சின்னஞ் சிறிய எமன்!

22 April 2010 ·

சின்னஞ் சிறிய எமன்!

குளிர் காலம், கோடைக் காலம் என்று பாரபட்சம் இல்லாமல் மனிதர்களை அட்டாக் செய்யும் பெருமை கொசுக்களுக்கு உண்டு. உலகம் முழுவதும் 3,500 கொசு இனங்கள் மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன. மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல முக்கிய வியாதிகளைப் பரப்பி, மனிதர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அட்டாக் செய்பவை கொசுக்கள். கொஞ்சம் கொசு பிட்ஸ்...

கொசுக்களில் 3,500 இனத்துக்கு மேல் இருந்தாலும் நான்கு மட்டுமே நோய் பரப்புபவை.

ஆண் கொசுக்கள் இலைகளில் உள்ள திரவத்தையும், பெண் கொசுக்கள் விலங்குகளின் ரத்தத்தையும் குடிப்பவை. பொதுவாக, கொசுக்களின் உணவு செடியில் கிடைக்கும் திரவம்தான். முட்டைகளை இடும்போது மட்டும் புரோட்டீன் தேவைக்காக ரத்தம் தேடி வரும் பெண் கொசுக்கள்.

துருவப் பகுதிகள் தவிர, உலகின் எல்லாப் பகுதிகளிலும் கொசுக்கள் உண்டு. எனினும் வெப்ப மண்டலப் பகுதிகளில்தான் கொசுக்கள் அதிகம் வாழ்கின்றன.

இப்போதைய கொசு இனம் கிட்டத்தட்ட எட்டு கோடி வருடங்களுக்கு முன்னால் தோன்றியது. உலகின் முதல் கொசு இனம் 15 கோடி வருடங்களுக்கு முன் தோன்றியது.

கொசுக்களின் எதிரிகள் யார் தெரியுமா? நம் கிராமத்துச் சிறுவர்கள் நூலில் கட்டி விளையாடுவார்களே அந்தத் தும்பிகள்தான். கொசு முட்டையில் இருந்து பெரிய கொசு வரை எல்லாவற்றையும் பிடித்துத் தின்று ஏப்பம் விட்டுப் போய்க் கொண்டே இருக்கும் தும்பிகள்.

ஆண்களைவிடப் பெண்களைத்தான் கொசுக்கள் அதிகம் கடிக்கின்றன.

பௌர்ணமி சமயத்தில் கொசுக்கள் ரொம்ப சுறுசுறுப்பாக இருக்குமாம்.

அடர் வண்ண ஆடைகள் அணிந்தால் நிச்சயம் கொசுக்கடி உண்டு!

ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் கொசுக்களால் இறந்து போகிறவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்துக்கும் அதிகம்!

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites