கப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா

19 April 2010 ·

* அப்பாடா! ஒரு வழியா காதலி பியாவை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் அறிமுகம் பண்ணி வச்சிட்டார் பிரேம்ஜி அமரன். "காதலுக்கு நான் தடை இல்லை" என அப்பா கங்கை அமரனும் பச்சைக்கொடி காட்டி காட்டிவிட்டார். அம்மாதான் இன்னும் ஓ.கே.சொல்லவில்லையாம். ('கோவா'வில் டெலவப் ஆன பால்கோவா காதல்!)
* "இப்ப சினிமா நல்லா இல்ல! ஒன்றரைக் கோடி செலவு செய்து சேனல்களில் விளம்பரம் செய்தால்தான் படத்தை ஓட்ட முடியும்ங்கிற நிலைமை. கூலித்தொழிலாளியாகி தயாரிப்பாளர்கள் தெருவுக்கு வந்து விடுவார்களோ என்கிற பயம் வந்து விட்டது" என்று நெஞ்சில் கடப்பாரையை இறக்கியிருக்கிறார் இயக்குநர்-நடிகர்-தயாரிப்பாளர் சேரன். (உண்மையைச் சொன்னா உங்களுக்கு வெச்சிடுவாங்களே ஆப்பு..!)
* "போராடிப் பார்த்தேன். ஜெயிக்க முடியல. அதனாலதான் திருப்பாச்சி அருவாளைத் தூக்கினேன். திசை மாறிப்போச்சு. ஜெயிச்சிட்டேயிருக்கேன்" என்கிறார் இயக்குநர் பேரரசு. (திசைமாறிப்போயிட்டார்னு முதல் சம்சாரம் கட்டையைத் தூக்கிட்டு கச்சேரிக்குப் போன ரகசியம் இதுதானோ!)

* "நானும் மனிதருள் மாணிக்கம் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் சாரும் முப்பதாண்டு கால நண்பர்கள். எங்க நட்பு கட்சிகளைத் தாண்டியது". இப்படி புல்லரிக்கப் பேசியிருப்பவர் இராம.நாராயணன். (ஹைய்யோ..! இது எந்த ஊரு அல்வா?)
* வாழ வேண்டிய பொண்ணுக்குச் சொந்த அப்பனே சூனியம் வச்சா எப்படி? "தமன்னாவுக்கு சம்பளம்னு எண்பது லட்சம் வரை வாங்கிடறாங்க. தனியா கப்பம் கட்டுனாதான் கால்ஷீட் கரெக்டா தருவேன்னு அவங்க அப்பா கட்டை போடுறார். யாருகிட்ட சொல்லி அழுவதுன்னு தெரியல" என்று புலம்புகிறார்கள் புரொட்யூசர்கள். (கழுதைக்கு வாக்கப்பட்டாச்சு. உதைக்குப் பயந்தா எப்படி?)
* 'நமக்கு ஓ.கே.சொல்லிவிட்டார் உலக நாயகன்' என்று நம்பிக்கையுடன் காத்திருந்தார் 'கின்' டைரக்டர். என்ன நடந்ததோ தெரியவில்லை! தயாரிப்பாளரான பெரிய இடத்துப் பேரன் வந்து கையில் 'பத்து' கொடுத்து, "டோன்ட் ஒர்ரி. பின்னாடி பார்த்துக்கலாம்" என்று சொல்லிட்டாராம். 'கின்' மிஸ் பண்ணிய இடத்தில் இப்போது 'குமார' டைரக்டர். (பத்தாவது கொடுத்தாங்களே. நாமத்தைப் போடாமல்!)

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil