தமிழில் நடித்துப் பிரபலமானாலும் தற்போது தனது தாய்மொழியான கன்னடத்திலேயே செட்டிலாகி விட்டவர் திவ்யா. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஆதரவாக பெங்களூரில் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளுக்கும் தவறாமல் வந்து உற்சாகப்படுத்தினார். ஆனால் இப்போது பெரும் சோகமாக இருக்கிறார் திவ்யா.
காரணம், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் அரை இறுதிப் போட்டியில் பெங்களூர் தோல்வியைத் தழுவியதுதான். இந்தப் போட்டிக்காக மும்பைவரைக்கும் போய் மைதானத்தில் உற்சாகத்துடன் போட்டியைப் பார்த்திருக்கிறார் திவ்யா.
இதுகுறித்து அவர் கூறுகையில், “டிராவிட், உத்தப்பா இருக்கிறவரைக்கும் ஜெயித்து விடலாம் என்றிருந்தேன். அவர்கள் அவுட் ஆனதும் நம்பிக்கை போய் விட்டது. இப்போது மிகவும் சோகமாக இருக்கிறேன். நான் நடித்த படம் ஓடாத போதுகூட நான் இப்படி இருந்ததில்லை” என்று ரொம்பவே கவலைப்படுகிறார் திவ்யா.
திவ்யாவைப் போலவே தீவிர பெங்களூர் ரசிகையாக இருந்து வந்தவர் பாலிவுட் நடிகையும், பெங்களூர் மண்ணின் மகளுமான தீபிகா படுகோனே. இவரும் பெங்களூர் போட்டிகள் அனைத்துக்கும் தவறாமல் அட்டென்டன்ஸ் கொடுத்து வந்தார். பெங்களூரில் தோல்வியில் இந்த இந்திய அழகியும் படு அப்செட்டாம்..!
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் தோல்வி.. சோகத்தில் நடிகைகள்..!
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் தோல்வி.. சோகத்தில் நடிகைகள்..!
ஐ.பி.எல். போட்டிகளின் அரை இறுதியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, மும்பையிடம் தோல்வியைத் தழுவியதால் இன்னும் சோகத்தில் இருக்கிறாராம் முன்னாள் குத்து ரம்யாவான இன்னாள் திவ்யா.
Subscribe to:
Post Comments (Atom)
!-end>!-local>
Labels
- Books (9)
- Camera (4)
- car (4)
- Cinema (44)
- Computer (20)
- Ilayaraya Hits (1)
- India (2)
- Janahi Hits (1)
- Mcse (1)
- Mobile (3)
- Motorcycle (1)
- Mp3s (10)
- music (1)
- News (30)
- Nithiyanantha (5)
- Spb Hits (1)
- Tamil (4)
0 comments:
Post a Comment