என்.எஸ்.கே & மதுரம் ஜோடியின் காதல் கதை!

21 April 2010 ·

old is gold cinema kollywood news, old is gold kollywood special story, kollywood cinema of old is gold, tamil old is gold movies, kollywood old is gold music, Indian music, tamil Music, tamil Songs, Indian songs



ராயல் டாக்கீஸ் தயாரித்த படம் Ôசகுந்தலைÕ. எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கினார். முழுக்க இசைக்கு முக்கியத்துவம் கொண்ட படம் என்பதால், ஹீரோயினாக எம்.எஸ்.சுப்புலட்சுமியை தேர்வு செய்தனர். அவருக்கு இணையான ஒரு இசை மேதை ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்குமே என்று ஜி.என்.பாலசுப்ரமணியத்தை அணுகினர். ஆனால், ‘சினிமாவில் நடிக்கும் ஆசையெல்லாம் கிடையாது’ என அவர் மறுத்துவிட்டார். இது பற்றி ராயல் டாக்கீஸ் நிறுவனத்தார் சுப்புலட்சுமியிடம் தெரிவித்தனர். Ôநான் அவரிடம் பேசுகிறேன்Õ என்ற சுப்புலட்சுமி, அதேபோல் பாலசுப்ரமணியத்திடம் பேசினார். தனக்கு இணையான இசைக் கலைஞர் கேட்டதால் அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார். கச்சேரிகளில் கலக்கும் துறையூர் ராஜகோபால சர்மா, இசையமைத்தார். பாபநாசம் சிவன் பாடல்களை எழுதினார். என்.எஸ்.கே., மதுரத்தின் காமெடி இந்தப் படத்தில் சிறப்பாக இருந்தது. அந்த காலத்தில் ஒரு பாடல் 3 நிமிடங்களுக்கு மேல் இருக்காது. இதில் இரு பாடல்கள் தலா 6 நிமிடங்களுக்கு மேல் ஓடும். எனவே இந்த இரு பாடல்களுக்காகவே Ôலாங் பிளே ரெக்கார்ட்Õடை தனியாக வெளியிட்டனர்.

மற்ற கேரக்டர்களை கலாய்க்கும் விதமாக இப்போது சில படங்கள் வெளியாகின்றன. இந்த பார்முலா 1940லேயே வந்திருக்கிறது. Ôநவீன விக்ரமாதித்தன்Õ என்ற அசோகா பிக்சர்ஸ் தயாரித்த படத்தில் மன்னர் விக்ரமாதித்தனை ஏகத்துக்கும் கிண்டலடித்திருந்தனர். அவர் ஏழைகளுக்கு தர்மம் செய்வார். ஆனால், படத்தில் விக்ரமாதித்தன், தர்மமே செய்ய மாட்டார். அதுபோல ஒவ்வொரு விஷயமும் எதிர¢மறையாக, அதே நேரம் காமெடியாக அமைத்தார்கள். இதில் விக்ரமாதித்தனாக என்.எஸ்.கே.வும், அவருக்கு ஜோடியாக மதுரமும் நடித்தார்கள். ஹீரோ, ஹீரோயினாக இருவரும் நடித்த முதல் படமிது. படம் முடிந்த பின் பார்த்தபோது, 10 ஆயிரம் அடிதான் இருந்தது. அதனால் Ôபுத்திமான் பலவான் ஆனான்Õ என்ற 3 ஆயிரம் அடி காமெடி படத்தை இணைத்தனர். இதிலும் என்.எஸ்.கே., மதுரம் நடித்திருந்தனர். Ôநவீன விக்ரமாதித்தன்Õ, சரித்திர படம். இது சமூக படம். என்றாலும் இரண்டுமே காமெடி சப்ஜெக்ட் என்பதால், படம் ஹிட்டானது.

இந்த நேரத்தில்தான் மதுரம் மீதான என்.எஸ்.கேயின் காதல் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தன்னை என்.எஸ்.கே. ஒரு தலையாக காதலிப்பது மதுரத்துக்கு தெரிந்திருந்தது. ஆனால், அவர் அதை காட்டிக்கொள்ளவில்லை. திடீரென ஒரு நாள் என்.எஸ்.கே., மதுரத்திடம் தனது காதலை சொல்லிவிட்டார். மதுரத்துக்கு சம்மதம் என்றாலும் வீட்டில் எதிர்ப்பார்களே என்று பயந்தார். இதை அறிந்த என்.எஸ்.கேயின் சினிமா நண்பர்கள், மதுரத்தை சந்தித்தனர். Ôஅவரை சாதாரண காமெடியன் என நினைக்க வேண்டாம். சொத்து, பணம் என நிறைய உள்ளது. பொழுதுபோக்குக்காக சினிமாவில் நடிக்கிறார்Õ என ஒரு புருடாவை விட்டனர். இதை மதுரம் நம்பிவிட்டார். அப்படியே வீட்டில் சொன்னதும், காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள். தாம் தூமாக இவர்கள் திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களிலேயே என்.எஸ்.கேயிடம் சொத்தெல்லாம் கிடையாது. அவர் பணக்காரரும் கிடையாது என்பதை அறிந்து அதிர்ந்தார் மதுரம்.

என்.எஸ்.கே. எவ்வளவோ சொல்லியும் மதுரம் சமாதானம் அடையவில்லை. என்.எஸ்.கே. பணக்காரர் இல்லை என்பது அவரது பிரச்னை கிடையாது. தன்னை ஏமாற்றி கல்யாணம் செய்திருக்கிறாரே என்றுதான் அவர் கோபப்பட்டார். அந்த கோபத்தில் கணவரை பிரிந்து சென்றுவிட்டார். உடனே என்.எஸ்.கேயின் அதே நண்பர்கள் மதுரத்திடம் சமாதான தூது சென்றனர். Ôஎன்.எஸ்.கே. ரொம்ப நல்லவர். அவர் பணக்காரர் என்று நாங்கள்தானே சொன்னோம். அவர் மீது தவறில்லையேÕ என பல வகையில் பேசிப்பார்த்தனர். ரசிகர்களை சிரிக்க மட்டுமே வைத்து சந்தோஷப்பட்ட தம்பதி, வெகு நாட்கள் சோகத்தில் மூழ்கவில்லை. கடைசியில் மதுரம் சமரசம் ஆகிவிட¢டார். இருவரும் மீண்டும் இணைந்து குடும்ப வாழ்க்கையை தொடர்ந்ததுடன், படங்கள¤லும் பிசியாக நடித்தனர்.

புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தும் அன்றைய பாரதிராஜா என கே.சுப்ரமணியத்தை சொல்லலாம். Ôபக்த சேதாÕ படத்தில் ஜி.சுப்புலட்சுமியை ஹீரோயினாக அறிமுகம் செய்தார். படம் ஹிட்டானது. சுப்புலட்சுமியும் பிரபலமானார். பாடலாசிரியர் பாபநாசம் சிவன் இதில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சிறுவனாக நடித்து வந்த டி.ஆர். மகாலிங்கம் ஹீரோவாக நடித்த படம் Ôபரசுராமர்Õ. அப்போது அவருக்கு வயது 14தான். குறைந்த வயதில் ஹீரோவானவர் என்ற பெருமையும் மகாலிங்கத்துக்கு கிடைத்தது. கே.எல்.வி. வசந்தா ஹீரோயினாக நடித்தார். புராண கதை. நன்றாக ஓடியது.

டி.கே.எஸ். சகோதரர்கள் தயாரித்த படம் Ôபூலோக ரம்பைÕ. பிரபல நாவல் ஒன்றை தழுவி உருவான படமிது. டி.கே. சண்முகம், கே.எல்.வி.வசந்தா, குமாரி ருக்மணி நடித்திருந்தனர். ராஜா, மந்திரி கதை. படம் ஹிட்டானது. மணிமேகலை கேரக்டரில் சுந்தராம்பாள் நடித்த படம் ÔமணிமேகலைÕ. இதில் மணிமேகலைக்கு ஜோடி இல்லை என்பதால்தான் சுந்தராம்பாள் நடித்தார். அவர் படத்தில் பாடிய பாடல்கள் ஹிட்டானது. கொத்த மங்கலம் சீனு ஹீரோவாக நடித்திருந்தார். கதைக்கு சிறிதும் சம்பந்தமே இல்லாமல் புத்தரை பற்றிய ஒரு பாடல் படத்தில் இருந்தது. 'அசோக்குமார்' (1941) படத்திலும் புத்தரை பற்றி பாகவதர் பாடியுள்ளார். தமிழகத்தில் அப்போது புத்த சமயத்தை பின்பற்றுவோர் நிறைய பேர் இருந்த¤ருக்கலாம். அதைத்தான் இந்த பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன.


0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)

Site Sponsors

Live Traffic Map

Tamil Top Blogs

Add-Tamil

Tamil 10 top sites [www.tamil10 .com ]
UlavanTopSite
Paraparapu.com Top Sites