இன்பாக்ஸ்

22 April 2010 ·

இன்பாக்ஸ்


'யோகாவைவிட பேட்மிட்டன் விளையாடினாலே உடம்பு ஃபிட்டாக இருக்கும்!' என்று யோகாவுக்கு குட்பை சொல்லிவிட்டார் தீபிகா படுகோன். 'நேரம் கிடைக்கும்போது பேட்மிட்டன் விளையாடுங்கள். ஃபிட்னசுக்காக லட்சக்கணக்கில் பணம் செலவழிப்பதெல்லாம் வேஸ்ட்!' என்பது தீபிகா டிப்ஸ். டபுள்ஸ்ல பார்ட்னர்மாத்திட்டே இருப்பீங்களே!

விஜய் காரைக்குடி நற்பணி மன்றக் கூட்டத்தில் பேசும்போது, 'என் உயிரினும் மேலான தமிழ் மக்களே' என்றே பேச்சைத் துவக்கினார். இனி கலந்துகொள்ளும் அனைத்துக் கூட்டங்களிலும் இதே போலத்தான் பேச்சைத் துவக்கத் திட்டமாம். ஐடியா உபயம்... வேறு யார்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்தான். ஆமா, இனிமே எல்லாம் அப்படித்தான்!

'தை முதல் நாள்தான் தமிழ் வருடப் பிறப்பு. சித்திரை முதல் நாளன்று கோயில்களில் விசேஷ வழிபாடு நடத்தக் கூடாது!' என்று அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்துக் கோயில்களுக்கும் வாய் மொழி உத்தரவு போடச் சொல்லியிருக்கிறார் முதல்வர். அதை அத்தனை கோயில்களும் அப்படியே கடைபிடித்திருக்கின்றன. அப்போ ஜனவரி ஒண்ணாம் தேதி விசேஷங்களுக்குத் தடா கிடையாதா?

'அணி வெற்றி பெற்றால் என்னைக் கட்டியணைக்கும் என் குழந்தைகள், இந்த தோல்விக்குப் பிறகும் என்னை ஆறுதலாகக் கட்டித் தழுவினார்கள். என்னைவிட என் குழந்தைகளுக்கு அணியின் தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டது!' என்று தன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தோல்வி வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார் ஷாரூக். வித்துடுங்க... இல்லன்னா விட்ருங்க!

கேரளா புகழ் பாம்புப் படகுப் போட்டி ஒலிம்பிக்ஸ் வரை சென்றுவிட்டது. '2012-ம் ஆண்டு நடக்க இருக்கும் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னோட்டமாக 2011-ல் தேம்ஸ் நதிக்கரையில் பாம்புப் படகுப் போட்டி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. போட்டிக்குத் தலைமை தாங்க இருப்பது இங்கிலாந்து ராணி எலிசபெத். அப்படியே ஒலிம்பிக்ஸ்லயும் தங்கம் தட்டிருங்க சேட்டன்ஸ்!

'கடும் போட்டியாளர்களுக்கு மத்தியில் புது சேனலை அடையாளப்படுத்த வடக்கத்திய சேனல்கள் பாணியில் ஸ்டிங் ஆபரேஷன் செய்ய முடிவெடுத்திருக்கிறதாம் கேப்டன் டி.வி. நிர்வாகம். ஐடியாவைக் கொடுத்தது மிஸஸ் கேப்டனாம். ரமணா கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்!

'மாவோயிஸ்ட்டுகள் விஷயத்தில் சிதம்பரம் தனது அதிகப்படியான அறிவுத் திமிரைக் காட்டுகிறார்' என்று சிதம்பரத்தைக் கட்டம் கட்டி நாளிதழ் ஒன்றில் காட்டம் காட்டியிருக்கிறார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங். சிதம்பரம் ஆதரவாளர்கள் கொந்தளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பிரச்னையைப் பேசித் தீருங்கப்பா!

கோடை ஸ்பெஷலாக தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மோர்ப் பந்தல் அமைக்க உத்தரவிட்டிருக்கிறார் ரஜினி. தினமும் 200 லிட்டர் பால் உறையூற்றப்பட்டு மோராகத் தயாராகிறது. வந்தேன்டா மோர்க்காரன்!

'முரளி விஜய்க்கு இந்திய அணியில் வாய்ப்புக் கொடுங்கள். அவர் அணியில் இடம்பெற்றால் நான் என் ஓப்பனிங் வாய்ப்பை விட்டுக்கொடுக்கக்கூடத் தயார்!' என்று தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த்திடம் சிபாரிசு செய்திருக்கிறாராம் வீரேந்திர ஷேவாக். இதுக்காகவே 'வீரு' கொண்டு அடிங்க விஜய்!

சென்னையில் போட்டி முடிந்ததும் பேட்டியளித்த டோனி, 'சென்னையில் இரவு நேரங்களில் பைக்கில் ரவுண்ட் அடிக்கும்போது, ரெட் சிக்னலில் ரசிகர்கள் என்னிடம் வந்து ஆசையாக தமிழில் பேசுவார்கள்!' என்று சொல்வதற்குப் பதில் 'ரெட் லைட் ஏரியாவில் நிற்கும்போது' என்று வாய் தவறிச் சொல்லிவிட்டார். அதை சொல்லிச் சொல்லியே அன்று இரவு முழுவதும் டோனியைக் கலாய்த்தாராம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வால் பையன் நிட்னி. கூல் கேப்டன்!

சட்டசபை பட்ஜெட் விவாதத்தின்போது நிதியமைச்சர் அன்பழகன், 'சிலர் புதிய சட்டசபையை 'சர்க்கஸ் கூடாரம்' என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இது எகிப்தின் பிரமிடு!' என்று சொல்லிவிட்டுச் சுற்றும்முற்றும் பார்த்தவர், கரகோஷம் இல்லை என்றதும் கவலை ஆகிவிட்டார். தான் என்ன சொன்னோம் என்பதை உணர்ந்தவர், 'எகிப்தில் இறந்தவர்களுக்குப் பிரமிடு கட்டுவார்கள். தமிழகத்தில் மட்டும்தான் வாழ்பவர்களுக்காகப் பிரமிடு கட்டிய அதிசயம் நடந்திருக்கிறது!' என்று சமாளிஃபிகேஷன் வாசித்தாலும், முதல்வர் சமாதானம் ஆகவில்லையாம்.பேச்சு பேச்சா இருக்கணும்

0 comments:

Related Posts with Thumbnails

ஆகாயம் செய்திகளை தொடர்ந்து Email மூலம் பெறுவதற்கு இங்கே உங்களின் Email id ஐ தாருங்கள்::

மேலும் விபரம் இங்கே

For advertisements contact: aathavan53@gmail.com (Free)
There was an error in this gadget

Site Sponsors

Live Traffic Map

Add-Tamil