பாலியல் குற்றச்சாட்டு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நித்யானந்தா சாமியாரின் வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படுபவர், நடிகை ரஞ்சிதா. இந்த வழக்கில் அவரிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் கருதினார்கள்.
இதைத்தொடர்ந்து ரஞ்சிதாவின் செல்போன் நம்பர் குறித்து நித்யானந்தாவிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து நித்யானந்தாவிடம் சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் யோகப்பா நேற்று விசாரணை நடத்தினார். நடிகை ரஞ்சிதா தொடர்பாக அவர் துருவி துருவி விசாரித்தார். ரஞ்சிதாவின் செல்போன் நம்பரை கொடுக்கும்படி நித்யானந்தாவிடம் யோகப்பா கேட்டார். நித்யானந்தாவும் மறுக்காமல் ரஞ்சிதாவின் செல்போன் நம்பரை போலீசாரிடம் கொடுத்து விட்டார்.
அந்த செல்போன் நம்பரில் போலீசார் தொடர்பு கொண்டு பேசியபோது மறுமுனையில் ரஞ்சிதா பேசினார். ரஞ்சிதாவிடம், ``நித்யானந்தாவுடன் உள்ள தொடர்பு குறித்து உங்களிடம் விசாரிக்க வேண்டியது இருக்கிறது. நீங்கள் உடனடியாக வந்து வாக்கு மூலம் அளிக்க வேண்டும். நீங்களாக வருகிறீர்களா, அல்லது நாங்களே அங்கு வர வேண்டுமா?`` என்று இன்ஸ்பெக்டர் யோகப்பா கேட்டிருக்கிறார்.
அதற்கு ரஞ்சிதா ``நான்(ரஞ்சிதா) தற்போது கேரள மாநிலத்தில் இருக்கிறேன். நீங்கள் இங்கு வரவேண்டாம். நானே இன்னும் 2 நாட்களில் உங்களை நேரில் வந்து சந்தித்து வாக்குமூலம் அளிக்கிறேன்.
தயவு செய்து பகல் நேரத்தில் விசாரணை நடத்த வேண்டாம். பகலில் தொந்தரவுகள் இருக்கும் எனவே, இரவில் மட்டும் 2 நாட்களும் விசாரணை நடத்துங்கள். நீங்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்துங்கள். நீங்கள் தெரிவிக்கும் இடத்துக்கு நானே வந்து வாக்குமூலம் அளிப்பேன்.” என்று கூறியுள்ளார்.
நித்யானந்தாவுடன் தொடர்புபடுத்தி கூறப்பட்ட நடிகை ரஞ்சிதா வாக்குமூலம் அளிக்கவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் முன் வந்து இருப்பது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையின் போது பல்வேறு முக்கிய தகவல்களை நடிகை ரஞ்சிதா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நித்யானந்தாவின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து அவர் பெங்களூர் அருகே உள்ள ராமநகர் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு(பொறுப்பு) நாராயண பிரசாத் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் நித்யானந்தாவை மேலும் 6 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதிக்கும்படி மனு தாக்கல் செய்யப்பட்டது.
நித்யானந்தாவை போலீஸ் காவலுக்கு அனுமதிக்க கூடாது என்று அவரது வக்கீல் வாதிட்டார். மேலும் போலீசார் நித்யானந்தாவின் ருத்ராட்ச மாலையை வாங்கி வைத்து உள்ளனர். அதனால் அவர் தியானம் செய்ய முடியாமல் சிரமப்படுகிறார். எனவே ருத்ராட்ச மாலையை அவரிடம் போலீசார் கொடுக்கும்படி கோர்ட்டு உத்தரவிடவேண்டும் என்றும் வாதாடினார். அப்போது இதுதொடர்பாக விசாரணை அதிகாரிக்கு கோர்ட்டு எதுவும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று நீதிபதி கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாராயண பிரசாத், நித்யானந்தாவை மேலும் 2 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். 30-ந் தேதி மாலைவரை அவர் போலீஸ் காவலுக்கு அனுமதிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவரை சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்
இரவில் மட்டும் விசாரிக்கவும்..! - நடிகை ரஞ்சிதா கர்நாடக போலீஸிடம் கெஞ்சல்..!
இரவில் மட்டும் விசாரிக்கவும்..! - நடிகை ரஞ்சிதா கர்நாடக போலீஸிடம் கெஞ்சல்..!
நித்யானந்தா வழக்கு தொடர்பாக நடிகை ரஞ்சிதா 2 நாட்களில் பெங்களூர் போலீஸ் முன்பு ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment