மீடியா அட்டாக்!

22 April 2010 ·


மீடியா அட்டாக்!

லகில் எங்கு எந்தத் தாக்குதல் நடந்தாலும் அது மக்களுக்குச் செய்தி மட்டுமே. அதைச் சேகரிக்கும் ஊடகக்காரர்களுக்கு? இன்று உலகம் முழுவதும் ஊடக ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கின்றன

பத்திரிகை, தொலைக்காட்சி என்பதைத் தாண்டி இன்று ஃப்ரீலான்ஸர் எனப்படும் சுதந்திரப் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்த வகை நிருபர்களில் 45 சதவிகிதம் பேரை உலகம் முழுக்கச் சிறைகளில் அடைத்து வைத்திருக்கின்றன அரசுகள். இதை ஆதாரத்துடன் சொல்கிறது 'Committee to Protect Journalists' எனும் அமைப்பின் தகவல் அறிக்கை. இவர்கள் நிறுவனம் சாராதவர்கள் என்பதால் 'பத்திரிகையாளர்' என்ற பட்டியலிலேயே கொண்டுவராமல் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 136 நிருபர்கள், பல பத்திரிகை ஆசிரியர்கள், புகைப்படக் கலைஞர்கள் ஆகியோர் பல்வேறு

நாட்டுச் சிறைகளில் கைது செய்யப்பட்டு, சிறைகளில் இருக்கிறார்கள். இரானில் மட்டும் 23 பத்திரிகையாளர்கள் சிறையில் இருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் உயிரோடுதான் வைக்கப்பட்டு இருக்கிறார்களா என்ற அடிப்படைத் தகவலைக்கூட பல அரசுகள் சொல்வது இல்லை. இலங்கையில் நடந்த படுகொலைகள்பற்றி எழுதியதற்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட திசநாயகம் முதல், இரானில் அரசுக்கு எதிராக எழுதியதாகக் கைது செய்யப்பட்ட ஃபரீபா பஜூ வரை பத்திரிகையாளர்கள் அரசியல் மற்றும் விசாரணைக் கைதிகளாக முடக்கப்பட்டு உள்ளனர்.

1992 முதல் இன்றைய தேதி வரை உலகம் முழுவதும் 802 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் (இந்தியாவில் 31 பேர்). யுத்தங்களில் இறந்துபோனவர்கள், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்கள், வேறு நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையை 'ஆள் கடத்தல்' அல்லது 'காணாமல் போனவர்கள்' என்ற தலைப்புகளின் கீழ் வைத்திருக்கின்றன பல நாட்டுச் சட்டங்கள். ஊருக்கெல்லாம் செய்தி சொன்னாலும் தனக்கு ஒரு பிரச்னை என்றால், பத்திரிகையாளனின் நிலைமையும் இதுதான். மனித உரிமையை அடகு வைத்துத்தான் மனித உரிமையைப்பற்றி பேச வேண்டியிருக்கிறது

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil