ஹார்ட் அட்டாக் என்றால் என்ன?

22 April 2010 ·


ஹார்ட் அட்டாக் என்றால் என்ன?

லகின் எந்த நாட்டுக் குடிமகனும் தப்ப முடியாத அட்டாக்... ஹார்ட் அட்டாக். இதயம் உள்ள அனைவருக்கும் இந்த வாழ்நாள் அபாயம் நிச்சயம்.

'ஹார்ட் அட்டாக் என்றால் என்ன?' இதயத்துக்குள் அமைந்து இதயத்துக்கே ரத்த சப்ளை செய்பவை கரோனரி ஆர்ட்டரிகள். கொழுப்புச் சத்து அதிகம் உட்கொள்ளும்போது மிதமிஞ்சிய கொழுப்பு கரோனரி ஆர்ட்டரியின் சுவர்களில் படிய ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் திரளாகச் சேர்ந்த கொழுப்பு, ரத்தம் பயணிக்கும் குழாய்களை அடைத்துக்கொண்டு ரத்த ஓட்டத்தைத் தடை செய்யும். அந்த இடத்தில் ரத்தம் தேங்கி உறையத் துவங்கும். இதயத்துக்குப் போதுமான ரத்த சப்ளை கிடைக்காது. இதனால் போதுமான ஆக்சிஜன் இல்லாமல் இதயம் இயங்கத் தடுமாறும். ஆயுள் முழுக்க இயங்குவதற்கென வடிவமைக்கப்பட்ட இதயம், இயங்கத் தடுமாறி தள்ளாடித் திணறும் அந்தச் சமயம்தான் 'ஹார்ட் அட்டாக்'. இதயம் தாக்குதலுக்கு உள்ளாகிறது. உடலின் இடது பக்கம் கடுமையான வலி, இடது கைப்பக்கம் வலி பரவுதல், மூச்சுத் திணறல், தலை சுற்றல், வியர்வை கொட்டுவது ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள்.

'தினசரி நடவடிக்கைகள் மூலம் ஹார்ட் அட்டாக்கை எப்படித் தவிர்ப்பது?' என்று குறிப்புகள் கொடுக்கிறார் வேலூர் சி.எம்.சி. இதய நோய் பேராசிரியர் மருத்துவர் ஜேக்கப் ஜோஸ். ''வயதானவர்களை மட்டுமே தாக்கிய காலம் மலையேறி, இப்போது இளைஞர்களையும் பாதிக்கிறது ஹார்ட் அட்டாக். பெரும்பாலான இந்தியர்கள் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்படுவதற்கு புகை பிடிக்கும் பழக்கமும் முக்கியக் காரணம்.

அளவுக்கு அதிக மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது, ஃபாஸ்ட் புட், ஜங்க் ஃபுட் போன்றவை இளம் வயதிலேயே மாரடைப்பு நோய்க்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும். உடல் உழைப்பு குறைவதாலும், உடலில் கொழுப்பு அதிகரிக்கும். புகைப்பதை அறவே நிறுத்திவிடுங்கள். தினமும் வாக்கிங் செல்ல வேண்டும். அதிகபட்சம் 20 முதல் 30 நிமிடங்கள் நடைப் பயிற்சி செய்தாலே போதும். ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் ஜங்க் ஃபுட்களை முழுமையாகத் தவிர்த்துவிடுங்கள். இடுப்பு அளவு 36-க்கு மேல் இருந்தால் உடனடியாகக் கொழுப்பு அளவைப் பரிசோதனை செய்யுங்கள். வீட்டில் வேறு யாருக்காவது ஹார்ட் அட்டாக் வந்திருந்தால், நீங்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால் ஆகிய பரிசோதனைகளைச் செய்துகொள்ளுங்கள். தனிமை, அதிக டென்ஷன் ஆகியவை ஹார்ட் அட்டாக்கை வரவழைக்கும். வயதானவர்கள் அதிக டென்ஷன் ஏற்படுத்தக்கூடிய ஃபுட்பால், கிரிக்கெட் மாதிரியான விளையாட்டுகளைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம்

உங்கள் வீட்டில் உள்ளவர் களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால், கால தாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். எவ்வளவு சீக்கிரம் அடைப்பை நீக்குகிறோமோ, அந்த அளவுக்கு இதயத்துக்கு நல்லது!'

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites