குட்டி குட்டி செய்தி படிச்சு பாருங்க பிடிக்கும்

27 April 2010 ·

புலிகளை வெல்ல இந்தியாவின் ஒத்துழைப்பே காரணம் : கோத்தபய - செய்தித் தொகுப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு எதிராக இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை நடத்திய நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தால் மேற்கு வங்கம், கேரளம், ஒரிசா, உத்தரப் பிரதேசம், அசாம், பீகார் போன்ற மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் சில இடங்களில் மட்டுமே பாதிப்பு இருந்தது. கேரளாவுக்கு செல்லும் பேருந்துகள் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன.

*

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக மக்களவையில் செவ்வாய்க்கிழமை பாஜக எம்பிக்கள் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளனர். தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கும் முடிவை நிராகரிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்துக்கு வெளியே அறிவித்தது குறித்து இந்த உரிமை மீறல் நோட்டீஸை அவர்கள் அளித்தனர்.

*

விலைவாசி உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, நிதி மசோதா மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் வெட்டுத் தீர்மானத்தின்போது மத்திய அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் மாயாவதி அறிவித்துள்ளதால், மத்திய அரசுக்கான நெருக்கடி முற்றிலும் நீங்கியது.

*

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் செயலராகப் பணியாற்றிவந்த மாதுரி குப்தா என்ற பெண் அதிகாரி பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புக்கு உளவு பார்த்ததாக டெல்லி தனிப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

*

விடுதலைப்புலிகளை வெல்வதற்கு இந்திய ஒத்துழைப்பே காரணம் என்றும், இந்தியா அளித்த உதவியும் தகவல் பரிமாற்றங்களும் தான் விடுதலைப்புலிகளை வீழ்த்துவதற்கு முக்கியக் காரணம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சகோதரரும், பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபய ராஜபக்ஷே கூறியுள்ளார்.

*

மாநிலங்களவையில் ஐ.பி.எல். விவகாரம் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

*

சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலனுக்கான கொள்கை விளக்க குறிப்புகள், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2010-11 ஆம் நிதியாண்டில் சுமார் 12 ஆயிரத்து 500 சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில் ரூ.25 கோடியை, தொழில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடனாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

*

விலைவாசி உயர்வுக்கு எதிரான வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ததற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இதனிடையே, விலைவாசிக்கு எதிரான பொது வேலைநிறுத்தம் வெற்றி பெற்றதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.

*

நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, விருதுநகரில் 70 கோடி ரூபாயில் கைத்தறி வளர்ச்சி குழுமம் அமைத்து செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்தின் அறிவித்துள்ளார்.

*

மின்வெட்டை கண்டித்து சென்னையில் வியாழக்கிழமை அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

*

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 1,566 ரூபாயாக இருந்தது.

*

மும்பை பங்குச்சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 54 புள்ளிகள் வீழ்ச்சி கண்டிருந்தது. நிஃப்டி 14 புள்ளிகள் சரிந்திருந்தது.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil