ட்விஸ்ட்டர் டிவிஎஸ்'

21 April 2010 ·


ந்திய பைக் மார்க்கெட்டில், முதன்முறையாக கிளட்ச் இல்லாத பைக்காக... புத்தம் புது தொழில்நுட்பத்துடன் வெளிவந்திருக்கிறது டிவிஎஸ் ஜைவ். கிளட்ச் இல்லாத பைக் என்பதுதான் ஜைவ்வின் பலம். 110 சிசி திறன் கொண்ட இந்த பைக்குடன், அதே சிசி திறன் கொண்ட இன்னொரு பைக்கும் போட்டி போடுகிறது. அதுதான் ஹோண்டாவின் புத்தம் புது ஸ்டைல் ராக்கெட்டான சிபி ட்விஸ்ட்டர். இரண்டு பைக்குகளுமே இன்றைய தலைமுறையினரைக் கவர்வதற்காகக் களமிறக்கப்பட்டு இருக்கும் பைக்குகள். இதில், கிளட்ச் இல்லாத பைக் வாங்குவதா அல்லது ஸ்டைலாக இருக்கும் ஹோண்டா சிபி ட்விஸ்ட்டரை வாங்குவதா... எது பெஸ்ட்?

வடிவமைப்பு மற்றும் ஸ்டைல்

ஜைவ், ஸ்டைலில் எப்படி?

'ஸ்டைலான பைக் சிபி ட்விஸ்ட்டர்' என்று சொல்லும்போதே, டிவிஎஸ் ஜைவ்

ஸ்டைலில் எப்படி என்பது புரிந்திருக்கும். ஏற்கெனவே நாம் பார்த்துப் பழகிய

சராசரி

100 சிசி பைக் போலவே இருக்கிறது டிவிஎஸ் ஜைவ். அலாய் வீல், ஷாக் அப்ஸார்பர், இன்ஜின், சைலன்ஸர், கைப் பிடி என பைக் முழுமைக்குமே கறுப்பு வண்ணம் பூசப்பட்டு இருக்கிறது. சின்ன ஃபேரிங்கினுள் இருக்கும் 35 வோல்ட் ஹாலோஜன் ஹெட் லைட் பவர்ஃபுல்லாக இருக்கிறது!

இரட்டைக் குடுவை மீட்டர்கள் எண்களைத் துல்லியமாகக் காட்டுகின்றன. இதில் ஸ்பீடோ மீட்டர், ஃப்யூல் இண்டிகேட்டர் ஆகியவற்றோடு எந்த கியரில் பயணித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதைக் காட்டும் கியர் இண்டிகேட்டரும்

உண்டு. கிளட்ச் இல்லை என்பதால், கியர் இண்டிகேட்டர் இருப்பது கூடுதல் வசதி. ரியர் வியூ கண்ணாடிகள் பின்னால் வரும் வாகனங்களை சிந்தாமல் சிதறாமல் காட்டுகின்றன. க்ரிப் லீவர்கள் பிடித்து ஓட்டுவதற்கு வசதியாக இருக்கின்றன. கிளட்ச் இல்லை என்பதால், அதற்கான லீவரும் கிடையாது.

சீட் வசதியாகவும், நீண்ட தூரம் உட்கார்ந்து பயணிப்பதற்கு ஏற்ற வகையிலும் இருக்கிறது. மேலும், சீட்டுக்குக் கீழே பொருட்கள் வைத்துக்கொள்ளும் வசதி இருப்பது மிகவும் உபயோகமாக உள்ளது. பெயின்ட் குவாலிட்டி மற்றும் ஃபிட் அண்டு ஃபினிஷ§ம் சிறப்பாகவே உள்ளன.

ஆனால், 'கிளட்ச் இல்லை' என்ற சூப்பர் டெக்னாலஜியுடன் வந்திருக்கும் இந்த பைக்கின் ஸ்டைல், மிகவும் சாதாரணமாக இருப்பது ஏமாற்றமே! டிவிஎஸ், நிச்சயம் இந்த பைக்கின் ஸ்டைலில் புதுமைகளைப் புகுத்தியிருக்க வேண்டும். அப்போதுதான் இந்த பைக், 100 சிசி கூட்டத்தோடு கூட்டமாக இல்லாமல் மாறுபட்டுத் தெரிந்திருக்கும்.

ட்விஸ்ட்டரில் என்ன புதுமை?

பார்த்தவுடனே... 'இது 100 சிசி பைக்கா!' என மிரட்சியை ஏற் படுத்து வதுதான் ஹோண்டா சிபி ட்விஸ்ட்டரின் பலம். ஸ்டைல் டிபார்ட் மென்ட்டைப் பொறுத்தவரை அது ட்விஸ்ட் டான்ஸே ஆடி விட்டது. அலாய் வீல், முன்பக்க ஃபோர்க், ஹேண்டில் பார், சைலன்ஸர் என அனைத்துமே கறுப்பு வண்ணத்தில் கவர்ச்சி காட்டியிருக்கின்றன.

ட்விஸ்ட்டரிலும் 35 வோல்ட் ஹாலோஜன் ஹெட் லைட் பொருத்தப்பட்டு உள்ளது. அனலாக் மீட்டரிலேயே டிஜிட்டல் மீட்டரின் எஃபெக்ட்டைக் கொண்டு வந்துள்ளது ஹோண்டா. பெரிய குடுவைக்குள் ஸ்பீடோ மீட்டர் இருந்தாலும் டேக்கோ மீட்டர் மிஸ்ஸிங். பெட்ரோல் இருப்பைக் காட்டும் 'ஃப்யூல் லெவல் இண்டி கேட்டர்' அருகிலேயே வைக்கப்பட்டு இருக்கிறது. கண்ணாடிகள் பின் பக்கம் வரும் வாகனங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. சுவிட்சுகளின் தரமும் சூப்பர்.

ஆனால், நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்லும்போது, எதிரே வரும் வாகனங்களுக்கு ஹெட் லைட்டை அணைத்துக் காட்டி எச்சரிக்கை செய்யும் 'ஃப்ளாஷ் லைட்' ட்விஸ்ட்டரில் இல்லை. டிவிஎஸ் ஜைவ்வில் 15 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருக்கும் நிலையில், ட்விஸ்ட்டர் 8 லிட்டர் பெட்ரோல் டேங்க்கையே கொண்டிருக்கிறது. மேலும், பெட்ரோல் டேங்க் மூடி பைக் கோடு இணையாமல், ஒவ்வொரு முறையும் வெளியே எடுத்துவிட்டு பெட்ரோல் நிரப்பும் வகையில் உள்ளது. டேங்க்கின் இரண்டு பக்கமும் வைக்கப்பட்டு இருக்கும் ஸ்கூப், உயரமானவர்கள் ஓட்டும்போது கால் முட்டியை இடிக்கிறது.

ட்விஸ்ட்டரின் பின்பக்கமும் ரசிக்கும்படியாகவே உள்ளது. பின் பக்க இருக்கைகளுடனேயே சைடு பேனல்களையும், பின்பக்க கைப்பிடியையும் இணைத் திருப்பது அழகு!

ஸ்டைலில் டிவிஎஸ் ஜைவ் வைவிட பல படிகள் முன்னி லையில் இருக்கிறது ஹோண்டா சிபி ட்விஸ்ட்டர்!

இன்ஜின், கியர் பாக்ஸ் மற்றும் பர்ஃபாமென்ஸ்

கிளட்ச் இல்லாமல் எப்படி?

109.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜினைக் கொண்டி ருக்கிறது டிவிஎஸ் ஜைவ். இது 7500 ஆர்பிஎம்மில் அதிபட்சமாக 8.4 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. ஜைவ்வில் கிளட்ச் இல்லை. அதற்குப் பதில் 'டி-மேட்டிக் ட்வின் கிளட்ச்' எனப்படும் ஆட்டோ மேட்டிக் கிளட்ச் சிஸ்டம் இருக்கிறது.

கிளட்ச் இல்லை என்பதால், எந்த கியரில் இருந்துகொண்டு வேண்டுமானாலும் பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியும். இருப்பினும், பைக்கின் நீட்டிப்புத் தன்மையைக் கணக்கில் கொண்டு, நியூட்ரலில் இருந்தே பைக்கை ஸ்டார்ட் செய்வது நல்லது. ஜைவ்வில் ரோட்டரி கியர் பாக்ஸ் இருக்கிறது. இதன்படி பைக்கை நான்காவது கியரில் இருந்து கொண்டே நேரடியாக நியூட்ரலுக்குக் கொண்டு வர முடியும். ஆனால் இதை, பைக் ரன்னிங்கில் இருக்கும்போது செய்ய முடியாது.

ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் போன்ற உணர்வையும், அதேசமயம் பைக் போன்ற பர்ஃபாமென்ஸையும் கொடுக்கிறது ஜைவ். இது 0-60 கி.மீ வேகத்தை 8.27 விநாடிகளில் கடக்கிறது. ஜைவ்வின் டாப் ஸ்பீடு மணிக்கு 94 கி.மீ. 60 கி.மீ வேகம் வரை பைக்கில் அவ்வளவாக அதிர்வுகள் தெரியவில்லை. ஆனால், 60 கி.மீ வேகத்தைத் தாண்டிவிட்டால் அதிர்வுகள் பைக் முழுவதும் பரவ ஆரம் பித்துவிடுகின்றன. அதேபோல், கியர் லீவரின் எடை அதிகமாக இருப்பதால், கியர்களை மாற்று வதற்குக் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.

ஹோண்டாவின் இன்ஜினில் என்ன ஸ்பெஷல்?

சிபி ட்விஸ்ட்டர் 109 சிசி, 4 ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜினைக் கொண்டிருக்கிறது. இதன் அதிபட்ச சக்தி 8000 ஆர்பிஎம்-ல் 9 bhp. ஜைவ்வுக்கும், ட்விஸ்ட் டருக்கும் வெறும் 0.6 bhp சக்தி தான் வித்தியாசம் என்றாலும், ட்விஸ்ட்டரில் பவரை அதிகம் உணர முடிகிறது. ஜைவ்வைவிட கிட்டத்தட்ட 1 விநாடி அதிகமாக அதாவது, 0-60 கி.மீ வேகத்தை 7.13 விநாடிகளில் கடந்துவிடுகிறது ட்விஸ்ட்டர். இதன் அதிபட்ச வேகம் மணிக்கு 96 கி.மீ.

குறைந்த வேகத்தில் சென்றாலும் சரி, அதிக வேகத்தில் சென்றாலும் சரி, இன்ஜினில் எந்தவிதமான திக்கல் திணறல் இல்லை. நான்காவது கியரில்கூட எந்தத் தடையும் இல்லாமல் வெறும் 25 கி.மீ வேகத்தில் பயணிக்க முடியும். இன்ஜின் அதிர்வுகளும் இதில் இல்லை.

வழக்கமாக கிளட்ச், கியர் பாக்ஸ் 'செட்-அப்' கொண்டது ட்விஸ்ட்டர். நான்கு கியர்களை மட்டுமே கொண்டிருப்பது ட்விஸ்ட்டரின் மைனஸ். நிச்சயம் இந்த பைக்குக்கு 5 கியர்கள் தேவை!

அதிர்வுகள் இல்லாமல், ஸ்மூத்தான இன்ஜினோடு இருக்கிறது ட்விஸ்ட்டர். ஜைவ்வுக்கும், டிவிஸ்ட்டருக்கும் பர்ஃபாமென்ஸில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லையென்றாலும், ட்விஸ்ட்டரை ஓட்டும்போது சீறிக்கொண்டு பறப்பது போல ஒரு ஃபீல் இருக்கிறது. இது ஜைவ்வில் மிஸ்ஸிங்!

ஓட்டுதல், கையாளுமை மற்றும் பிரேக்கிங்

டிவிஎஸ் ஜைவ்வின் சீட்டுகள் மற்றும் ஹேண்டில் பார் பைக்கில் வசதியாக உட்கார்ந்து ஓட்டுவதற்கு ஏற்றபடி இருக்கின்றன. சஸ்பென்ஷனும் மேடு பள்ளங்களில் ஓட்டும்போது அசௌகரியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், ஜைவ்வின் டயர் மற்றும் பிரேக்குகள் சொதப்புகின்றன. டயர்களில் க்ரிப் இல்லையென்பதோடு, பிரேக் மிகவும் சுமாராகத்தான் இருக்கிறது. 60 கி.மீ வேகத்தில் சென்று சடர்ன் பிரேக் அடித்தால், 20.49 மீட்டர் தூரத்தில் நிற்கிறது ஜைவ். இதில் முன்பக்கம் டிஸ்க் பிரேக் இல்லை.

முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்பக்கம் ஹைட்ராலிக் ஷாக் அப்ஸார்பர்களைக் கொண்டிருக்கும் ட்விஸ்ட்டர், மேடு பள்ளங்களில் ஏகத்துக்கும் அடிபடுகிறது. முன் மற்றும் பின்பக்கம் 17 இன்ச் எம்.ஆர்.எஃப் டயர்களைக் கொண்டிருக்கும் ட்விஸ்ட்டரின் கிரிப் பிரமாதம். இதில் முன்பக்கம் வேண்டுமென்றால் 'தேர்ந்தெடுத்துக் கொள்ளும்' வசதியுடன் டிஸ்க் பிரேக் உள்ளது. சிபி ட்விஸ்ட்டரில் 60 கி.மீ வேகத்தில் சென்று சடர்ன் பிரேக் அடித்தால், 17.33 மீட்டர் தூரத்துக்குள் பைக் நின்றுவிடுகிறது.

மைலேஜ்

கிளட்ச் இல்லாத டிவிஎஸ் ஜைவ் நகருக்குள் லிட்டருக்கு 53.4 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 55.2 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது. ஹோண்டா சிபி ட்விஸ்ட்டர் நகருக்குள் 57.2 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 61.3 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது. டிவிஎஸ் ஜைவ்வின் சற்றுக் குறைவான மைலேஜுக்குக் காரணம், கிளட்ச் இல்லை என்பதுதான்!

கிளட்ச் இல்லாமல் புதிய தொழில் நுட்பத்துடன் வெளிவந் திருக்கும் டிவிஎஸ் ஜைவ், 100 சிசி பைக்கை விரும்பும் அனைத்து தரப்பட்ட வாடிக்கை யாளர் களையும் கவருமா என்பது சந்தேகம்தான்! நகர டிராஃபிக் நெருக்கடிகளுக்குள் கிளட்ச் தொந்தரவு இல்லாமல், ஸ்கூட்டரில் பயணிப்பதுபோல் பைக்கில் பயணம் போக வேண்டும் என விரும்புபவர்களுக்கு டிவிஎஸ் ஜைவ் நல்ல சாய்ஸ். ஆட்டோமேட்டிக் கிளட்ச் தொழில் நுட் பத்தைக் கொண்டிருந்தாலும் இதன் விலை அதிகமாகவும் இல்லை.

ஸ்டைல், பர்ஃபாமென்ஸ், மைலேஜ் என மூன்று விஷயங்களிலுமே முதலிடத்தில் இருக் கிறது ஹோண்டா சிபி ட்விஸ்ட்டர். 18-35 வயது வரையிலான வாடிக்கை யாளர்களை ஈர்க்கும் தோற்றத்துடன்... அதேசமயம், பர்ஃபாமென்ஸ், மைலேஜ் என இரண்டிலும் குறைவில்லாமல் இருக் கிறது. பர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கும் இந்த பைக்கில், 5-வது கியர் இருந் திருந் தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். எம் .ஆர்.எஃப் டயர்கள் இந்த பைக்குக்கு சரியாகப் பொருந்தி இருக்கின்றன.

ஆனால், விலைதான் ஜைவ்வுக்கும் ட்விஸ்ட் டருக்குமான இடைவெளியை அதிகரித்துவிடுகிறது. கிட்டத்தட்ட ஜைவ்வைவிட ஏழாயிரம் ரூபாய் விலை அதிகமாக இருக் கிறது ஹோண்டா சிபி ட்விஸ்ட்டர். டிவிஎஸ் ஜைவ்வில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப் படுத்தப் பட்டும் விலை குறைவாக இருக்கும் நிலையில், ஹோண்டா வெறும் ஸ்டை லுக்காக மட்டும் விலையை ஏற்றி வைத் திருப்பதில் எந்த நியாயமும் இல்லை.

நகர டிராஃபிக் நெருக்கடிகளுக்குள் அன் றாடம் போய் வர, கிளட்ச் இல்லாத ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் போன்ற பைக் வேண்டுமென்றால், டிவிஎஸ் ஜைவ் வாங்கலாம். ஆனால் ஸ்டைல், பர்ஃபா மென்ஸ், மைலேஜ் மூன்றுமே கொண்ட 100 சிசி பைக் வாங்க வேண்டுமென்றால், சிபி ட்விஸ்ட்டரைவிட வேறு சாய்ஸ் இல்லை

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil