போன ஜென்மத்தில் நீங்கள் யார்?

18 April 2010 ·போன ஜென்மத்தில் நீங்கள் யார்?

''முன்ஜென்மம் உண்மையா?''

மனநல மருத்துவர் செந்தில்வேலனிடம்

கேட்டேன்.

''முன் ஜென்மம்அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒன்று. நம்முடைய

மூளையில் டெம்போரல் லோப் (Temporal loab) என்கிற ஒரு பகுதி உள்ளது.

\ அதில்தான் இம்மாதிரி இறை நம்பிக்கை, முன்ஜென்மம்

போன்ற நம்பிக்கை கள் உற்பத்தியாகின்றன. அதில் மாற்றம்

ஏற்படாதவரை எந்தப் பிரச்னையும் இல்லை.

அதில் ஏற்படும் மாற்றங்களால் சிலர் ஆடுவார்கள், வாய்க்கு வருவதைச்

சொல்வார்கள். இதற்கு dissociative disorder என்று பெயர். இதைத்தான்

சாமி ஆடுவது


என்கிறார்கள். அந்த நேரத்தில் பாதிக் கப் பட்டவர்களின் சுயநினைவு

குறைந்து தங்களை முற்றிலும் வேறொரு

ஆளாக நினைத்துக்கொள் வார்கள்.

அந்த நேரத்தில் அவர்க ளின் ஆழ்மனத்தில் உள்ள ஏக்கங்கள்,

நிறைவேறாத

ஆசைகள், கோபம், பொறாமை, வன்மம் போன்றவை தேவைக்கு ஏற்ப,

இடத்துக்கு ஏற்ப வெளிவரும். திருவிழா சமயங்களில் பல பெண்கள்

உடல் முறுக்கேறி, தங்களைக் கடவுளாகப் பாவித்துக்கொண்டு

அதிகாரமாகப் பேசுவதற்கு இதுதான் காரணம். இதை இவர்கள்

வேண்டுமென்று செய்வதில்லை. இன்னும் சிலர் தாங்கள் கேள்விப்பட்ட

தகவலைவைத்து தங்களை வேறு ஒருவராக

உருவ கப்படுத்திக்கொள்வார்கள்.

'அந்த ஊரில் பிறந்தேன், இந்த ஊரில் வளர்ந்தேன்' என்றெல்லாம் உளறிக்கொட்டுவார்கள். 'போன ஜென்மத்தில் நீங்கள் யார்?' என்ற

கேள்விக்குக்கூட 'அடால்ஃப் ஹிட்லர்', 'ராஜராஜ சோழன்' என்று பதில்

சொல்வார்கள் மூளையில் மாற்றம் நிகழும்போது ஆழ் மனதில் உள்ள

விஷயங்கள், நபர்கள், இடங்கள் வெளியேவந்து விடும். அவர்களும்

தன்னைப் பெரிய மனிதனாக, வேறொருவனாக

உருவகப்படுத்திக்கொள்வார்கள்

'முன் ஜென்ம ஞாபகம் வந்தவர்கள் இங்கிலீஷ், தெலுங்கு,

அரபி என அதுவரை பேசாத மொழிகளைப் பேசினார்கள்'

என்று சிலர் சொல்வார்கள். உண்மையில்

பாதிக்கப்பட்டவர்கள் எங்கேயோ கேட்டிருந்த, நினைவில்

இருக்கும் நான்கைந்து வேற்றுமொழி வார்த்தைகளை

மட்டுமே பேசுவார்கள். அவர்களால் சரளமாக, உரையாடல்

செய்யும் அளவுக்குப் பேச முடியாது. நமக்கு வேறு மொழி

தெரியாததால் அவர்கள் உளறுகிற புரியாத வார்த்தைகளை

வேற்று மொழி என்று நினைத்துக் கொள்கிறோம். யாராவது

தனக்கு முன் ஜென்ம ஞாபகம் வருகிறது என்று சொன்னால்,

உடனடியாக அவர்களை மனநல மருத்துவரிடம் அழைத்து

வாருங்கள். அதுதான் மருத்துவரீதியாகச் சரியான வழிமுறை!''


0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil