்குப் பிடித்திருந்தால், அது எந்த மொழியாக இருந்தாலும் ஹிட் ஆகும். 'மக்களுக்கு இந்தக் கதை பிடிக்குமா?' என்று யோசிப்பேனே தவிர, என்ன மொழி, எந்த ஹீரோ என்றுபார்ப் பது இல்லை. அதனால் வேலை சுலபமாக இருக்கிறது!''

''நித்யானந்தா சாமியார்பற்றி நீங்கள் படம் இயக்கப்போவதாகச் செய்திகள் வருகின்றனவே?''

''உங்களுக்கு ஒரு நித்யானந்தரைத்தான் தெரியும். இங்கே ஓராயிரம் நித்யானந்தர்கள் இருக் கிறார்கள். லட்சக்கணக்கான பக்தர்களை ஏமாற்றி எப்படி கோடிக்கணக்கில் பணம் சுரண்டு கிறார்கள் என்பதையும் அவர் களின் செக்ஸ் லீலைகளையும் வெளிச்சம்போட்டுக் காட்டப் போகிறேன். அதிரடிக்கு ரெடியாக இருங்கள்!''

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil