ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் தமிழ் நடிகை!

21 April 2010 ·

old is gold cinema kollywood news, old is gold kollywood special story, kollywood cinema of old is gold, tamil old is gold movies, kollywood old is gold music, Indian music, tamil Music, tamil Songs, Indian songsஅப்போதெல்லாம் ஒரு படத்தில் 50 முதல் 60 பாடல்கள் வரை இடம்பெறும். இந்தப் பாடல்கள் அனைத்தையும் ஹீரோ & ஹீரோயின்களே பாட வேண்டும். எனவே நடிப்புடன் பாடவும் தெரிந்தவர்களுக்கே கதாநாயகன் & கதாநாயகி வேடம் தருவார்கள். அதுமட்டுமல்ல, படப்பிடிப்பு நடக்கும்போதே, அங்கேயே பாடல்களையும் பாட வேண்டும். இதற்காகவே இசைக்கருவிகளையும் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு கொண்டு செல்வார்கள். பாடல்களை பிளேபேக் மெஷின் பதிவு செய்யும். பெரும்பாலும் பாடலை எழுதுபவரே மெட்டும் அமைக்கவேண்டும். இடையில் இடம்பெறும் இசையை மட்டுமே இசையமைப்பாளர் அமைத்துக் கொடுப்பார்.

அதேபோல் ஸ்டூடியோ அரங்குக்கு மேற்கூரை இருக்காது. எனவே சூரிய ஒளி நேரடியாக நடிகர்களின் முகத்தில் விழும். கண்கள் கூசும். எனவே படச்சுருளை டெவலப் செய்து பார்க்கும்போது நடிகர், நடிகையர் கண்களை மூடிக் கொண்டிருப்பது தெரியும். தவிர, உச்சி வெய்யிலில் இசைக்கருவிகளை இசைப்பவர்கள், உஷ்ணம் தாங்காமல் ஸ்ருதியை மாற்றிவிடுவார்கள். இதனால் பாடலை படம் பிடிக்க பல டேக்குகள் தேவைப்படும். இப்படி ஆரம்பக்காலத்தில் தமிழ் சினிமா நிறைய சிரமப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் முதல் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் தியாகராஜ பாகவதர். அவரை சினிமாவுக்கு கொண்டு வந்த பெருமை இயக்குனர் கே. சுப்ரமணியத்துக்கு உரியது. இவர் நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமண்யத்தின் தந்தை. Ôபவளக் கொடிÕ என்ற மேடை நாடகம் அப்போது பிரபலமாக இருந்தது. இதை படமாக்க சுப்ரமணியம் முடிவு செய்தார். இதில் நடித்த பாகவதரையே ஹீரோவாக்கி Ôபவளக்கொடிÕயை அதே பெயரில் 1934ல் ரிலீஸ் செய்தார்.

கிராம்போன் ரெக்கார்டுகளை கொல்கத்தாவிலிருந்து வாங்கி வந்து சென்னையில் தனது ‘சரஸ்வதி ஸ்டோர்’ மூலம் அப்போது விற்று வந்தார் ஏவி. மெய்யப்ப செட்டியார். பின் ‘சரஸ்வதி சவுண்ட் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி, Ôஅல்லி அர்ஜுனாÕ (1935) படத்தை தயாரித்து வெளியிட்டார். 1935ல் மட்டும் 30 தமிழ்ப் படங்கள் திரைக்கு வந்தன. அதில் முக்கியமான படம் Ôநந்தனார்Õ. இப்படத்தை ‘ஹசந்த்தாஸ் கிளாசிக்கல் நிறுவனம்’ சார்பில் மும்பையைச் சேர்ந்த ஹசந்த்தாஸ் தயாரித்தார். இந்தப் படத்தைக் குறித்து தெரிந்து கொள்வதற்கு முன், இன்னொரு விஷயத்தை சுருக்கமாக பார்த்துவிடுவோம்.

அந்தக் காலத்து நாடகக் கலைஞர்களில் பெயரும் புகழும் பெற்றவர்கள் பலர். அவர்களில் முக்கியமானவர் கே.பி. சுந்தராம்பாள். Ôநந்தனார்Õ நாடகத்தை அவர் எந்த இடத்தில் எப்போது நடத்தினாலும் பெரும் கூட்டம் திரண்டு விடும். இவர் மேடையில் நடிக்கும்போது ஓரத்தில் இசை கலைஞர்கள் அமர்ந்து வாத்தியங்களை இசைப்பார்கள். அதில் ஆர்மோனியம் வாசிப்பவராக எஸ்.டி.கிட்டப்பா இருந்தார். சுந்தராம்பாள் பாட, கிட்டப்பா உடன் பாடியபடி வாசிக்க, ரசிகர்கள் மெய்மறந்து போவார்கள். இரவு ஆரம்பிக்கும் நாடகம், அதிகாலை 4 மணிக்குத்தான் முடியும். இந்த இருவரின் கூட்டால் பல்வேறு நாடகங்கள் வெற்றி பெற்றன. இந்த வெற்றி, கிட்டப்பாவும் சுந்தராம்பாளும் வாழ்க்கையிலும் இணைய காரணமாக அமைந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன், மனைவியாக வாழ¢ந்தனர். இந்நிலையில் திடீரென கிட்டப்பா ஒருநாள் இறந்துவிட்டார். அது சுந்தராம்பாளைப் பெரிதும் பாதித்தது. Ôஇனி நாடகங்களிலேயே நடிக்க மாட்டேன், நடத்தவும் மாட்டேன்Õ என ஒதுங்கிக் கொண்டு கோயில்களில் மட்டும் கச்சேரிகளை நடத்தி வந்தார்.

இந்தச் சூழ்நிலையில்தான் அவரது Ôநந்தனார்Õ நாடகத்தை படமாக்க சென்னைக்கு வந்தார் ஹசந்த்தாஸ். அதில் சுந்தராம்பாளை எப்படியும் நடிக்க வைக்க வேண்டும் என்பது அவரது திட்டம். நாடகத்திலேயே நடிக்க முடியாது என ஒதுங்கியவர், சினிமாவுக்கு எப்படி வருவார்? முடியாது என தீர்மானமாக சுந்தராம்பாள் மறுத்துவிட்டார். அப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறைய பொதுக்கூட்டங்கள் நடக்கும். சத்தியமூர்த்தி பங்கேற்கும் கூட்டத்துக்கு போஸ்டர்கள் ஒட்டும்போது, நாடக நடிகைகள் சுந்தராம்பாளும், ராஜலட்சுமியும் பாட்டுப் பாடுவார்கள் என விளம¢பரம் செய்வார்கள். இந்த விஷயம் ஹசந்த்தாஸுக்கு தெரிந்திருந்தது. அதனால் சத்தியமூர்த்தியை சந்தித்து தனது ஆர்வத்தை தெரிவித்ததுடன், அவரிடமிருந்து கைப்பட ஒரு கடிதத்தையும் பெற்றுக் கொண்டு, நேராக சுந்தராம்பாளிடம் வந்தார் ஹசந்த்தாஸ்.

கடிதத்தை சுந்தராம்பாள் பிரித்து படித்தார். அதில் ஹசந்த்தாஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கும்படி சிபாரிசு செய்திருந்தார் சத்தியமூர்த்தி. இதை ஏற்க சுந்தராம்பாள் மறுத்துவிட்டார். Ôநான் விதவை கோலத்தில¢ இருக்கிறேன். சினிமாவில் நடிக்க முடியாதுÕ என்றார். ஹசந்த்தாஸ் விடவில்லை. அவர் தொடர்ந்து வற்புறத்தவே, கோபமான சுந்தராம்பாள், Ô1 லட்சம் ரூபாய் தந்தால் நடிக்கிறேன்Õ என்றார். அந்த காலத்தில் ஒரு படத்தில் நடிக்க நடிகைக்கு ரூ. 8 ஆயிரம் வரைதான் சம்பளம் தருவார்கள். 1 லட்சத்தை யாராலும் தர முடியாது என்பதால்தான் சுந்தராம்பாள் அப்படி கூறினார். ஆனால் ஹசந்த்தாஸோ, அதிர்ச்சியடையாமல், 'ஓ... அதற்கென்ன, இதோ ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை இப்போதே தருகிறேன்' என செக்கை நீட்டினார். சுந்தராம்பாள் திகைத்துப்போனார். ‘1 லட்சம் தந்தால் நடிப்பேன்’ என்று வாக்குபோல சொன்னதற்காகவே நடிக்க சம்மதித்தார். இதன்மூலம் ரூ. 1 லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகை என்ற பெருமையும் சுந்தராம்பாளுக்கு கிடைத்தது.


0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil