''அணு உலை எல்லாமே அணு குண்டுதான்!''

19 April 2010 ·





நாமெல்லாம் உயிர் வாழ வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு நாம் செயல்பட வேண்டும். நமக்கு ஒரு புதிய சிந்தனை வந்தாக வேண்டும்!'' என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்த மாநாட்டையட்டி, பல்வேறு நாடு களின் தலைவர்களை ஒபாமா தனித்தனியே சந்தித்து பேசியிருக்கிறார். அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடு களும் இணைந்து மெக்சிகோவிலிருக்கும் ஆயுதம் தயாரிக்கக்கூடிய யுரேனியத்தை எவ்வாறு முழுமையாக அழித்தொழிப்பது என்பது குறித்து திட்டமிட்டு செயல்படும் என்று மூன்று நாடுகளின் தலைவர்களும் கூட்டாக அறிவித்துள்ளனர். கனடாவும்கூட தம்மிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனி யத்தை அமெரிக்காவிடம் அளித்து விடுவதாகக் கூறியிருக்கிறது.

வாஷிங்டனில் நடந்த இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட பிரதமர் மன்மோகன் சிங், பயங்கரவாதிகளின் கையில் அணு ஆயுதங்கள் கிடைத் தால் அதனால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார். அணு ஆயுத வல்லமை கொண்ட நாடுகள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நாடுகள் பெற்று விடாதவாறு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனவும் பிரதமர் இந்த மாநாட்டில் வலியுறுத்தி இருக்கிறார். 'அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதற்கான கடமைகொண்ட நாடுகள் தமது பொறுப்பை சரிவர நிறைவேற்றவில்லையென்பது வருத்தத்துக்குரியது. திருட்டுத்தனமாக அணு ஆயுதத் தொழில்நுட்பத்தைப் பரப்புகிற வலைப் பின்னல் இப்போது அதிகரித்துள்ளது. இதனால், அனைவருக்கும் குறிப்பாக இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது' என அவர் பேசியிருக்கிறார்.

நமது பிரதமரின் பேச்சு மறைமுகமாக பாகிஸ்தானை நோக்கியதாகவே உள்ளது. அதை பாகிஸ்தானும் மற்ற நாடுகளும் புரிந்துகொள்ளாமல் இல்லை. மன்மோகன் சிங் பேசியதையட்டியே ஒபாமாவின் பேச்சும் அமைந்திருந்தது. ஒபாமாவின் பேச்சு அல்கொய்தா அமைப்பினரிடம் அணு ஆயுதங்கள் சிக்கிவிடக்கூடாது என்ற கவலையையே வெளிப்படுத்துவதாக இருந்தது. பயங்கரவாதிகள் அல்லது புரட்சிக் குழுக்களிடம் அணு ஆயுதங்கள் சிக்கிவிடக்கூடிய ஆபத்தைப்பற்றி நீண்ட காலமாகவே பேசப்பட்டுவந்த போதிலும் செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு இந்த அச்சுறுத்தல் அதிகரித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நிலைமை கைமீறி போவதற்குள்ளாக ஏதாவது ஒரு விதத்தில் செயல் பட்டே ஆகவேண்டிய நிர்ப்பந்தம் இன்று வளர்ந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் பிரதிபலிப்பைத்தான் இந்த மாநாட்டில் நாம் பார்க்கிறோம்.

அணு ஆயுதங்களை நாட்டு வெடிகுண்டைப்போல எவர் வேண்டுமானாலும் தயாரித்துவிட முடியாது. அது மட்டுமல்லாது... அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களும்கூட எளிதில் கிடைத்துவிடாது. இப்படி இதில் ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அணுசக்தி பயங்கரவாதத்தின் ஆபத்து அதிகரிக்கவே செய்கிறது. அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கிவிடும் என்று சொன்னால் பயன்படுத்துவதற்கு தயாராக இருக்கும் ஆயுதங்களில் ஒன்று பயங்கரவாதிகள் கைகளுக்குப் போய்விடும் என்று மட்டுமே அதற்குப் பொருளல்ல. பயங்கரவாதிகள் நினைத்தால் வேறு விதங்களில்கூட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடமுடியும்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் அணுஉலைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்திலும்கூட புதிய அணு உலைகள் கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின் றன. இவற்றுக்கு போதுமான பாதுகாப்பு இருக்கிறதா? இப்போது அந்த உலைகள் காவல் துறை மற்றும் பாது காப்பு படையினரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இந்த பாதுகாப்பு, பயங்கரவாதிகளிடமிருந்து அணு உலைகளைக் காப்பாற்றுவதற்கு போதுமானதுதானா என்று நாம் சிந்திக்க வேண்டும். செப்டம்பர் 11 தாக்குதல் நடப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பயங்கரவாதிகளின்நடவடிக்கைகளை யூகித்து அமெரிக்காவிலுள்ள 'நியூக்ளியர் கன்ட்ரோல் இன்ஸ் டிட்யூட்' என்ற நிறுவனம் நியூயார்க் பல்கலைக் கழகத்தோடு இணைந்து அணு ஆயுத பயங்கரவாதத்தை தடுக்கும் நோக்கோடு குழு ஒன்றை அமைத்தது. அதில் உலகப் புகழ்பெற்ற 26 அணு விஞ்ஞானிகள் இடம்பெற்றனர். பயங்கரவாதிகள் மரபு வழிப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியே மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று எண்ணும்போது அவர்களிடம் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான பொருட்கள் கிடைத்தால் நிச்சயமாக மிகப்பெரும் ஆபத்து நேரும் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

அமெரிக்காவிலுள்ள அணுஉலைகளின் பாதுகாப்பை பரிசோதிப்பதற்காக அந்த நாட்டு காவல் துறை ஒத்தி கையாக நடத்திய தாக்குதலின்போது அங்குள்ள பாது காப்பு கட்டமைப்புகள் எந்த அளவுக்குப் பலவீனமாக இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. 2001 செப்டம்பரில் அமெரிக்காவில் இரட்டை கோபுரங்களைத் தாக்கியதுபோல ஜெட் விமானங்களைக் கொண்டு தரையிலுள்ள அணு உலைகளை மோதினால் அந்தச் சுவர்கள் உருகி உள்ளே இருக்கும் கதிர்வீச்சுக் கொண்ட பொருட்களை சேதப்படுத்திவிடும். அவ்வாறு நேர்ந்தால் கதிர்வீச்சின் காரணமாக ஏராளமானவர்களின் உயிர் பறிக்கப்படும் என்று அந்தக் குழு எச்சரித்திருந்தது. ஆனால், அப்போதெல்லாம் அதை அமெரிக்காவோ மற்ற நாடுகளோ பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அணு உலைகளின் மீது மோதுவது மட்டுமின்றி, பயங்கரவாதிகளே அணு ஆயுதங்களை தயாரிக்க நேர்ந்தால் என்ன ஆகும் என்பது அடுத்த கவலை. அமெரிக்காவிலுள்ள அணு ஆயுத நிபுணர்கள் ஐந்து பேர் ஓர் ஆய்வினை மேற்கொண்டார்கள். தற்போது உலகில் இருக்கும் ஏதோவொரு பயங்கரவாதக் குழு, அணு ஆயுதங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெற நேர்ந்தால் அந்தக் குழுவால் அணு ஆயுதம் ஒன்றைத் தயாரிக்க முடியுமா? இதுதான் இந்த நிபுணர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி. ஆய்வின் முடிவில் அவர்கள் தெரிவித்த கருத்து மிகவும் அதிர்ச்சி ஊட்டக்கூடியது. தற்போதுள்ள பயங்கரவாதக் குழுக்களில் ஏதோ ஒன்றிடம் புளூட்டோனியமோ செறிவூட்டப்பட்ட யுரேனியமோ கிடைத்தால் அவற்றால் அணு ஆயுதம் ஒன்றைத் தயாரித்துவிட முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். 18 பவுண்டு புளூட்டோனியமோ அல்லது 55 பவுண்டு செறிவூட்டப்பட்ட யுரேனியமோ இருந்தால் போதும். அதைக் கொண்டு அணுகுண்டு ஒன்றைத் தயாரித்து விடலாம்.



மெரிக்க அரசால் கூட்டப்பட்ட 'அணுசக்தி பாதுகாப்பு மாநாடு' எதிர்பாராத கவலையை வெளிப் படுத்திவிட்டு நிறைவடைந்திருக்கிறது. 47 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில் பேசிய பலரும், அணு ஆயுத பயங்கரவாதத்தின் ஆபத்துகளைப் பற்றி வெவ்வேறு கவலைகள் தெரிவித்திருக்கிறார்கள். அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் வல்லமை இல்லாத நாடுகள் புதிதாக அந்த ஆற்றலைப் பெற்றுவிடாமல் தடுக்க வேண்டுமென்பதிலேயே இதுவரை உலக வல்லரசுகள் கவனம் செலுத்தி வந்தன. ஆனால், இந்த மாநாட்டில் அதைப்பற்றி அவ்வளவாக யாரும் பேசவில்லை. அந்த விதத்தில் இது ஒபாமாவுக்கு வெற்றி என்றே கூறலாம்.

2001-ம் ஆண்டு அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவின் கவலையெல்லாம் பயங்கரவாதம் பற்றியதுதான். இந்த மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வார்த்தைகள் இதை மிகத் தெளிவாகவே எடுத்துக் காட்டுவதாக இருந்தன. ''பனிப்போர் காலம் முடிவடைந்து 20 ஆண்டுகள் கழித்து வரலாற்றின் குரூரமான முரண் பாட்டை நாம்

இருந்த அணு ஆயுத மோதல் குறித்த அச்சம் இப்போது குறைந்துவிட்டது. ஆனால், அணு ஆயுத தாக்குதல் பற்றிய பயம் மட்டும் பலமடங்கு அதிகரித்திருக்கிறது!'' என்று அவர் பேசியுள்ளார். சிறிய அளவு புளூட்டோனியம் தவறானவர்களின் கையில் கிடைத்து விட்டால்கூட அது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி விடும் என்பதை ஒபாமா தனது பேச்சினிடையே சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் தயாரிப்ப தற்காக அணுசக்தி பயன்படுத்தப்படுவதை நாம் அறிவோம். இப்படி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கென்று உலகமெங்கும் பல டன் எடை கொண்ட புளூட்டோனி யமும், யுரேனியமும் பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றை எங்கே இருந்தாவது பயங்கர வாதிகள் திருடிச் செல்வதென்பது சாத்தியமான ஒரு விஷயம்தான்.

இவை தவிர, தற்போது பல்வேறு நாடுகள் தயாரித்து வைத்திருக்கும் அணு ஆயுதங்களில் எதையேனும் பயங்கரவாதிகள் திருடிச் சென்றுவிட்டால் என்ன ஆகும் என்ற கேள்வியும் எழவே செய்கிறது. ரஷ்யாவின் தகர்வுக்குப் பிறகு இப்படி அணு ஆயுதங்கள் பயங்கர வாதிகளின் கைகளுக்குப் போவது சாத்தியமே என்று பலராலும் சுட்டிக் காட்டப்பட்டது. சோவியத் யூனியன் உடைந்ததற்குப் பிறகு அங்கு அணுசக்தித் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த பல்வேறு விஞ்ஞானிகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. அவர்கள் மூலமாக வேறு நாடுகளுக்கு அணு ஆயுத தொழில்நுட்பம் பரவக்கூடும் என்ற அச்சம் அப்போது பலராலும் எழுப்பப்பட்டது. அதுமட்டுமின்றி, ரஷ்யாவில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்கள் என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுப்பப் பட்டது. இத்தகைய கேள்விகள் இன்னும் பதில் சொல்லப்படாமலேயே இருக்கின்றன.

அணு ஆயுதங்கள் மட்டுமின்றி, கதிர்வீச்சுக் கொண்ட எந்தவொரு பொருளையும் வைத்து மிகப்பெரிய உயிர்சேதத்தை பயங்கரவாதிகளால் ஏற்படுத்திவிட முடியும். கதிர்வீச்சுக் கொண்ட பொருட்களை சாதாரண குண்டுகளில் வைத்து வெடிக்கச் செய்வதன் மூலமோ அல்லது கதிர்வீச்சுக் கொண்ட பொருட்களை மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் பரவச் செய்வதன் மூலமோ ஏராளமான உயிர் சேதத்தை அவர்களால் ஏற்படுத்த முடியும் என்பதற்கு சமீபத்து டெல்லி சம்பவம் ஓர் உதாரணம்.

அணுசக்தியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்உற்பத்தி நிலையங்களில் பயன்

படுத்தப்பட்ட அணு எரிபொருள் கழிவாக மிச்சமாகிறது. அந்த கழிவுப் பொருட்களை ஒழித்துக் கட்டுவதற்கு மிக அதிக அளவில் பொருட்செலவு ஆகும் என்பதால் எந்த நாடும் அதுபற்றி கவலைப்படுவதில்லை. இவ்வாறு மிச்சம்மீதியாகக் கிடக்கும் அணு கழிவுப் பொருட்கள் மிக எளிதாக பயங்கரவாதிகளின் கைகளில் சிக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. இப்படியான கழிவுப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆயுதங்களை 'டர்ட்டி பாம்' என்று குறிப்பிடுகின்றனர். அத்தகைய குண்டுகளை பயங்கரவாதிகள் தயாரிக்க முடியுமேயானால், நிச்சயமாக நிலைமை ஆபத்தாக மாறிவிடும். இவையெல்லாம் பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டி வரும் விஷயங்கள்தான். அணு ஆயுதங்களுக்கும், அணுசக்திகளுக்கும் எதிரான பிரசாரத்தை மேற்கொண்டிருக்கும் பல்வேறு சுற்றுச்சூழல் குழுவினரும்கூட இதைப்பற்றி நீண்டகாலமாக பேசி வந்துள்ளனர். இப்போதுதான் அதிகாரத்திலிருப்பவர் களுக்குக் கண்கள் திறந்திருக்கின்றன.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு விஷயத்தை வலியுறுத்தி இருக்கிறார். 'நாம் எதிர் கொண்டிருக்கும் மிகப்பெரிய சவால் அணுசக்தியை அமைதிப் பணிகளுக்காக பயன்படுத்துகின்ற 10-க்கும் மேற்பட்ட நாடுகளின் கையிருப்பில் இருக்கும் 2,000 டன்களுக்கும் அதிகமான புளூட்டோனியம் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆகியவற்றை எப்படி பாதுகாப்பது என்பதுதான். இந்தப் பொருட்களை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தாலோ வெடிக்க வைக்க முயற்சித்தாலோ அதனால் மிகப்பெரிய அழிவு ஏற்படும். அதனால், உயிரிழப்பு மட்டுமின்றி அரசியல் பொருளாதார பாதிப்புகளும் ஏற்படும்' என்று அவர் கூறியிருக்கிறார். இந்த மாநாட்டின் முக்கியமான ஓர் அம்சம்... அமெரிக்காவும், ரஷ்யாவும் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஓர் ஒப்பந்தமாகும். தங்கள் கைவசம் உள்ள புளூட்டோனியத்தில் தலா 34 டன்களை பாதுகாப்பான முறையில் அழித்துவிடுவது என்று அந்த ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள மொத்தம் 68 டன் புளூட்டோனியத்தைக் கொண்டு சுமார் 17 ஆயிரம் அணு ஆயுதங்களை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அணுசக்தியை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்து வோம் என்று ஆர்ப்பரித்தவர்கள் இன்று அதன் ஆபத்தைப்பற்றி வாய்திறந்திருக்கிறார்கள். அணுசக்தி என்பது அடிப்படையில் அழிவு சக்திதான். ஒவ்வொரு அணு உலையும் ஓர் அணுகுண்டுதான். 'காசு கொடுத்து சூனியம் வைத்துக்கொள்வது' என கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. அணுசக்தி விஷயத்துக்குத்தான் அது மிகவும் பொருந்தும். பயங்கரவாதிகளிடமிருந்து மட்டுமல்ல அதிகார வெறிகொண்ட ஆட்சியாளர்களிடமிருந்தும் அணு சக்தியை காப்பாற்றியே ஆகவேண்டும். அதைப்பற்றி தீவிரமாக சிந்திக்கவேண்டிய நேரம் இது. அதைத்தான் மறைமுகமாக இந்த மாநாடு உணர்த்தியுள்ளது.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites