இலங்கை திரைப்பட விழா – அமிதாப்பின் விலகலுக்கு ரஜினியே காரணம்..!

29 April 2010 ·

இலங்கை திரைப்பட விழா – அமிதாப்பின் விலகலுக்கு ரஜினியே காரணம்..!


இலங்கையில் நடக்கவிருக்கும் சர்வதேச இந்தியப் பட விழாவில் அமிதாப் குடும்பத்தினர் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களின் இந்த முடிவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிதான் முக்கிய காரணம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்துக்கே பிள்ளையார் சுழி போட்டவர்கள் தமிழ் திரையுலகின் இருபெரும் கலைஞர்களான ரஜினியும் கமலும்தான். இலங்கைத் தூதரகத்திலிருந்து அழைப்பிதழ் என்ற தகவல் தெரிந்ததுமே அதனை எடுத்த எடுப்பில் நிராகரித்தவர்கள் இவர்களே. இதன் பின்னர்தான் மற்ற நடிகர்கள், கலைஞர்களும் இந்த அழைப்பை நிராகரித்துள்ளார்கள்.

இந்த உண்மை தெரிந்ததும் வைகோ, பழ.நெடுமாறன், சீமான் உள்ளிட்டோர் ரஜினிக்கும் கமலுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், இந்த விவகாரத்தை பெரிதாக முன்னெடுத்தனர். சீமானின் நாம் தமிழர் இயக்கம் மும்பையில் அமிதாப்பச்சனின் வீடுகளை முற்றுகையிட, அவரும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்துப் பேசினார்.

விழா ஏற்பாட்டாளர்களையும் நாம் தமிழர் இயக்கத்தினருடன் பேச வைத்தார். தமிழர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் முடிவெடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த அமிதாப், தனது நெருங்கிய நண்பரான ரஜினியிடம் இதுகுறித்து விரிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது அமிதாப் மற்றும் ஐஸ்வர்யாராய் மீது தமிழ் ரசிகர்கள் வைத்துள்ள மதிப்பு குறித்து ரஜினி எடுத்துக் கூறினாராம். குறிப்பாக ஐஸ்வர்யாராய் இந்த நேரத்தில் கொழும்பு செல்வது எத்தகைய விளைவுகளை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்றும் விளக்கியுள்ளார்.


இலங்கை தமிழர் பிரச்சினை, வன்னிப் போரின்போது இங்கு தமிழ்த் திரையுலகம் மேற்கொண்ட போராட்டங்கள் குறித்தும் ரஜினி கூறியதாகத் தெரிகிறது.

மேலும் மணிரத்னம் தரப்பிலும் ஐஸ்வர்யாராய்க்கு பிரச்சினையின் தன்மையைப் புரிய வைத்துள்ளனர். இதன் விளைவாக அமிதாப் குடும்பத்தினர் கொழும்பு விழாவுக்கு செல்லாமல் புறக்கணிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்த விழாவில் சிறப்புக் காட்சியாக கொழும்பில் ராவணன் படத்தைத் திரையிட திட்டமிட்டிருந்த மணிரத்னம், இப்போது அதனைக் கைவிட்டுள்ளார். இலங்கை விழாவுக்கும் ராவணன் படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil