தமிழ் சினிமாவின் முதல் முத்தக் காட்சி

21 April 2010 ·

old is gold cinema kollywood news, old is gold kollywood special story, kollywood cinema of old is gold, tamil old is gold movies, kollywood old is gold music, Indian music, tamil Music, tamil Songs, Indian songs
போலிச் சாமியார்கள் பற்றி இப்போது அதிகம் படிக்கிறோம். இதை 1936ல் சொன்ன படம், 'சந்திரகாந்தா'. ஜூபிடர் பிலிம்ஸ் இதை தயாரித்திருந்தது. ராஜா சாண்டோ இயக்கினார். காமெடியன் காளி என். ரத்னம் இதில் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்துக்கு தடை கோரி பலர் கோர்ட்டுக்கும் சென்றனர். அதையெல்லாம் மீறி படம் சூப்பர் ஹிட்டானது. கோயில்களில் பூஜை முடிந்தபின் பக்தி பாடல்களை பாடக்கூடியவர் எம்.எம். தண்டபாணி தேசிகர். அவரது பாடல்களை கேட்கவே பெரும் கூட்டம் கூடிவிடும். பலர் கோயிலுக்கு வருவதே இவரது பாடல்களை கேட்கத்தான். நம் சினிமாக்காரர்கள் அவரையும் விடவில்லை. 'பட்டினத்தார்' (1935) என்ற பக்திப் படத்தில் நாயகனாக தண்டபாணி தேசிகர் அறிமுகமானார். இப்படம் சென்னை பிராட்வே தியேட்டரில் பல மாதங்கள் ஓடியது. அப்போது படத்துக்காக வைக்கப்பட்ட கட்அவுட் ஒன்று இப்போது அந்த தியேட்டரில் உள்ளது.

தமிழில் ஆண்கள் மட்டுமே டைரக்ஷன் துறையில் இருந்தபோது, முதல் பெண் டைரக்டராக அறிமுகமானார் நடிகை டி.பி. ராஜலட்சுமி. 1936ல் இவர் இயக்கத்தில் வெளியான படம் 'மிஸ் கமலா'. இதில் அவரே நடித்தும் இருந்தார். நாவலை தழுவி எடுக்கப்பட்ட படமும் இதே ஆண்டில் வெளியானது. அது 'ராஜா தேசிங்கு’. நாட்டியத்தில் பிரபலமாக இருந்த ருக்மணி தேவியின் பரதநாட்டியத்தை படமாக்கி, 'ராஜா தேசிங்கு'டன் சேர்த்தனர். 1937ல் உதயமானது மாடர்ன் தியேட்டர்ஸ். இது தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கிய கம்பெனி. சேலத்தில் தொழிலதிபராக இருந்தவரின் மகன் டி.ஆர். சுந்தரம், லண்டனுக்கு சென்று படித்தார். லண்டன் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு சேலத்துக்கு திரும்பியவர், சினிமா தயாரிக்கப்போவதாக அறிவித்தார். அதுதான் மாடர்ன் தியேட்டர்ஸ். Ôசதி அகல்யாÕ, முதல் படம். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம், சிங்களம்
உட்பட பல மொழிகளில் 130 படங்கள் வரை மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தது.

சேலம் சங்கர் பிலிம்ஸ் தயாரித்த படம் 'அம்பிகாபதி'. ராஜா மகளை புலவரின் மகன் காதலிப்பதே கதை. இதை 'ரோமியோ ஜூலியட்' ஸ்டைலில் படமாக்கினார் எல்லிஸ் ஆர்.டங்கன். இப்படம் கவித்துவமாக எடுக்கப்பட்டதால் பலத்த வரவேற்பு பெற்றது. தியாகராஜ பாகவதர், எம்.ஆர். சந்தானலட்சுமி நடித்தனர். பாகவதர் படமென்றாலே அதில் அவரது நாடக டீம் கண்டிப்பாக இடம்பெறும். இதில் சிறுகளத்தூர் சாமா, ரங்காச்சாரி தவிர கலைவாணர் என்.எஸ்.கே. முக்கியமானவர். பாகவதரின் பாடல்களுக்காகவே இப்படம் ஒரு வருடம் ஓடியது. அது மட்டுமல்ல, ஆங்கிலப் படங்களுக்கு இணையான முத்தக் காட்சியும் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது. தமிழ் சினிமாவில் கிளு கிளுப்பான முதல் முத்தக் காட்சி இதுதான். இயக்கியது டங்கன் என்பதால்தான் தைரியமாக அந்த காட்சியை படமாக்க முடிந்தது.

இந¢த படத்துக்கு பின் டிரெண்ட் மாறும் என சிலர் கூறினார்கள். ஆனாலும் புராண கதைகளுக்கு மவுசு குறையவில்லை. காளிதாசர் கதையை மீண்டும் 'கவிரத்ன காளிதாஸ்' என்ற பெயரில் படமாக்கினார்கள். இத்துடன்
டி.எம்.ராஜரத்தினம் பிள்ளையின் நாகஸ்வர கச்சேரியை படத்தில் இணைத்திருந்தார்கள். கோயில்களில் நாகஸ்வரம் வாசிப்பவர் ராஜரத்தினம் பிள்ளை. இவரது கச்சேரியை கேட்கவே பெரும் கூட்டம் கூடும். இரவு பத்து மணிக்கு ஆரம்பிக்கும் கச்சேரி, அதிகாலை வரையும் தொடரும். அதனால் இதை ஒரு சிறு படமாக்கி சேர்ந்திருந்தார்கள். இதை பார்க¢கவே தியேட்டர்கள் நிரம்பியதில் 'கவிரத்ன காளிதாஸ்' ஹிட்டானது.

'அம்பிகாபதி' முத்தக் காட்சியை மக்கள் ஆதரித்ததால், சிங்கள படங்களில் கவர்ச்சியாக நடிக்கும் தவமணி தேவியை தமிழுக்கு அழைத்து வந்தார் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம். அவர் தயாரித்த Ôசதி அனுசுயாÕ படத்தில் அவர் நடித்தார். ஆனால், அதில் கவர்ச்சி காட்சிகள் எதுவும் இடம்
பெறவில்லை. Ôஅம்பிகாபதிÕ ஒரு வருடம் ஓடியதால் பாகவதர், நம்பர் ஒன் நடிகராக முன்னேறிக் கொண்டிருந்தார். அப்போதுதான் Ôசிந்தாமணிÕ படத்துக்காக அவர் ஒப்பந்தமானார். ஒய்.வி.ராவ் இதை இயக்கினார். இதில் நடிக்க ஹீரோயின் கிடைக்கவில்லை. பலரை தேடியும் கேரக்டருக்கான முகம் இல்லாததால் ராவ் திருப்தி அடையவில்லை. கடைசியாக கன்னட நாடக நடிகை அசோதாமா தேர்வானார்.
Ôஹீரோ தன்னை தொடாமல் நடிக்க வேண்டும்Õ என அசோதாமா கண்டிஷன் போட்டார். அதற்கு சம்மதம் தெரிவித்த பின்பே அவர் நடித்தார். Ôபாகவதருக்கு புதுமுகம் ஜோடியா?Õ என அப்போது திரையுலகில் பரபரப்பானது. படம் ஓடாது என்றும் கணித்தனர். ஆனால் இதிலும் தனது பாடல்களால் படத்தை ஹிட்டாக்கினார் பாகவதர். இந்த படமும் ஒரு வருடம் ஓட, சூப்பர் ஸ்டார் இடத்துக்கு உயர்ந்துவிட்டார் பாகவதர்.

1937&ம் ஆண்டில் இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களுடன் கூடிய படங்கள் வெளியாயின. ராம பக்தரான தியாகராஜரின் பாடல்களுக்காகவே 'தியாகராஜர்' என்ற படம் தயாரானது. அவர் ராமரை புகழ்ந்து தெலுங்கில்தான் பாடல்களை பாடியிருப்பார். அதனால் இதில் அனைத்து பாடல்களும் தெலுங்கிலேயே இடம்பெற்றது.

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil