ராசிபலன் வித்துவான் விஜயசந்தர்

26 April 2010 ·ஏப்ரல் 29 முதல் மே 13 வரை

கொள்கைப் பிடிப்பானவர் நீங்கள். தனாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று வலுவாக இருப்பதால் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வி.ஐ.பி-கள் நண்பர்களாவர். வீடு- மனை அமையும். மதிப்பு கூடும். தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். ராசிக்குள் சூரியன் தொடர்வதால் கண் எரிச்சல், வயிற்று வலி, முன்கோபம் வந்து நீங்கும். ஆபரணம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் மே 1-ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் வாகனத்தில் கவனம் தேவை. 2-ஆம் தேதி முதல் குருபகவான் 12-ல் மறைவதால் அலைச்சல், செலவு உண்டு. 8-ஆம் தேதி முதல் புதன் ராசிக்குள் நுழைவதால் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. புதியவர்கள் அறிமுகமாவர். கேது 3-ல் வலுவாக நிற்பதால் சாதுக்கள் உதவுவர். கன்னிப் பெண்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். முகப்பொலிவு கூடும். 6-ல் சனி வலுவாக இருப்பதால் கடனை பைசல் செய்வீர்கள். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பாக்கி வசூலாகும். உத்தி யோகத்தில் வேலைச்சுமை உண்டு. அதிகாரிகள் உதவுவர். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். தடைகள் உடைபடும் தருணம் இது.

புதுமை குணம் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு குருபகவான் மே 2-ஆம் தேதி முதல் 11-ல் நுழைவதால் பண வரவு, மகிழ்ச்சி அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தாரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். வி.ஐ.பி-கள் ஆதரிப்பர். பழைய கடனை பைசல் செய்வீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே ஆட்சிப் பெற்று இருப்பதால் இளமை கூடும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். 2-ல் கேது நிற்பதால் பேச்சில் கடுமை வேண்டாமே. பெண்களுக்கு கல்யாண விஷயங்கள் சாதகமாக முடியும். செவ்வாய் சாதகமாக இருப்பதால் பூர்வீகச் சொத்தில் அனுகூல நிலை உண்டு. பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மே 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி மாலை 4 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் காரியத்தடை, வீண் அலைச்சல் வரக்கூடும். மே 8-ஆம் தேதி முதல் புதன் சூரியனுடன் சேர்வதால் அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. அரசியல்வாதிகள் உற்சாகத்துடன் இருப்பர். வியாபாரத்தில் மறைமுகப் போட்டியை வெல்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். மேலதிகாரியிடம் இருந்த மனக் கசப்பு நீங்கும். சம்பளப் பிரச்னை தீர்வுக்கு வரும். கலைத்துறையினரது திறமை வெளிப்படும். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும் வேளை இது.

பொதுநலனுடன் செயல்படுபவர் நீங்கள். உங்கள் பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன் ஆட்சிபெற்று நிற்பதால் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணப்புழக்கம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சுபச் செலவு வரக்கூடும். மகளுக்கு எதிர்பார்த்த வரன் அமையும். ராசிக்குள் கேது நிற்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 7-ல் நிற்கும் ராகுவால் மனைவியுடன் சண்டை- சச்சரவு வரும். உடன்பிறந்தோர் ஒத்துழைப்பர். 4-ல் சனி நிற்பதால் தாய்வழி உறவில் கருத்து வேறுபாடு ஏற்படும். மதிப்பு உயரும். வீடு- வாகன பராமரிப்புச் செலவு ஏற்படும். கன்னிப்பெண்கள் பெற்றோர் சொல்படி நடக்கவும். அரசு காரியத்தில் வெற்றி உண்டு. புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள். மே 2-ஆம் தேதி முதல் குரு 10-ல் நுழைவதால் வேலைச்சுமை, வீண்பழி வரக்கூடும். எவரையும் விமர்சிக்காதீர்கள். மே 4-ஆம் தேதி மாலை 4 மணி முதல் 6-ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் திடீர் செலவு, பயணம் வரக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரிப்பர். பாக்கியை நயமாகப் பேசி வசூலியுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். பணிகளை முழுமையாக முடிப்பீர்கள். கலைஞர்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. தன்னடக் கத்தால் தலை நிமிரும் காலம் இது.

க்குவமானவர் நீங்கள். 8-ல் மறைந்து நிற்கும் குரு மே 2-ஆம் தேதி முதல் 9-ஆம் வீட்டுக்குள் அடியெடுத்து வைப்பதால், பணவரவு திருப்தி தரும். வாங்கிய கடனை அடைப்பீர்கள். தந்தையின் உடல்நலம் சீராகும். அரசு காரியம் வெற்றி தரும். பிள்ளைகளின் திறமையை வெளிக் கொண்டு வருவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடியும். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டு. சனி வலுவாக இருப்பதால் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடனான இருந்த மோதல்போக்கு மறையும். கன்னிப்பெண்கள் அவசர முடிவைத் தவிர்க்கவும். 6-ல் ராகு சாதகமாக இருப்பதால் அரசு அதிகாரிகள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் பரபரப்புடன் இருப்பர். சிலர் உங்கள் மீது பழி சுமத்த நேரும். கவனம் தேவை. சூரியன் வலுவாக இருப்பதால் பாதியில் நின்ற பணியை முடிப்பீர்கள். மே 7-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி மதியம் 3 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் வீண் வாக்குவாதம் வேண்டாமே. சுக்கிரன் லாப வீட்டில் நிற்பதால் வரவேண்டிய பணம் வந்துசேரும். வியாபாரத்தில் போட்டி இருக்கும். புது யுக்திகளால் லாபம் உண்டு. வேலையாட்களை விட்டுப்பிடியுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கலைஞர்களின் திறமை வெளிப்படும். சாதித்துக் காட்டும் வேளை இது.

ழைப்பால் முன்னேறுபவர் நீங்கள். புதன் சாதகமான வீடுகளில் பயணிப்பதால் புதிய நண்பர்கள் அறிமுகமாவர். பணவரவு உண்டு. தம்பதிக்குள் ஒற்றுமை குறையாது. பாதச்சனி தொடர்வதால் டென்ஷன் வரக்கூடும். வீண் செலவு உண்டு. உடன்பிறந்தோர் ஆதரிப்பர். பிள்ளைகளால் மரியாதை கூடும். 9-ஆம் வீட்டில் சூரியன் நிற்பதால் தந்தையுடன் கருத்து மோதல், உடல்நலக்குறைகள் வந்துபோகும். கன்னிப்பெண்களுக்கு கனவுத்தொல்லை, தலைவலி வந்து விலகும். மே 2-ஆம் தேதி முதல், குரு 8-ல் சென்று மறைவதால் வீண்பழி, அவச்சொல்லுக்கு ஆளாவீர்கள். அரசு காரியம் அனுகூலம் தரும். குலதெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். 11-ல் கேது வலுவாக நிற்பதால் மன தைரியம் பிறக்கும். மே 9-ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 11-ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் அவசர முடிவை தவிர்க்கவும். 12-ல் செவ்வாய் தொடர்வதால் வீடு-வாகன பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கியை கனிவாகப் பேசி வசூலியுங்கள். வேலையாட்களால் மனஸ்தாபம் வந்துபோகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரியின் ஆதரவு உண்டு. சக ஊழியர்களை அனுசரியுங்கள். கலைத் துறையினர் பரபரப்பாக காணப்படுவர். பலன் கிடைக்க தாமதமாகும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் சிரித்து மகிழும் நேரம் இது.

லகலப்பானவர் நீங்கள். தன பாக்கியாதிபதி சுக்கிரன் 9-ல் ஆட்சிப்பெற்று அமர்ந்திருப்பதால் பண வரவு, செல்வாக்கு, திடீர் யோகம் உண்டாகும். தடைப்பட்ட காரியத்தை முடிப்பீர்கள். வீடு மாறுவீர்கள். ஜென்மச்சனி தொடர்வதால் டென்ஷன் இருக்கும். தம்பதிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பர். 4-ல் ராகு நிற்பதால் தாயாரின் உடல்நலம் பாதிக்கும். குருபகவான் மே 2-ஆம் தேதி முதல் 7-ல் நுழைவதால் புதிய முயற்சிகள் நிறைவேறும். மனைவி வழியில் அனுகூலம் உண்டு. கன்னிப்பெண்களின் எண்ணம் பூர்த்தியாகும். 8-ல் சூரியன் நிற்பதால் திடீர் பயணம் உண்டு. அரசு விஷயத்தில் அலட்சியம் வேண்டாமே. அரசியல்வாதிகள் அதிரடிச் செயலில் ஈடுபடுவீர்கள். செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் பூர்வீகச் சொத்துச் சிக்கலைத் தீர்க்க வழி கிடைக்கும்.

ரிமைக்கு குரல் கொடுப்பவர் நீங்கள். ராசிநாதன் சுக்கிரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வசதியான வீட்டில் குடியேறுவீர்கள். ஆடை- அணிகலன்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். பால்ய நண்பர்கள் உதவுவர். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். அவர்களின் திருமண ஏற்பாடுகள் இனிதே முடியும். வயிற்று வலி, இடுப்பு வலி நீங்கும்.

ராசிக்கு 3-ஆம் வீட்டில் ராகு சாதகமாக அமைந்திருப்பதால், தைரியம் பிறக்கும். புது முயற்சி வெற்றி தரும். சகோதர வகையில் உதவி உண்டு. கன்னிப் பெண்களது மன உளைச்சல் நீங்கும். தாயின் அரவணைப்பு அதிகரிக்கும். சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால் தெளிவான முடிவு எடுப்பீர்கள். கடனை அடைப்பீர்கள்.

மறைந்திருக்கும் புதன் மே 8-ஆம் தேதி முதல் 7-ல் அமர்வதால் கோபம், ஏமாற்றம் நீங்கும். அரசியல்வாதிகள் தலைமையின் அன்புக்கு பாத்திரமாவர். 10-ல் செவ்வாய் வலுவாக இருப்பதால் சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிட்டும். வியாபாரப் போட்டியை வெல்வீர்கள். வேலையாட்கள் ஆதரிப்பர்.

உத்தியோகத்தில் திறமை வெளிப்படும். பணிகளை முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு வாய்ப்பு தேடி வரும். சம்பள பாக்கி வந்து சேரும். விட்டுப்போன தொடர்புகள் துளிர்க்கும் நேரம் இது.

னசாட்சிப்படி நடப்பவர் நீங்கள். குரு பகவான் மே 2-ஆம் தேதி முதல் ராசிக்கு 5-ஆம் வீட்டுக்குள் நுழைவதால் பணவரவு உண்டு. குழந்தை இல்லாத தம்பதிக்கு வாரிசு உருவாகும். மகனுக்கு சிறப்பாக திருமணம் முடியும். 2-ல் ராகு நிற்பதால் பேச்சில் நிதானம் தேவை. தலைச்சுற்றல், வாயுக்கோளாறு வந்து நீங்கும். சகோதர வகையில் உதவி கிடைக்கும். ராசிக்கு 6-ஆம் வீட்டில் சூரியன் வலுவாக இருப்பதால் பூர்வீகச் சொத்தை மாற்றி அமைப்பீர்கள். சேமிக்கத் தொடங்குவீர்கள். கன்னிப்பெண்களின் குழப்பங்கள் நீங்கும். கல்யாணம் கூடி வரும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைகள் உடைபடும். அரசு காரியத்தில் அனுகூலம் உண்டு. குலதெய்வக் கோயிலுக்குச் செல்வீர்கள். 7-ல் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் மனைவி வழியில் அனுகூலம் உண்டு. 8-ல் கேது நிற்பதால் வாகனத்தை கவனமாக இயக்குங்கள்.

வீண் கோபம் தவிர்க்கவும். 11-ல் சனி நிற்பதால் வேற்று இனத்தவர் உதவுவர். அரசியல்வாதிகள் பரபரப்புடன் இருப்பர். சகாக்கள் ஒத்துழைப்பர். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்வீர்கள். வேலையாட்கள் ஆதரிப்பர். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். உத்தியோகத்தில் மதிப்பு கூடும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைஞர்களின் சம்பள பாக்கி வந்து சேரும். புத்துணர்ச்சி ததும்பும் நேரம் இது.

தவிக்கு ஆசைப்படாதவர் நீங்கள். உங்கள் ராசிநாதன் குருபகவான் மே 2-ஆம் தேதி முதல் 4-ஆம் வீட்டில் ஆட்சிப்பெற்று அமர்வதால் தைரியம் பிறக்கும். தடைப்பட்ட காரியத்தை முடிப்பீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவர். பணவரவு சீராக இருக்கும். ராகு- கேது சரியில்லாததால் விரக்தி, மனக்குழப்பம் வந்துபோகும். பிள்ளைகளின் நலனுக்காக யோசிப்பீர்கள்.

சகோதர வகையில் விட்டுக்கொடுங்கள். பயணம் அலைச்சல் தரும். ராசிக்கு 6-ஆம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் மனைவியுடன் கருத்து வேறுபாடு, வாகன விபத்துகள் வரக்கூடும். கன்னிப்பெண்கள் பெற்றோர் சொல்படி நடப்பது நல்லது. 8-ல் செவ்வாய் நிற்பதால் அரசு காரியத்தில் கவனம் தேவை. எவருக்கும் ஜாமீன் போடாதீர்கள். குலதெய்வப் பிரார்த்தனை நிறைவேறும். அரசியல்வாதிகள் எவரையும் விமர்சிக்காதீர்கள்.

சனி வலுவாக இருப்பதால் புதிய வேலை கிடைக்கும். வீடு மாறுவீர்கள். வியாபாரத்தில் போதிய லாபம் உண்டு. பாக்கியை வசூலிப்பதில் தாமதமாகும். வேலையாட்களிடம் ரகசியங்களை வெளியிடா தீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடியுங்கள். மேலதிகாரியைக் குறை சொல்லாதீர்கள். கலைஞர்களின் எண்ணம் பூர்த்தியாகும். கஷ்டங்களில் இருந்து கரையேறும் நேரம் இது.

பிறருக்கு உதவுபவர் நீங்கள். உங்களின் பூர்வபுண்யாதிபதியும் ஜீவனாதிபதியுமான சுக்கிரன், 5-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் திடீர் யோகம் வரும். குழந்தை இல்லாத தம்பதிக்கு வாரிசு உருவாகும். ஆடை- ஆபரணம் சேரும். தம்பதிக்குள் தாம்பத்தியம் இனிக்கும். பிள்ளைகளின் எண்ணத்தை பூர்த்தி செய்வீர்கள். 6-ல் கேது வலுவாக நிற்பதால் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். 7-ல் செவ்வாய் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் உஷ்ணத்தால் வயிற்று வலி, கட்டி வரக்கூடும். சகோதர வகையில் கொஞ்சம் மன வருத்தம் வரும். பயணம் ஆதாயம் தரும். மே 2-ஆம் தேதி முதல் குரு 3-ல் மறைவதால் கௌரவ பதவி தேடி வரும். தடைப்பட்ட வேலையை முடிப்பீர்கள். கன்னிப் பெண்களுக்கு கல்யாணப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் தரும்.

பாக்கியாதிபதி புதன் மே 8-ஆம் தேதி முதல் 4-ல் கேந்திர பலம் பெறுவதால் மதிப்பு கூடும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

வீடு- மனை வாங்குவீர்கள். 12-ல் ராகு நிற்பதால் ஓய்வின்றி உழைப்பீர்கள். வியாபாரத்தில் தடைப்பட்ட ஒப்பந்தம் கிடைக்கும். பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். சக ஊழியர்கள் ஆதரிப்பர். கலைத் துறையினரது எண்ணம் பூர்த்தியாகும். தடைகளை தகர்க்கும் நேரம் இது.

பிரச்னைகளை கண்டு பின்வாங்காதவர் நீங்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால் மன வலிமை கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். பிரியமானவர்களைச் சந்திப்பீர்கள். சூரியன் வலுவாக அமைந்திருப்பதால் அரசு விஷயங்களில் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

கன்னிப் பெண்களின் எண்ணங்கள் பூர்த்தி ஆகும். சுக, பாக்கியாதிபதியான சுக்கிரன் 4-ஆம் வீட்டில் ஆட்சிப் பெற்றிருப்பதால் திடீர் யோகம், பண வரவு உண்டு. தாய்வழி உறவினர்கள் உதவி கேட்பார்கள். புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள். அஷ்டமத்துச்சனி நடப்பதால், எவருக்கும் ஜாமீன் போடாதீர்கள். வீண் விமர்சனமும் வேண்டாம். குரு பகவான் மே 2-ஆம் தேதி முதல் ராசியை விட்டு விலகி 2-ஆம் வீட்டுக்குள் நுழைவதால் பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர். அரசியல்வாதிகள் பரபரப்புடன் இருப்பர்.

11-ல் ராகு வலுவாக இருப்பதால் வேற்று மொழியினரால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரப் போட்டியை வெல்வீர்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். பங்குதாரர்கள் அனுசரித்துப் போவார்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும் கலை ஞர்களின் சம்பளபாக்கி வந்து சேரும். திறமைகள் வெளிப்படும் வேளை இது.

டுநிலையானவர் நீங்கள். உங்கள் சேவகாதிபதி சுக்கிரன் ஆட்சிபெற்று நிற்பதால் புத்துணர்ச்சி பிறக்கும். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வற்றிய பணப்பை நிரம்பும்.

2-ல் சூரியன் நிற்பதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். உறவினர்களின் சொந்த விஷயத்தில் தலையிடாதீர்கள். ராசிக்கு 5-ஆம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் வீண் குழப்பம் மற்றும் தூக்கமின்மை ஏற்படலாம். பயணம் அலைச்சல் தரும். சகோதரர்களிடையே மனக்கசப்பு வரக்கூடும். கன்னிப் பெண்கள், பெற்றோரின் ஆலோசனைப்படி நடக்கவும்.

ராசிக்கு 7-ஆம் வீட்டில் சனி இருப்பதால் தம்பதிக்குள் வீண் சந்தேகம், வாக்குவாதம் வரக்கூடும். சொத்துப் பிரச்னையில் நிதானம் தேவை.

ராசிநாதன் குரு மே 2-ஆம் தேதி முதல் ராசிக்குள் நுழைவதால் உடல் சோர்வு, தடுமாற்றம், முன்கோபம் வரக்கூடும். குல தெய்வக் கோயிலுக்குச் செல்வீர்கள்.

வியாபாரத்தில் பற்று- வரவு உயரும். பணியாட்கள் பொறுப்புடன் நடப்பர். வாடிக்கை யாளர்களுக்கு புதிய சலுகைகளைத் தருவீர்கள். பங்குதாரர்கள் உதவுவர். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். கலைத் துறையினர் உற்சாகத்துடன் இருப்பர். தட்டுத் தடுமாறி கரையேறும் வேளை இது
பிரச்னைகளை கண்டு பின்வாங்காதவர் நீங்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால் மன வலிமை கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். பிரியமானவர்களைச் சந்திப்பீர்கள். சூரியன் வலுவாக அமைந்திருப்பதால் அரசு விஷயங்களில் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

கன்னிப் பெண்களின் எண்ணங்கள் பூர்த்தி ஆகும். சுக, பாக்கியாதிபதியான சுக்கிரன் 4-ஆம் வீட்டில் ஆட்சிப் பெற்றிருப்பதால் திடீர் யோகம், பண வரவு உண்டு. தாய்வழி உறவினர்கள் உதவி கேட்பார்கள். புண்ணிய ஸ்தலம் செல்வீர்கள். அஷ்டமத்துச்சனி நடப்பதால், எவருக்கும் ஜாமீன் போடாதீர்கள். வீண் விமர்சனமும் வேண்டாம். குரு பகவான் மே 2-ஆம் தேதி முதல் ராசியை விட்டு விலகி 2-ஆம் வீட்டுக்குள் நுழைவதால் பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர். அரசியல்வாதிகள் பரபரப்புடன் இருப்பர்.

11-ல் ராகு வலுவாக இருப்பதால் வேற்று மொழியினரால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரப் போட்டியை வெல்வீர்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். பங்குதாரர்கள் அனுசரித்துப் போவார்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும் கலை ஞர்களின் சம்பளபாக்கி வந்து சேரும். திறமைகள் வெளிப்படும் வேளை இது.

நன்றி விகடன்


0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil