நடிகையைக் கற்பழித்த இளைஞருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை..!

23 April 2010 ·
மோகமுள் தமிழ்ப் படத்தில் நாயகியாக நடித்த அர்ச்சனா ஜோக்லேகரைக் கற்பழிக்க முயன்ற இளைஞருக்கு ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.1,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்து 13 வருடங்களுக்கு பிறகு, விரைவு கோர்ட்டில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தி, மராத்தி, ஒரியா உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து வந்தவர் நடிகை அர்ச்சனா ஜோக்லேகர். தமிழில் ஞானராஜசேகரன் இயக்கிய மோகமுள் படத்தில் நடித்தார்.

கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி ஒரியா மொழிப் படமொன்றில் நடிப்பதற்காக புவனேஸ்வரம் நகரத்துக்கு சென்று இருந்தார்.

அன்று இரவில் படப்பிடிப்பு முடிந்ததும், அவர் தங்கி இருந்த பாந்தா நிவாஸ் என்ற அரசின் சுற்றுலா கழகம் நடத்தும் விடுதிக்கு திரும்பினார். தனக்கு இரவு சிற்றுண்டி கொண்டு வரும்படி ஹோட்டல் ஊழியருக்கு தெரிவித்து விட்டு, உடை மாற்றும் அறைக்குச் சென்று மேக்-அப்பைக் கலைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, ஹோட்டல் ஊழியராகத்தான் இருக்கும் என்று நம்பி கதவைத் திறந்தார்.

ஆனால், அங்கே நின்ற அறிமுகமில்லாத ஒரு இளைஞர், ஆட்டோகிராப் வாங்குவது போல பாவனை செய்து, பின்னர் அர்ச்சனாவை அறைக்குள் தள்ளி கற்பழிக்க முயன்றுள்ளார்.

உடனே அர்ச்சனா சத்தம் போடவே, ஹோட்டல் ஊழியர்கள் ஓடிவந்து அவரைக் காப்பாற்றினர். அந்த இளைஞன் அங்கிருந்து ஓடிவிட்டார். உடனே போலீஸில் புகார் கொடுத்தார் அர்ச்சனா. அடுத்த நாளே அந்த இளைஞன் கைது செய்யப்பட்டார். அவர் பெயர் பூபானந்தா பாண்டா.

இந்த வழக்கு புவனேஸ்வர் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை மிக மிக மெதுவாக நடந்தது.

அதற்குள் அர்ச்சனா அமெரிக்காவில் உள்ள நியூஜெர்ஸி நகரில் செட்டிலாகிவிட்டார். கோர்ட்டுக்கு அடிக்கடி வரமுடியவில்லை. ஒரு கட்டத்தில் இந்த வழக்கு மீது நம்பிக்கையற்று, மறந்தே போய்விட்டாராம்.

அமெரிக்காவிலிருந்து இந்த வழக்குக்காக வந்து போவதற்கு ஆகும் செலவும் மிக அதிகம் என்பதால் அர்ச்சனா நேற்றும் கோர்ட்டுக்கு வரவில்லை.

நீதிபதி ஆதித்ய பிரசாத் சாகு தீர்ப்பு வழங்கினார். குற்றம் ஊர்ஜிதமானதால், வாலிபர் பூபானந்தாவுக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil